Wednesday, August 14, 2013

அந்த அன்புதான் நமக்கு நிலைத்த மன நிறைவையும் அன்பையும் தருவன.

 ஆன்மிகம்  என்பது  மனிதனை நெறிப்படுத்த ஏற்பட்டது.

ஆன்மிகம் எப்பொழுது எப்படித் தோன்றியது என்பதற்கும் 

மனிதன் எப்படித் தோன்றினான் என்பதற்கும் விடை தெரியாது.

ஆனால் அனைவருக்கும் தெரிந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய 

நிலைத்த தத்துவம் ஆன்மிகம்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் உடனடி பலன் அளித்தாலும் 

அதில் பல மாற்றங்கள் புறத்தேயும் அகத்தேயும்  ஏற்படுகின்றன.

அறிவியல் மாற்றங்கள் ,வசதிகள்,கண்டுபிடிப்புகள் 

அனைத்துப் பயன்களையும் அவனியில் உள்ள அனைவரும் 

உடனடியாக அனுபவிக்க முடியுமா ? என்றால் முடியாது.

காரணம்  அன்டவசதிகள் எல்லாம் அனுபவிக்க முதலில் தேவைப்படுவது பணம்.

எனக்கு உலக அதிசயங்கள் எல்லாம் பார்க்க ஆசை. 

எளிய பயணத்திற்கு விமானம்;

தங்குவதற்கு வசதியான விடுதிகள்.

விளம்பரங்கள் பார்க்கும் போது  மனம் துடிக்கிறது.

ஆனால்  செல்ல பொருளாதார வசதிகள் தேவை.

முயற்சிக்கிறேன். பணம் சேர்க்கவேண்டும்.

அதற்குள்  கடன்வாங்கிச் செல்லலாம் என்றால் அதற்கு ஒரு 

சாட்சிக் கை எழுத்துப்போட  ஒரு நண்பர்வேண்டும்.

கடவுச் சீட்டு,விசா வாங்க வேண்டும்.

அனைத்தும் செய்தபின் புறப்பட்டு விமானத்தில் ஏறி அமரும் வரை ஒரு 

மன அழுத்தம்  இருக்கத்தான் செய்தது.

இதற்குள்  செய்த்திதால்கள்,நண்பர்கள் மூலம்  பல அச்சுறுத்தல்கள்.

விமானக்கடத்தல். எஞ்சினில் கோளாறு,இறங்கும் நேரத்தில் ஓடுபாதையில் கோளாறு,பனிமூட்டம்   எத்தனையோ அத்தனையும் கண் முன் வந்து செல்லும்.
பிறகு உணவுப்பிரச்சனைகள்.

பயணம் முடிந்து திரும்பும் வரை அனைத்தும் நல்லமுறையில் நடக்கவேண்டும்.

எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கக் கூடாது.


இந்த நேரத்தில் தான் அம்மா,பாட்டி,நண்பர்கள் அனைவரும் அவனை நினைவு படுத்தினர்.

யாரை ? நான் நேரில் காணாதவனை; அவனை  உலகியல் பார்வையில் என்னால்  நம்ப முடியாதவனை.

ஆம் .  அவன்தான் கடவுள்.

அவன் மீது அன்பு,பக்தி எல்லாம் எப்படியோ அனைவரிடத்திலும் வந்துவிடுகிறது.

கற்பனையில் ஏற்படும் பயம்,இயற்கை ஏற்படுத்தும் பயம்,

உடல் உபாதைகள், நடந்த நிகழ்வுகள் அனைத்தும் 

அவனை ஆண்டவனை சரணடைந்தால்  அச்சமில்லை என்ற 

உணர்வு. 

என்னையும் அறியாமல் என் பெற்றோர் ,நண்பர்கள் வழிக்காட்டிய 

முருகா,ராமா,கிருஷ்ணா,சிவா, அல்லா,ஏசு ஏதோ  ஒன்றால் 

நமது உலகியல் அச்சம் நீங்க  காட்டிய அறநெறி ஆன்மீக நெறி 

ஒருவகை துணிச்சலைத் தருகிறது.

அது இறையன்பாக மாறி நமது சிந்தனையைத் தெளிய வைக்கிறது.

நமது எண்ணங்களை நேர்வளிப்படுத்துகிறது.

வாய்மைக்கு அடிகோலிடுகிறது.

அன்புக்கும்,கருணைக்கும்,பரோபகாரத்திற்கும் ,தானத்திற்கும் ,தர்மத்திற்கும் 

வழிகாட்டுகிறது.

அந்த ஆன்மீக நெறிகள் காலத்தால் மாறாதன.

அதுதான் இறைப்பற்று; பக்தி,சிரத்தை.

அந்த அன்புதான் நமக்கு நிலைத்த மன நிறைவையும் அன்பையும் தருவன.

ஆண்டவன் மேல் அன்பு வையுங்கள். அவனியில் அமைதி பெறுங்கள். 

No comments: