அனுதினமும் அங்கிங்கெனாதபடி எங்கும் ,
தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் ,
இன்னல் தீர்ப்பான் என்ற முடிவு இறுதியாக்கப்பட வேண்டும்.
ஆனால் அலைபாயும் மனம் உறுதியாக இருப்பதில்லை.
அனைத்து மனித மனத்திலும் ஒரு உள்ளுணர்வு தோன்றும்.
ஒரு மகிழ்ச்சி தோன்றும்;
அடிவயிற்றில் ஒரு கலக்கம் தோன்றும்.
ஒருவரைச் சந்திக்கச் செல்லும் போது ,
அவரால் காரியம் நடக்குமா?நடக்காதா?என்ற
உணர்வு அவரைச் சந்திக்கத் தூண்டும் அல்லது தடுக்கும்.
சில செயல்களில் நம்மை யும் அறியாமல் பெரும் வெற்றி கிடைக்கும்.
சில செயல்களில் பெரும் தோல்வி ஏற்படும்.
பெரும் முயற்சியால் தோல்வியும்,முயற்சியே இன்றி வெற்றியும்
எதிர்பாராமல் புதியவர்கள் உதவிசெய்வதும் ,
அதில் பெரும் வெற்றி அடைவதும் ஆண்டவன் செயலாகும்.
கைம்மாறு கருதாமல் நம் வாழ்க்கையில் பலர் உதவுவார்கள்;
நாம் அவர்களுக்கு முற்றிலும் அறிமுகமாகதவர்களாக இருப்போம்.
நம்மில் நம் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவார்கள்.
நம் குறிக்கோளை அடையும் வரை உடன் இருப்பார்கள்.
பின்னர் நாம் அவர்களை நினைத்துப் போற்றிக்கொண்டே இருப்போம்.
சிலர் நம்மிடம் பயன் எதிர்பார்த்து நிபந்தனை இட்டு உதவி செய்வார்கள்.
சிலர் கையூட்டு வழங்கி வெற்றி பெற கரம் கொடுப்பார்கள் .
எப்படியோ ஒரு உதவிக்கரம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
மருத்துவமனை செல்லும்போது திடீரென்று ஒருவர் இந்த மருத்துவரிடம் செல்வதைவிட
அந்த மருத்துவரிடம் சென்றால் நல்லது என்பர். அதில் மிகப்பலன் இருக்கும்.
சிலர் வழிகாட்டுதல் தவறாகவும் இருக்கும்.
நண்பர்கள் பலவிதத்திலும் உதவுவார்கள்.
இது அனைவருக்கும் கிட்டுமா? என்றால் கேள்விக்குறிதான்.
நன்மையே செய்யும் உற்றார் ,உறவினர்கள் ,நண்பர்கள்,எதிர்பாரா அறிமுகமில்லாதவர்கள் உதவி
வெற்றி,பாராட்டு ,புகழ் ,மன நிறைவு முற்றிலும் இறைவனை சரணடைந்தவர்களுக்கு
ஒதுங்கி இருந்தாலும் கிட்டும்.
ஆனால் மனம் ஒன்றுபட்டு மாற்று சிந்தனை இன்றி ,
லௌகீக பற்றின்றி ஆண்டவன் மேல் அன்பு,சிரத்தை ,பக்தி காட்டவேண்டும்.
அது குறைந்த பட்சம் நமது வட்டத்தில் ஒரு அங்கீகாரத்தைக் கொடுக்கும்.
இவன் என்ன செய்யப்போகின்றான் என்று அசடு வழிய நாம் இருந்தாலும்
நமது வட்டத்தில் ஒரு மதிப்பு உண்டாகும்.
அன்பே ஆண்டவன். அதில் சஞ்சலம் கூடாது.

3 comments:
வணக்கம் ஐயா ...
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வணக்கம் ஐயா .தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்து
வைத்துள்ளேன் .முடிந்தால் வருகை தாருங்கள் .மிக்க நன்றி !
http://blogintamil.blogspot.ch/2013/07/blog-post_27.html
அருமை ஐயா.
Post a Comment