மனிதனுக்கு ஆன்மிகம் அமைதி தருவது,
இன்னல் வரும் போதுஇறைவனின் சோதனை ,
அவன் கருணை என்று சாதனை நோக்கி
முன்னேற நம்பிக்கை தருவது.
இன்று ஆன்மிகம் வாணிகமாகி,
பொருள் இருந்தால் அருள் கிட்டும் என்ற
எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
பயணமுகவர்கள்,ஜோதிடர்கள்
புனித யாத்திரையும் புண்ணியமும் பரிகாரமும்
என்று தங்கள் சந்தையை விரிவு படுத்தி,
பணம் சம்பாதிக்கின்றனர்.
ஆலயங்கள் அர்ச்சனை,தரிசனம்,அபிஷேகம்,அலங்காரம்
என கட்டணத்திற்கே முன்னுரிமை .
இதில் விரைவு தரிசனம்,முக்கியஸ்தர் தரிசனம்.
அங்கிங்கெனாதபடி பக்தர்களுக்கு அருளும் இறைவனை
தன் பக்தியால் தன் முன் தோன்றச் செய்த இறைஅடியார்கள்
வாழ்ந்த நாடு.
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட ஈசன் அவதரித்தநாடு.
பக்தர் வீட்டில் பணியாளாக பணியாற்றி அருள் புரிந்த கதை கொண்ட நாடு.
ராகவேந்திரர்,சீரடி ,ரமணர்,ஈஸ்வர பட்டார்,விசிறி சாமியார்,சுருட்டு சாமியார்,
புத்தர்,மகாவீரர் என்று பரதேசி கோலத்தில் இறைவனைக் கண்ட
பக்தர்கள் கொண்ட நாடு.
இன்று ஆசாராம் போன்றவர்கள் ஆன்மிகம் என்ற பெயரால்
கோடிகள் சேர்த்து கேடிகளாக
உன்னத சனாதன தர்மத்தை மாசு படுத்தி வருகின்றனர்.
பெரியார் இதற்குத்தான் விழிப்புணர்ச்சி தேவை என்றார்.
கடவுளை யாரும் எளிதாகக் காணமுடியாது.
கடவுளின் கருணையை உணரமுடியும்.
அது தான் தூய்மையான பக்தி,அன்பு.
மெய்கண்ட இன்பம்.
அதில்தான் அருள் கிட்டும்.
வாழ்வின் பொருள் கிட்டு
ஆடம்பர பக்தி லௌகீகம். பொருள் சார்ந்த பொருளற்ற பக்தி.
உண்மையான அன்பு மீரா,ஆண்டாள்,அவ்வை போன்று
தன்நலமற்ற பக்தி.
அதில்தான் மெய்யான இன்பம்.
1 comment:
சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)
(Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')
Post a Comment