இறைவன் வேறு ;மதம் வேறு; மத பேதம் வேறு;
இறைவன் உருவமும் அருவமும் ஆனவன்.
சனாதன தர்மத்தில் தமிழ் பக்தி இலக்கியங்களில்
அருவம் உருவம் பற்றி ஆழ்ந்த கருத்துகள் ,கோட்பாடுகள்
விளக்கப்பட்டுள்ளன.
சிவ லிங்கம் உருவமற்றது. ஆதி சிவன். இந்த உருவமற்ற
வழிபாடு தான் பின்னர் உருவ வழிபாடுகளாக மாறி உள்ளது.
மத என்றல் கருத்து. மத பேதம் என்றால் கருத்து வேறுபாடு.
மதம் என்றால் ஆணவம். இந்த கருத்து வேறு பாட்டால்
உருவானது மதம்.
மதம் என்பது இறை தூதர்களால் ,மனிதர்களை நெறிப்படுத்த
அமைக்கப்பட்டது.
கருத்துக்கள் ,எண்ணங்கள்,சிந்தனைகள் காலத்திற்கேற்ப மாறுபடுபவை.
இயற்கையே மாறிக்கொண்டுதானே இருக்கின்றன.
நான் குழந்தையாக இருந்தபோது இருந்த நீரின் சுவை இப்பொழுது இல்லை.
பழங்களின் மனமும் சுவையும் மாறி உள்ளன.
,வெண்பா,நாலடி குறள் என்பதெல்லாம் மாறி ஹைக்கூ கவிதைகள் வெளிவந்துவிட்டன.
அதிகமாக எழுதி கதை கரு புரியவைக்காமல்,ஓரிரு வரிகளிலே சொல்லி
புரியும் அளவுக்கு அறிவுத் திறன் இளைஞர்களிடம் வளர்ந்து உள்ளது.
காலை வணக்கம் என்பது ஆங்கிலேயர் வருகையால் வந்தது.தமிழில் ஆரம்ப காலங்களில் காலை வணக்கம் .மாலைவணக்கம் ,மதிய வணக்கம் என்றெல்லாம் கூறுவது நமது கலாசாரம் மாறுவது போல் தோன்றினாலும்
இப்பொழுது காலை வணக்கம் ,இரவு வணக்கம் என்று பழகிவிட்டது.
உணவுவகைகளில் பெரும் மற்றம்.. நான் கொண்டுவா என்பது எதோ ஆணவத்தைக் கொண்டுவா என்பது போல் உள்ளது.
வறுத்த சாதம் fried rice ,pizza bel poori,paani poori. கர்ட் ரைஸ் எப்படி மாறிவிட்டோம்.
இப்படி எல்லாமே மாறும் போது கருத்து வேறுபாடு தோன்றி மதம் பிடித்து
அறநெறி காட்டும் மதங்கள் பல தோன்றின.
இன்னும் எளிய விளக்கம்; அண்ணாதுரை பேரறிஞர் . அவர் தோற்றுவித்த தி.மு.க . திமுக வின் மூலம் தி.க . தி.க.வின் மூலம் நீதிக் கட்சி. justice party. இன்று அண்ணாவின் கொள்கைகள் ஏற்று கருத்துவேறுபாட்டால் பிரிந்தது--
அ .தி.மு.க. ,ம.தி.மு.க.,தி. தே தி .மு.க.. ஒரே தலைவர் அண்ணா.ஆனால் இரு அண்ணாவின் நாமம் என்று சொல்லி கலைஞர் புகழோ ,அம்மாவின் புகழோ
பேசப்படுகிறது. இருவரையும் இகழ்ந்து பல கட்சிகள் தோன்றி தாயக மறுமலர்ச்சி தோன்றி மறைந்தும் வாழ்ந்தும் வாழாமலும் இருக்கின்றன.
இதற்கெல்லாம் மூலமாக பெரியார் ,அண்ணா வாழ்ந்தனர்.
இவ்வாறே மத பேதங்கள் ஏற்பட்டன. இந்த ஆணவம்,ஒருவரை நேர்மை அற்றவர் என்று ஒருமுறை தூற்றுகிறது; அதே வாய் அவர்களைப் போற்றுகிறது.
இந்த எளிய அடிப்படை அரசியல்.
மதங்களும் அப்படியே ( மதபேதத்தால்) கருத்து வேறுபாட்டால் தோன்றி ,
வேறு படுத்தி பக்தர்களின் மனதில் வெறுப்பு,கொலைவெறி ஏற்படுத்தி
மடாலயங்களில் வெள்ளியிலும் தங்கத்திலும் ,தங்க சிம்மாசனத்திலும் அமர்ந்து மயக்கும் மொழிகளால் ,சித்துவிளையாட்டுகளால் கோடிக்கணக்கில் சேர்த்து சுக போக வாழ்க்கை வாழ்கிறார்கள்.
அவர்களுக்கு வேண்டியது காணிக்கை;அதற்காக அவர்கள் காட்டும் வேடிக்கை ஒரு சிறந்த இயக்கத்தில் சிறப்பாக காட்டப்படும் திரைப்படக் காட்சி போன்றது.
அதற்குத்தான் சித்தர்கள் பரதேசிகளாக ,பித்தர்காளாக வாழ்ந்து பாட்டுக்கள் பாடினர்
நட்ட கல்லும் பேசுமோ? என்று.
இந்த ஆடம்பரங்கள் தவிர்த்து ஆன்பும் சிரத்தையும் பக்தியும் தான் இறைப்பற்று.
இறைவன் வேறு. மக்களை நெறிப்படுத்தும் மதங்கள் வேறு. ஒன்று மெய்ஞானம் ; மற்றொன்று நீதி போதனை.
மெய்ஞானம் இறைவனை நேராகக் காண்பது.மதம் என்ற நீதி போதனை வழிகாட்டுவது.
வழிகாட்டி GUIDE தன் வருமானத்தில் குறியாக இருப்பான்.
தன் குறிக்கோள் வழியில் செல்பவர்கள் கவனமாக செல்லவேண்டும்.
அதற்குத்தான்
அங்குஇங்கு எனாதபடி ஆனந்த பூர்த்தியாகி அருளோடு எங்கும் இருப்பவன் ஆண்டவன் என்று குமரகுருபரர் பாடுகிறார்.
அன்பே ஆண்டவன். பக்தி நெறி காட்டும் மதாசாரியார்களிடம் கவனம் தேவை.
அவர்கள் மடத்தின் அதிபதிகள். மடாதிபதிகள். அதிபதி என்றால் செல்வம்.
அங்கு செல்வம் சேரும். செல்வோருக்கு இறை அருள் கிட்டுமா?
சிந்திப்பீர். கலியுகத்தில் மெய்யன்பு காட்டுங்கள் . இறைவன் அருள் கிட்டும்.
அன்பே ஆண்டவன்

1 comment:
மதம் என்றால் ஆணவம் உட்பட அனைத்து கருத்துகளும் உணர வேண்டியவை... வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...
Post a Comment