Wednesday, July 10, 2013

மன சாட்சி வெல்கிறது.

இறைவன்  பலகோடி ஜீவராசிகளைப் படைத்துள்ளான்.

அதில் வலிமை உள்ள ஜீவராசிகளையும் அடக்கி ஆளும் திறமை

மனிதனுக்கே  உண்டு.

மனிதனைத்தவிர  மற்ற ஜீவராசிகளும்  தன்னை பாதுகாத்துக் கொள்ள  சக்தியும் அறிவும் பெற்றுள்ளன. ஆனால் மனிதன் தன்னை பாதுகாத்துக்கொள்ள பல சாதனங்களைக் கண்டுபிடித்துள்ளான்.

சிங்கமோ ,புலியோ ,கரடியோ, சிறுத்தையோ  தன்னைப் பாதுகாத்துக்கொள்ள

துப்பாக்கி,தலைக் கவசம், வெடிகுண்டுகள் வைத்துக்கொள்ளும் அறிவு பெற்றிருக்கவில்லை.

அறிவில் உயர்ந்த மனிதன்  ஏன்  பல இன்னல்களை  எதிர்கொள்ள நேரிடுகிறது?

அனைத்தையும் வெல்லும் திறன் கொண்ட மனிதனுக்கு ,

  மனத்தை மட்டும் கட்டுப்படுத்த முடியா நிலை
.
 அதன் விளைவு,

 பேராசை,பெண்ணாசை,பொன்னாசை ,பொறாமை .

அவன் மனத்தை ஒருமுகப் படுத்தினாலும் ,தீய எண்ணங்கள் ,பழக்கங்களுக்கு

அடிமையாகும் குணம் எங்கிருந்து வருகிறது,

ஒவ்வொரு மனிதனும் தன்னை குணஷீலனாக ,

சத்தியவானாக ,

நீதிமானாக

வெளிச்சம் காட்டவே விரும்புகிறான்.

 பலர் முன்னிலையில் தன்னை ஒரு

அயோக்யன்,கொலை ,கொள்ளை அடிப்பவன் ,

மோசக்காரன் ,ஊழல் வாதி

என்று கூறும் மனோ திடம் ஒருவருக்கும் இல்லை.

குறிப்பாக அநீதி செய்பவனின் தவறுகளைச்

 சுட்டி காட்டுபவன்

 பலருக்கு

விரோதியாகிறான்.

 அது ஏன் ?

ஏன் ? என்ற வினா ?

இறைவனின் மேல் பற்று உள்ளவர்கள்

மதங்கள் ,ஜாதி ,கடவுளின் நாமங்கள்

பெயரால் மனிதர்களுக்குள்

வேற்றுமை,வெறுப்பு ,உயர்வு ,தாழ்வுகளை

ஏற்படுத்தி  உலகில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்றனர்.

இதற்கு ஆண்டவன் அளித்த அறிவுத்திறனே காரணமாகிறது.

அறிவுச் செல்வத்தை விட   தனம் அதாவது  பொருட்செல்வம்  பெற்ற மனிதன்

உலகியல் இன்பங்களால்  பேராசை அடைகிறான்.

இந்த செல்வங்கள்

/அசைய அசையும் சொத்துக்கள் மேல் உள்ள ஆசைகள் அதிகமானவர்கள்

அடிமனதில் பெரும் உருவாக்குகின்றன.

தாக்கத்தை ஏற்படுத்தி

உலகில் அமைதியின்மை ஏற்பட வழி  வகுக்கிறது.

புத்தர்,மகாவீரர்,சங்கரர். ராமானுஜர்  போன்றோர் ஆசை அகற்றி ஆண்டவன்

மேல்  பற்றுவை என்றனர்.

அந்த இறைப்பற்று இன்று பல ஆஷ்ரமங்களையும் ,

ஆலயங்களையும் உருவாக்கி  அங்கும்  ஊழல்.

 செல்வம் கொழிக்கும் இடங்கள். ஊழலின்றி இருக்குமா/?

ஆனால் இதைத்  தெரிந்தும் ,அறிந்தும் ,புரிந்தும் இறைவன் நாமாக்கள்

எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ ,அங்கு சென்றால் மன அமைதி.மன

திருப்தி.ஒரு மகிழ்ச்சி.நமக்கு ஆண்டவன் அருள் உண்டு என்ற பூர்ண

விசுவாசம்.

நம் உள்ளம் உண்மையானது. நமக்கு அளித்த

செல்வம்,தொழில்,வேலைவாய்ப்பு .பதவி வுயர்வு  அனைத்திற்கும்

மூலம் ஆண்டவனே  என்ற எண்ணம் பெரும்பாலனவர்கள் மனதில்

எழுவதன் மூலம் அறம்  வளர்கிறது.

ஊழல் குறைக்கிறது.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

  என்ற உணர்வு மேலோங்குகிறது.

மன சாட்சி  வெல்கிறது.

 அங்குதான் ஆண்டவன் அன்பே உருவமாக காட்சி அளிக்கிறான்.



1 comment:

இராய செல்லப்பா said...

நல்ல கருத்து தான். ஆனால் கேட்பவர்கள் நமக்கு வயசாகிவிட்டது என்று தெரிந்துகொண்டுவிடுவார்களே! –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.