கோபியர் கொஞ்சும் கிருஷ்ணன் பிறந்தநாள்.
அலைபாயுதே கண்ணா என்று வரன் பார்க்கவந்த நாள் பாடும் மங்கைகள்.
ஆண்டாள்.மீராவின் நாயகன்,
கருமைநிறக்கண்ணன் ,
கலக்கம் தீர்ப்பவன்,
துஷ்ட சம்ஹாரன்,
சரணாகத வத்சலன்.
அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டத்தில்
ஹரே ராமா ,ஹரே கிருஷ்ணா என்று பரவச ஒலி எழுப்ப
தெருவுலா வந்தவன்.
பார்த்தசாரதி,
ஏழை பங்காளன்,
நவநீத சோரன்.
பாமா -ருக்மணிப்ப்ரியன்
தேவகி மைந்தன்,யசோதா வளர்ப்புமகன்.
விஸ்வரூபன்,வாமனரூபன்.
அவன் பிறந்தநாள்
அவன் சரணடைந்து அவன் க்ருபா கடாக்ஷம் பெற பிரார்த்திப்போம்.
தீயென ஒழியட்டும். நல்லன வளரட்டும்.
கடமையைச் செய்வோம்.கண்ணன் பலன் தருவான்.
ஹரே கிருஷ்ணா. ஹரே கிருஷ்ணா . ஹரே கிருஷ்ணா .
ஹரே ஹரே.
ஓம் சாந்தி! சாந்தி !சாந்திஹி!
No comments:
Post a Comment