Tuesday, July 30, 2013

இதையெல்லாம் சகித்து வாழும் இந்துமதம்.

 இறை வழிபாடு பற்றிய பல்வேறு கருத்துக்கள்,நம்பிக்கை ,அவநம்பிக்கை ,வுருவ அருவ வழிபாடுஎன  நமது  ஆன்மீக பூமி பாரதத்தில் இருப்பது போல் வேறு எங்கும் கிடையாது.காரணம் ,இங்கு வேலை இன்மை. மற்றொன்று சுலபமாக பொருளீட்டலாம் என்ற எண்ணம்.

விவேக்கின் பாவாடை சாமியார் , நாசர் சாமியார் ஆகி பணக்காரர் ஆவது,கோயில்  தேங்காய் உடைப்பு,
பராசக்தி வசனங்கள், இறைவன் படங்களில் செருப்படி,ஆலயங்களில் இறை எதிர்ப்பு வாசகங்கள்,
கடவுள் இல்லை,இல்லை இல்லவே இல்லை என்று ஆலயங்கள் முன் எழுதுவது,ஆலய மதில் சுவர் சுற்றி சிறுநீர் கழிப்பது,ஆலயங்களில் கழிப்பிடம் கட்ட எதிர்ப்பு, ஆலய அர்ச்சகர்கள் அவமதிப்பு,

அத்தனையயும் சகிக்கும்  ஒரே மதம் இந்துமதம்.

மற்ற மதங்களின் தேவாலயங்களில்  இருக்கும் தூய்மை,வழி பாட்டு நேரத்தில்   அமைதி,ஒழுக்கம்,
தூய்மை  இந்து கோயில்களில் உள்ளதா?

தேர்வு எண்கள் எழுதுவது, காதல் வசனம் எழுதுவது,எழுமலைவேங்கடேசா  ..பச்சைக்கொடி காட்டுராஜா எனப் பாடுவது,பக்தியுள்ள விநாயகரை நவீன கால விநாயகராக கிரிக்கட் பிள்ளையார்,கம்ப்யுடர் பிள்ளையார் என்று மாற்றி ரசிப்பது.

இதையெல்லாம் சகித்து வாழும் இந்துமதம்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த காலத்தில், வேறு வழியில்லை... சகித்துக் கொள்ள வேண்டும்...

Ranjani Narayanan said...

உங்களது வருத்தம் ரொம்பவும் நியாயம். நாமும் பார்த்துக் கொண்டு கையாலாகாமல் உட்கார்ந்திருக்கிறோமே!