Thursday, August 1, 2013

இன்று நடை பயிற்சி . அன்று ஆலய வழிபாடு.



சனாதன  தர்மம்  என்பது அறிவியலுடன் ஆரோக்யத்துடன் 
இயற்கையான மருத்துவம் ,ஈகை,எண்ணங்களில் ஏற்றம் 
ஐக்ய உணர்வு ஒப்பில்லா வாழ்க்கை நெறி  கொண்டது .

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது  ஆரோக்யத்திற்கே .

ஆண்டவன் தூணிலும் துரும்பிலும் இருப்பான் .
அவன் இல்லாத இடம் எது.
உள்ளத்தில் உள்ளான் .
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ளான்.
இதை கபீர் தாசர்  எளிய மொழியில் விளக்குகிறார்.

तेरा साई तुझमें ज्यों पुहपन में वास. 
कस्तूरी का मृग ज्यों फिर-फिर ढूंढें घास. 
உன் கடவுள் உனக்குள்ளே ,பூவில் மணம்  போலே.
கஸ்தூரி மானுக்குள் கஸ்தூரி ,அது தேடுவதோ தன்  மணத்தை  புல்லில்.

அறியாத மான் போல் தேடாதே, உனக்குள் இருக்கும் கடவுளைத் தெரிந்து கொள் என்கிறார்.

இந்த விளக்கத்திற்குப் பின் ஆலயம் செல்ல வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது.

ஆம். செல்ல வேண்டும். எதற்காக. உடல் ஆரோக்யத்திற்காக.

மருத்துவமனை செல்லாமல் இருப்பதற்காக.

மனோ தத்துவ மருத்துவரிடம் செல்லாமல் இருப்பதற்காக.

மனத் தூய்மைக்காக.

மூளை வளர்ச்சிக்காக.

ஆனால் பிரசாதம் வாங்கசென்று வரக்கூடாது.

ஆலயம் புராதனமாக /ஆகம விதிப்படி இருக்க வேண்டும்.
விநாயகருக்கு தோப்புக்கரணம் போட வேண்டும்.
உள் ,வெளி ,பிரகாரம் சுற்ற வேண்டும்.
நவக்ரஹம் ஒன்பது சுற்று சுற்றவேண்டும்.
கொடிக்கம்பத்துக்கு முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

அருகம்புல்  மென்று சாப்பிடவேண்டும்.
வில்வ இலை சாப்பிடவேண்டும்.
துளசி  சாப்பிட வேண்டும்.

இவைகளைப்பற்றி  நம் முன்னோர்கள் விரிவாக அறிவியல் முறையில் விளக்கவில்லை.
 இதை ஒரு தெய்வீக நம்பிக்கை யாக வளர்த்து  வந் தனர்.

நமது  இறைவன்  யார்? என்ற ரீதியில்   நகர் புறத் தெய்வங்கள் சிவன்,விஷ்ணு,ராமர்,கிருஷ்ணர்,அம்பிகை.

முனீஸ்வரன்,மாரியம்மாள்,சப்த கன்னிமார்கள்,கருப்பண  சாமி,ஐயனார்,காளி  என்று கிராமதேவதைகள். அதற்கேற்ற  வழிபாட்டு முறைகள். உழைப்புக்கேற்ற  வழிபாட்டு முறைகள்.படையல்.

ஏகாதசி விரதம்,அமாவாசை புலால் உண்ணாமை,.

அனைத்துமே ஆரோக்கிய வழிகாட்டி.

ஆனால் நம்மில் எத்தனை பேர் இதைக் கடை பிடிக்கிறோம்.

ஆலயம் செல்கிறோம். சிலருக்கு இரு கரம் கூப்பி வழிபடுதலே நாணம்.

சாஷ்டாங்க நமஸ்காரம் பலர் செய்வதே இல்லை.

தியானம் ஐந்து நிமிடம் அமர்வதில்லை.

 கால மாற்றத்தால் அலுவலகப் பணிகள்.இரவு நேரப் பணிகள்.

வாழ்க்கை முறை மாறிவிட்டது.
அனைத்திலும் அவசரம்.
மக்கள் பெருக்கத்தால் பக்தர்கள் கூட்டம்.
கற்ப கிரகம்  நிற்க முடிவதில்லை.
அர்ச்சனை  செய்ய முடிவதில்லை.
மணிக்கணக்கில் நின்று  மூலஸ்தானம் செல்லும் போது
விரட்டும் காவலர்கள்.
இறைவனைக் கண்குளிர பார்க்க வில்லை என்ற மன வருத்தம்.
இருப்பினும்  நானும் ஆலயம் சென்று வந்தேன்,ஆண்டவன் அருள் கிட்டும் என்ற நம்பிக்கை.


ஆரோக்ய வாழ்விற்கு பயம் காட்டி வழிபாட்டுமுறைகளை வலியுருத்தி வந்தனர். இதில் உழைக்கா  வர்க்கம்  உறுதியாக இருந்தது.உழைக்கும் வர்க்கம் உடல் உறுதியுடன் இருந்தது.அறிவு ஜீவிகள் இன்று
நடை பயிற்சி . அன்று ஆலய வழிபாடு.












அதற்கான  பல காரணங்கள். அவையே இந்துமத  வலுவற்றுப் போனதற்கானவை.



No comments: