மனிதர்கள் இறைவனைப்படைத்தனர் என்கின்றனர்.
மனிதனைப்ப்டைத்தவன் யார்?என்ற வினா எழும்போது
விடை கிடைப்பது அரிதா ,எளிதா?
இயற்கையின் ஒவ்வொரு படைப்பையும் ,அதன் வாழ்க்கைமுறையையும்
முடிவையும் நாம் பார்க்கும் போது மனிதனின் வியப்பு ,அதன் விளைவாக
இயற்கையை வழிபட ஆரம்பித்தது என்ற சிந்தனை அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வரலாற்றைப் புறட்டும் போது பழைய ,புதிய கற்காலம் பற்றி படிக்கிறோம்.
அந்த மக்கள் விலங்குகள்போல வாழ்ந்தனர் என்று அறிகிறோம்.
விலங்குகள் போன்று வாழ்ந்த மனிதர்கள்,அறிவைப்பெற்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய காலம் எப்படி வந்தது.
அந்த மக்கள் ஆரம்ப காலத்தில் சத்தியம் /வாய்மை ஒன்றே தானே அறிந்திருக்க முடியும்.எப்படி பொய் என்ற உணர்வு வந்தது.
மனிதனின் நிற வேறுபாட்டாலா? உருவ மாறுபாட்டாலா?ரூப/அரூப
மாறு பாட்டாலா ? நாட்டிற்கு நாடு வேறு படும் தட்பவெட்ப நிலையாலா?
புரியாத ஒரு மந்தணம்.
அடுத்து மொழிகள்.எத்தனை ?அவைகளின் வளர்ச்சி. எப்படி மொழிகள் உண்டானது என்பதில் divine theory முதலில் வருகிறது. தெய்வக் கோட்பாடு.
இறைவனுக்கு முன் அனைவரும் சமம் .இறைவனுக்கு என்று ஒருமொழி
இருக்கவேண்டும். அப்படி எனில் அதை அனைவரும் அறிந்திருக்கவேண்டும்.
அப்படி இறைவனை வழிபட உலகம் முழுவதும் ஒரே மொழி கிடையாது.
இறைவனைப் பற்றி அறிய ஒரே நூல் கிடையாது,
இறைவனைப் பற்றிய ஒரே மதம் கிடையாது.
சில நாடுகளில் இறைவனைப்பற்றிய உணர்வே இல்லை.
எத்தனையோ ஆதிவாசிகள் இன்னும் விலங்குகளைப்போல வாழ்ந்து வருகின்ற செய்திகளும் அவ்வப்போது செய்தித்தாள்கள் மூலம் அறிகிறோம்.
ஆயுட்காலம் விலங்குகளுக்கு விலங்கு மாறுபடுகிறது.
மனிதர்களின் ஆயுட்காலம் ௧௦௦ ஆண்டுகள். அதிசயமாக ௧௨௦-௧௩௦ ஆண்டுகள் வாழ்கின்றனர்.
இந்த நிர்ணயித்த அதிகபட்ச ஆண்டுகள். இதில் அல்ப ஆயுளில் நோய்வாய்ப்பட்டோ, விபத்திலோ,தற்கொலை ,கொலை செய்யப்பட்டோ இறப்பவர்களும் உள்ளனர்.
பிறகு அறிவுத்திறனில் எவ்வளவு வேறுபாடு?
சமுதாய அமைப்பில் ,நிர்வாக அமைப்பில்,ஒருவரை ஒருவர் அறிந்து வணக்கம் சொல்லும் முறையில் எவ்வளவு வேறுபாடு.
வேறுபாடு.வேறுபாடு ,வேறுபாடு? எதில்தான் இல்லை.
உணவு,உடைகளில் வேறுபாடு.
இத்தனை வேறுபாடுகள் காணப்பட்டாலும் மனிதனை மனிதனாக்கி
மனித நேயத்துடன் வாழ வைப்பது மகிழ்ச்சியும், சோகமும்.
மகிழ்ச்சியில் ஒன்றுபடவில்லை. துன்பத்திலும் ஒன்றுபடவில்லை.
ஒருவர் மற்றொருவரின் வீழ்ச்சியில்,துன்பத்தில் மகிழ்ச்சி அடைகின்றனர்.
இதையும் கடந்து மனித இனத்தை இணைப்பது எது.?
இயற்கை சீற்றங்களும்,எதிர்பாராத விபத்துக்களும்.
அதற்குக் காரணம் மனித நேயம்.
மிருகங்கள் இறக்கின்றன. நமக்கு வருத்தம் ஏற்படுவதில்லை.
ஜப்பானில் பூகம்பம். பலர் இறக்கின்றனர். நாம் நம்மையும் அறியாமல் மன வேதனைப் படுகின்றோம்.
சைனா,பாகிஸ்தான் நம் அண்டைநாடுகள். எதிரிகள். ஆனால் அங்கு சுனாமியால் இறக்கின்றனர். என்றால் வேதனைப்பட்கின்றோம்.
மனித உணர்வு ஒரு இரக்கம்.கருணை. தயை, அன்பு. இந்த அன்பு இல்லை எனில்,இந்த சஹானுபூதி இல்லை எனில்
பல விலங்கினங்கள் அழிந்தது போல் மனித இனம் அழிந்திருக்கும்.
எத்தனையோ பழங்குடிகள் அழிந்துவிட்டன.
அனால் ,நாகரீகமுள்ள மனித குணமுள்ள இனங்கள் அழியவில்லை.
மனித இனத்திற்குப் பொதுவான எண்ணங்கள் அன்பு,இறக்கம்,உதவும் பண்பு.
அஹிம்சை.
எனவே அன்பே ஆண்டவன்.
மனித அன்பு மற்றவர்களுக்கு உதவும். துன்பத்தில் உதவுபவன் இறைவன்.
அன்பு மேலோங்க அறம் வளரும் .அறம் வளர ஆத்ம சந்தோஷம்.
ஆத்ம திருப்தி பிரம்மானந்தம். அந்த ஆனந்தம் அன்பில் கிட்டும்.
அன்பே ஆண்டவன் .

No comments:
Post a Comment