புண்ணிய பூமி பாரதத்தில் ,
புகழ் மிக்க மன்னர்கள் ,
ஆன்மீகவாதிகள் ,
கவிஞர்கள்
கலைஞர்கள்
மத குருமார்கள்,
பலர் தோன்றினாலும்
இன்னும் பலர்
நாகரீகம் அடையவில்லை.
முடி ஆட்சி மறைந்து,
அன்னியர்கள் ஆட்சிகள் அழிந்து
அறுபத்தேழு ஆண்டுகள் கழிந்து விட்டன.
இன்றும் குப்பைகள் கொட்டுவதில்
ஒரு ஒழுங்குமுறை வரவில்லை.
கண்ட இடங்களில் எச்சில் துப்புவது மறையவில்லை.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும்
வேலைநிறுத்தங்கள்,சாலை மறியல்,போக்குவரத்து தடை
ஓயவில்லை.சட்டம் -ஒழுங்கு எங்கே என்று தேடும் நிலை.
அரசியல் படுகொலைகள்,மதவாத பயங்கரங்கள்,
இன-ஜாதிப் படுகொலைகள் பெருகிய வண்ணமே உள்ளன.
கல்வியில் உள்ள ஏற்ற தாழ்வுகள் மாறவில்லை.
பொருள் இருந்தால் தரமான கல்வி;பொருள் இல்லை என்றால்
சத்துணவுக் கல்வி என கல்வியிலும் சமதர்மம் இல்லை.
மத சார்பற்ற நாடு என அரசியல் அமைப்புச் சட்டம்.
ஒட்டு டுவங்கிக்காக ,மதங்களைப் பிரித்து ,
மனிதர்களைப் பிரித்து,மன எண்ணங்களில் விஷம் கக்கி
மன மகிழ்ச்சியுடன் ஆட்சிபீடத்தில் அமரும் மக்கள் தலைவர்கள்.
ஆன்மீக வாதிகளும் அரசியல்வாதிகளும்
கோடியில் சுகம் காணும்
பாக்ய சாலிகள்.
பாரதம் பகவானின் அருள் பெற்ற நாடு.
இங்கே அன்னியர்கள் புகுந்து தன இரத்தத்தைத் தந்து
ஈரரக் கலந்து மக்களை ஏமாற்றும் விந்தை.
வாழ்வது இங்கே?சொத்துக்கள் தங்கள் நாட்டிலே.
முகலாயர்காலம் முதல் இன்றுவரை அரசியல் விந்தைகள்.
அன்றும் அந்நியர்களுக்கு ஆதரவு தரும் கூட்டம்,
இன்றும் தொடரும் கதை.
இந்து மதத் தலைவர்கள் படுகொலை ,
அதற்கு இல்லை தலைவர்கள் குரல்.
அரசியல் கொலைகள்.அந்த அந்த கட்சிகளின் கூக்குரல் கள்.
அரசர்கள் செய்த செயல்கள்
இன்று மக்களாட்சியிலும் தொடர்கின்றன.
அன்று நேரடி கொலைகள்.அன்றும் கூலிப்படை.
இன்றும் கூலிப்படை மறைமுகமாக.
அனைத்தும் ஆண்டவன் விளையாட்டு என்றால்,
ஆண்டவன் அளித்த அறிவு,
மனிதப் பண்புகள் அகன்றதேன்.
சுயநலமே இவ்வுலக வாழ்க்கை என்றால்,
புலிகளுக்கும் மனிதர்களுக்கும் என்ன வேறுபாடு.
நீதிநெறி இல்லா மானுடன் வாழ்ந்து பயனென்ன?
புலம்பித் தவிக்கும் கூட்டம் ஒன்று இப்புவியில்
இருப்பதாலே புவி வாழ்கிறதே.
அந்த புண்ணிய ஆத்மாக்களுக்கு வந்தனம்.
அந்த ஆத்மாக்களையும் படைத்த
ஆண்டவன் அருளுக்காக
ஆண்டவனுக்கு வந்தனம்.

No comments:
Post a Comment