இறைவன் இந்த உலகை படைத்துள்ளான்.
அவனது படைப்பு விசித்திரம்.
பூசணிக்காய் ,ஆலமரத்துப் பழம் இரண்டையும் ஒப்பிட்டுக்
கூறும் கதை அனைவரும் அறிந்ததே.
மரத்தின் மேல் இருந்து பூசணிக்காய் விழுவதும் .
ஆலம் பழம் விழுவதும் எப்படி ?
அவ்வாறே ஒவ்வொன்றையும் படைத்த ஆண்டவன்,
கொசுக்கள்,ஈக்கள், மூட்டைப்பூச்சிகள் போன்ற சிறு ஜீவன்களால்
மனிதனை ஆட்டிப்படைப்பது விந்தையிலும் விந்தை.
அதில் மூட்டைப்பூச்சி உள்ளதே அது பக்கத்து வீட்டில் தேடினாலும்
கிடைக்காது. ஒரு வீட்டில் புகுந்தால் பெருகிக்கொண்டே இருக்கும்.
இது ஒரு அதிசய மாக இருக்கும்.
அவ்வாறே கொசு ஒரு வீட்டில் சிலரைக் கடிக்காது.
சிலரை கடிக்கும்.
கொசு கடித்த அனைவருக்கும் நோய்கள் வராது.
ஆனால் பாதிக்கப்பட்டவரைக் கடித்து மற்றவர்கள் இரத்தம்
உறிஞ்சினால் பரவும்.
இதுவும் ஒரு விசித்திர நிகழ்வே.
இந்த கொசுக்களை அளிக்க ,மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க
மருந்து கண்டுபிடித்த மூளையின் படைப்பு.
நோய்கள் மனிதனுக்கு ஒரு எச்சரிக்கை.
அதிலிருந்து தப்ப உரிய நேரத்தில் உரிய மருத்துவர் கிடைப்பது
வரப்பிரசாதம்.
பல கோடீஸ்வரர்களின் நோய் தீர்க்கப்படாமல் அவஸ்தைப்
பட்டுக்கொண்டே இருப்பார்கள் .
அடிக்கடி மருத்துவர்களின் ஆலோசனை பெறுபவர்களும்
அல்பாயுசுடன் இறந்துவிடுவர்.
இந்த சமுதாய நிகழ்வுகள் மட்டும் நடை பெறவில்லை என்றால்
நீதி,நியாயம் ,தானம் ,தர்மம் ,இரக்கம் ,கடமை உணர்வு எதுவும்
இருக்காது.
இந்நிலையில் ஆண்டவனின் சம தர்மம், ஆண்டவனுக்கு முன் யாவரும்
சமம்.
அரசன் அன்று, கொள்வான் அரசன், தெய்வம் நின்று கொல்லும் .
ள் ,ல் எழுத்து மாற்றம் எப்படி ஏற்பட்டது. அதன் பொருள் எப்படி விபரீதம்
இதை எல்லாம் ஒரு அறிவின் ஆற்றலா?
அந்த அறிவு ஏன் அனைவருக்கும் சமமானதாக இல்லை?
இதை எந்த அறிவியல் மேதையாலும் கூற முடியாது.
குற்றம் புரியும் அறிவுள்ளவன் மரணம் வரை தப்பிவிடும் ஆற்றல் சிலருக்கு உண்டு.
அவன் வாரிசுகள் படும் அவஸ்தை கொள்வான்//கொ ல் வான் என்ற முறையில் தான்.
ஹிந்தியில் सबहीं नचावत राम गोसाई எல்லோரையும் ஆண்டவன் ஆட்டுவிக்கிறான் என்ற ஒரு நாவல்.
அதில் ஒரு கொலைக் குற்றவாளி காவலில் இருந்து தப்பிக்கிறான்.
அவனுக்கு கிராமத்துப்பெண் அடைக்கலம் தருகிறாள்.
அவன் திருந்தி ,அவன் மகன் நாட்டின் உள்துறை அமைச்சராகிறான்.
அவன் மூலம் குற்றங்கள் , அவன் மரணத்திற்குப்பின் அரச மரியாதை உடன்
அடக்கம் செய்யப்படுகிறான். இதெல்லாம் ஆட்டிவைப்பவன் இறைவனே என்ற நாவல்.
நமக்குள் இருக்கும் திறமை,அறிவு ,சொல்வன்மை
அனைத்தும் எப்படி வந்தது ?
நம்முடன் படித்த நம்மைவிட அறிவாளி என்று நினைத்த தோழர்கள்
எப்படி உள்ளனர்.?
சிலரின் முகப்பொலிவு அனைவரையும் கவரும். சிலரைப்பர்த்த்தாலே வெறுப்பு தோன்றும், பலவாய்ப்புகள் கிடைத்தும் கை நழுவிவிடும்.
இதெல்லாம் ஆழ்ந்து சிந்தித்தால் ,
நமக்குமேல் ஒருவன் உள்ளான்.
அவன் நம்மை ஆட்டிபடைக்கின்றான்.
அவன் மேல் அன்பு வைத்தால் இம்மையில் நன்மை உண்டாகும்.
அவனின்றி அணுவும் அசையாது.
No comments:
Post a Comment