இறைவனைப்பற்றியும் பல விமர்சனங்கள். நான் குழந்தையாய் இருக்கும்போது இறைவனை மிகுந்த சிரத்தை பக்தியுடன் வழிபடவேண்டும்.குளித்து திருநீர் பூசி தெய்வீகம் தோன்ற செல்வோம்.இன்று இருப்பதுபோல் ஆலயங்களைச் சுற்றி கடைகள் கடைதெருக்கள் கிடையாது.
குறிப்பாக பழனி மலைக்கு யானைப்பதை ,படிகள் பாதை இரண்டு. மேலே ஏறும்போது யானைப்பதையில் செல்வோம். படிகளில் இறங்கும் போது எளிதாக இருக்கும்.
மலை ஏறுமுன் பாதவிநாயகர் வளம் வருவோம்.வள வந்து ஏறுவது சுலபமாக இருக்கும். இப்பொழுது நடமாடும் வியாபாரிகள் கூட்டமும் ,பக்தர்கள் கூட்டமும் தள்ளு முள்ளுதான்.
நான் சிறுவயதாக இருக்கும் போது என்னிடம் மலை ஏறும்போது ஏறி இறங்கி ஏறுவோம் தெரியுமா?என்பார். எனக்குத் தெரியாது என்றதும் ,பாதவினாயகர் ஏறி இறங்கி நடந்து பின்னர் ஏறவேண்டும் என்றார். அங்கு கருப்பணசாமி ஒன்று உண்டு. அதுவும் சக்திவாய்ந்தது.ஒவ்வொரு மண்டபத்திலும் விநாயகர் இருப்பார்.நடுவில் இடும்பன் மலை. யானைப்பதையில் ஏறும்போது பலர் இடும்பன் கோயிலுக்கு செல்ல முடியாது. வழியில் வள்ளி சுனை . இன்று அதில் பெரும் மாற்றம்;
நாங்கள் மூலஸ்தானம் செல்வதற்குள் நல்ல நறுமணம் வீசும்.அங்கங்கு பண்டாரங்களின் அறைகள் இருக்கும்.அவர்கள் கொடுக்கும் தீர்த்தம்,விபூதி ,இராக்கால சந்தானம் ,பஞ்சாமிர்தம் ,மலை வாழைப்பழ மணம் இன்று கிடையாது. அந்த பண்டாரங்களின் கூட்டமும் கிடையாது. பலர் போலியாக ஏமாற்றத் துவங்கியதும் உண்மையானவர்களைக் கண்டுபிடித்து ,போலிகளை விரட்டி விட்டனர்.
அன்றைய பழனிக்கும் இன்றைய பழனிக்கும் பெரும் வித்தியாசம் .பேருந்து நிலையம் பெரிது. ஆனால் இறங்கி வெளியே வந்ததும் நறுமணம் இல்லை. சிறுநீர் துர் நாற்றம். கோடிக்கணக்கில் வருமானமும் பக்தர் கூட்டமும் இப்பொழுது பெருகிவிட்டது. ஆனால் அதற்கேற்ற சுகாதாரம் கிடையாது.
புனித வையாபுரிக்குளம் சாக்கடைக் குளமாக மாறிவிட்டது.
நடைபாதை முழுவதும் கடைகளின் ஆக்கிரமிப்பு.
புனித தலத்தை மிகப் புனிதமாக வைக்க முருக பக்தர்கள் முயலவேண்டும்.
இன்றைய சூழலில் அதுவே ஆண்டவனுக்கு செலுத்தும் அன்பு காணிக்கை. அதுதான் இறைவனின்
அருள் தரும்.

No comments:
Post a Comment