Monday, July 15, 2013

அன்பே ஆண்டவன் காண்

 அன்பே
 ஆண்டவன் ,
அகிலத்தில் .

 வெறுப்பில் ,வெகுளியில் ,

புறத்தே  இருப்பான்  ஆண்டவனே.

ஓருயிர் அளிக்க ஈரைந்து மாதங்கள் .

ஓருயிர்  அழிக்க ஓரிரண்டு நாழிகை .(கரு)


அழிப்பது  அரை நாழிகை.

 அளிப்பது  அரை நாழிகை. (பணம்)

எளிது.அழிப்பது ;எளிது சொல்வது.

எளிதல்ல  ஆக்கம்.

ஆக்கிய நம்மை,

அன்னை ,தந்தை  என்றாலும் ,

அறிவும் ஆக்கமும் ஊக்கமும்

அளிப்பவன்   யாரெனெ  உணர்வீர்.

அறிவை அளித்தால் ,

அறிவை அளியுங்கள்.

அலைமகள் அளித்தால் ,

ஆஸ்தியை அளியுங்கள்.

அழியும் உலகம் இது.--நீங்கள்

பெற்றதை  மற்றவர்களுக்கு

அளித்து  அகம் மகிழ  ஆண்டவனிடம்

அன்பு காட்டுங்கள்.

அளிக்க அளிக்க அழியாது அன்பும் ,ஆஸ்தியும்.

அளிப்பதில் இன்பம்  மற்றவருக்கு --

பெற்றவர்கள் வாழ்த்த,

பேரின்பம் காணலாமே.

பேரின்பம் என்பது  ஆண்டவன் கருணை.

பெருந்துன்பம் என்பது ஈயாத்  தன்மை.

ஈவதில்   இன்பமே காண் .

அன்பு பெருகும். ஆஸ்தி சுருங்கும்.

வள்ளல்கள் வாழ்கிறார்கள்.

அன்பில் அருள் கிட்டும்.

அளிப்பதில் செல்வம் பெருகும்.

அன்பே ஆண்டவன் காண்




மற்றவர்களை அழிப்பதில்  துன்பமே காண் .










No comments: