Tuesday, August 6, 2013

அதில் தான் இந்துமதம் உயர்கிறது.

சனாதன தர்மத்தில்  தெய்வங்கள் எண்ணிக்கை அதிகம் என்ற
 எண்ணம் ஹிந்துக்களுக்கே  ஒரு வியபைத்  தருவது.

பிரத்யங்கரா தேவி  ,பத்ரகாளி ,நரசிம்ஹன் ,அகோர பத்ரர் ,வீரபத்திரர்,

நடராஜர் ருத்ர  தாண்டவ மூர்த்தி, இதெல்லாம் கற்பனைக்கு  அப்பாற்பட்டது.

இதெல்லாம் பார்த்தால் ,துஷ்ட தீய எண்ணங்கள் ,பொய் பேசுதல்,நீதிக்கு நேர்மைக்கு புறம்பாக நடத்தல் போன்றவை  குறையும் .இதை moral  fear  என்பர்.

இத்தனை  இருப்பதாலும்  ஆன்மீக பயத்தாலும் இன்னும் நாட்டில் தானமும் ,
தர்மமும் ,நேர்மையும் நிலைத்து இருக்கின்றன.

புராண காலத்தில் இருந்தே அசுர சக்திக்கு சக்தி அதிகம்.

எத்தனை அசுரர் கதைகள்.அதை அழிக்க .ஆண்டவனின் எத்தனை வகையான
அவதாரங்கள்.
மஹிஷாசுர வர்த்தினி ,அந்த ஸ்தோத்திரம்,பகாசுரன்,பஸ்மாசூரன்,ஹிரண்யன்,இராவணன்  அனைவருமே வரம் பெற்ற  தவம் புரிந்து தேவலோகத்தையே கலக்கியவர்கள்.

குடல் உருவி வீணை மீட்டிய  வேத விற்பன்னன் இராவணன்.வேதம் பயின்றவன். வீரமிக்கவன்.பெண்ணாசை. அவனை அழிக்க  ராமாவதாரம்.

அந்த ராமனின் கதையில் எத்தனை இன்றைய கருத்துக்கள்.

ஜாதி வேறுபாடுகள் அழிய சபரி,குகன்  போன்ற பாத்திரங்கள்.
வட ,தென் இந்திய ஒற்றுமை.

இலக்கிய பரிமாற்றம்.

தமிழ் இலக்கணம் . குறுமுனி அகஸ்தியர் ,வடக்கில் இருந்து வந்தவர்.

தமிழ் தெய்வம் முருகன் கைலாயத்தில் இருந்து வந்தவர்.

 இந்த உருவ வழிபாடு எளியது. சத்தியத்தை போதிப்பது. அநீதியை எதிர்ப்பது.

ஒரு பக்தியும் சக்தியும் தருவது.

கிராமதேவதைகள் அய்யனார்.கருப்பண  சாமி.அம்மன்கள் ,அந்த மக்களுக்கு

பாதுகாப்புத் தர,நோய்கள் நீக்க, நேர்மை சத்தியம் தவறினால் மழைவராது.

எத்தனையோ ஆன் மிக  நேர் வழிகாட்டல்.

இந்த உருவ வழிபாடுகள்  நேர்மை ,சத்தியம்,தர்மம் தானத்திற்கு  வழிகாட்டி.

5000 ஆண்டுகளுக்கு மேலாக  இந்த உருவ வழிபாடு நாட்டை நேர் வழி

நடத்தி அதர்மத்தில் இருந்து காத்து வருகிறது.

அதில் தான் இந்துமதம் உயர்கிறது.







.


No comments: