இறைவன் யார்?
ஒருவரா?பலரா?
உருவம் உள்ளவரா ?இல்லையா?
இறைவனைக் காண முடியுமா?முடியாதா?
இதற்கு விடைகள் ,விளக்கங்கள்,விவாதங்கள்.சண்டைகள்.
கடவுள் ஒருவரே.உருவமற்றவர்.
ஒளிமயமானவர்.ஜ்யோதி ஸ்வரூபி. உருவமற்றவர்.
கடவுளை உணரமுடியும் .காண முடியாது.
கடவுள் எங்கிருக்கிறார்?
ஒரே பதில் மேலோகத்தில்.
பூலோகம் தவிர ஒரு லோகம் உள்ளது.
கடவுள் மனித உருவத்தில் உதவுவார்.
உதவுபவர் கடவுள்.
உதவுபவருக்கு நன்றி.வணக்கம்.
இந்த நன்றி,வணக்கத்திற்கு மேல் நன்றிகாட்ட மனிதன்
பயன் படுத்துவது அவன் உருவம்.
அவன் உருவம் கல்லால் செதுக்கப்பட்டது.
ஓவியங்களால் வரையப்பட்டது.
இன்று புகைப்படம்.
ஆக ஒரு உருவம் தேவைப்படுகிறது .
இறைவன் இல்லை என்பவர்கள் வீட்டில்
இந்தக் கருத்தை நிலைநாட்டும் தலைவர் படம் இருக்கும்.
அவரது கொள்கைகள்,கோட்பாடுகள் தான் நூல் வடிவில் உள்ளதே.
படம் எதற்கு?என்று அதைக் கழட்டி எறிந்தால்
அது அந்தத் தலைவனுக்கு அவமானம்.
ஒருவரை கவுரவிக்க உருவம் தேவைப்படுகிறது.
ஒரு தலைவரை கவுரவிக்க
முச்சந்தியிலும் ,நாற்சந்தி யிலும் சிலைகள் வைக்கப்படுகின்றன.
இது அரசியல் தலைவர்கள் சிலைகள்.
கிட்டத் தட்ட ஒரு உருவ வழிபாடு.
பிறந்தநாள் மாலை அணிவிக்கிறார்கள்.
தேர்தல் நிற்கச் செல்லும் நாள் மாலை அணிவிக்கிறார்கள்.
தேர்தல் வெற்றி பெற்ற பின் மாலை அணிவிக்கிறார்கள்.
இந்த தலைவர் சிலைகளை அவரின்
கொள்கைகள் ஏற்பவர்கள் மட்டும் வழிபடுவார்கள்.
எதிரணியினர் தங்கள் தலைவரை வழிபடுவர்.
இது உருவ வழிபாட்டில் வேற்றுமை.
இந்த அரசியல் தலைவர்கள் வழிபாட்டில் உள்ள ஒற்றுமை,வேற்றுமை,
புகழ்ச்சி,இகழ்ச்சி ,உடைத்தல்,செருப்புமாலை அணிவித்தல்,
அவமானப்படுத்தல்,இயற்கையால் சிதைந்துபோதல்,
பறவைகளின் எச்சம் எப்படி எல்லாம் நடக்கின்றன.
ஆக இன்று நாம் ஒருவகையில்
தலைவரை சிலை வைத்துவணங்குகிறோம்.
உருவ வழிபாடு பகுத்தறிவுப் பாசறைகளாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
ஆனால் அது இறைவழி பாடல்ல.
இன்றைய சமுதாயத்தை வழிநடத்தியவர்;புரட்சி செய்தவர்,
சீர் திருத்தவாதி.நாட்டிற்கு நல்லது செய்பவர்.
அவரது சிறந்த கொள்கைகள் சமாதி ஆகக் கூடாது.
எதிர்காலத்தில் நினைவில் கொல்லவேண்டும.
பின்பற்றவேண்டும்.
இதையே மாற்றி சிந்தியுங்கள்.
மக்களை நெறிப்படுத்த,நல்ல ஒழுக்கங்கள்,உண்மை,நேர்மை,பரோபகாரம்,தானம்,தர்மம் ,அற்புத சக்தி
தீயது தடுத்தல்,அன்பு,பண்பு,தன்னலம் கருதாநிலை,
தீய வற்றை பின்பற்றாமை,புலால் உண்ணாமை,
மனக்கட்டுப்பாடு,உடல் ஆரோக்கியம்,பிரமச்சரியம்
மன அமைதி,கள்ளுண்ணாமை ,பிறன் மனை நோக்காமை
பேரா ராசைப்படாமை, கோபப்படாமை ,
இதற்காக வழிகாட்டிய ஆன்மீகப்பெரியார்கள்
ஷங்கரர்,ராமானுஜர்,மத்துவாசாரியார், ராகவேந்திரர்,ஷீரடி சாய்பாபா,
புத்தர்,மகாவீரர்,ஏசுநாதர்,நபிகள்நாயகம் போன்றவர்களை வழிபடுவது
சிலைவைப்பது விக்கிரகங்கள் வைப்பது
ஆன்மீக உருவ வழிபாடு.
இவர்கள் மனித நலனுக்காக,ஒற்றுமைக்காக
உயரிய கொள்கைகள் பரப்பியவர்கள்.
பதவிக்காக அல்ல.ராஜ்யத்தை ஆள அல்ல.
அவர்களது உருவழிபாடு காலத்தால் அழியாமல் காக்கப் படுகின்றன.
சுயநலத் தொண்டர்கள் இதை இரண்டாக உடைத்து மனித வேற்றுமை ஏற்படுத்துகிறார்கள்.
இப்படி உருவ வழிபாடு அரசியல் ஆன்மீகத்தில் ஏற்படுகின்றன.
இரண்டுமே மனித சமுதாய நன்மைக்கு.
இரண்டுக்கும் உள்ள வேறு பாடு
ஒன்று நாட்டுக்குநாடு மாறுபடுகின்றன.
ஆன்மீகக் கோட்பாடுகள் மாறுபடுவதில்லை
.,கடமை,
சத்தியம்,நேர்மை,பரோபகாரம்,தியாகம்
வையகம் வாழ்க போன்றவை .
இப்பொழுது சிலர் எங்களுக்கு உருவ வழிபாடு பிடிக்காது
இயற்கையை வழிபடுவோம் என்கின்றனர்.
அதைத்தான் சனாதனதர்மம் நவக்ரஹ வழிபாடகக்
கூறி ஆன்மிகம் என்ற பாதையில் பெரும் அறிவியல் புரட்சி செய்துள்ளது.
உருவ வழிபாடு அவசியமாகிறது.அதைப்படைத்தவன் மனிதன்.
இந்து மதம் இரண்டையும் ஏற்கிறது.
உருவமும் அருவமும் ஆனாய் என்பது இந்து மதம்.
அதில் அனைத்து மதங்களும் சங்கமமாகி.
இந்துமதம் பெருங்கடலாகி
பொறுமை,சகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டி விளங்குகிறது.
அதனால் அது போற்றப்படுவதாக உள்ளது.
இந்து மதம் தூற்று வோரைப்பற்றி எதிர்ப்பலை வீசுவதில்லை.
இதில் பல ஆசாரிய மார்கங்கள் உள்ளன.
துவைதம்,அத்வைதம்,விசிஷ்டாத்வைதம்.
இராமலிங்க அடிகள் அருட்பெருஞ்சோதி,தனிப் பெருங் கருணை.
ஒளிவடிவம்,ஓங்கார ரூபம் ஒலிவடிவம்.
உருவமற்ற சிவலிங்கம்.அதில் தான் உலகத்தின் அடக்கம்.
ஓம் நமசிவாய.
.
3 comments:
அருட்பெருஞ்சோதி...
தனிப் பெருங் கருணை...
விளக்கங்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...
சத்தியம் இதுவென உணர்ந்த நன் மனமிது ஒப்பித்த விளக்கம் உணர்வதை வென்றது ....!!!!!!எங்கும் நிறைந்த பரம் பொருளே துணையாவான்
நன்னெறி உணர்த்தும் நாவிதற்கு .
சிவாய நம ஓம் ....
நன்றி. ஓம் நமசிவாய.கருத்து தெரிவித்தவர்களுக்கு.
Post a Comment