Thursday, August 29, 2013

வலிமை பெறுவோம்; வளம் பெறுவோம்.



 ஹிந்துமதம்   ஒரு புனித நதி. அதில் ஆஷ்ரமம் ,ஜோதிடம்,அரசியல்

இந்த மூன்றிலும் உள்ள   தன்னலம்,பொருளாசை,பொன்னாசை ,பெண்ணாசை என்ற  கழிவுநீர் கால்வாய்கள் கலந்து  மாசுபடுத்துகின்றன.

இதை தடுக்கின்ற மாசுகட்டுவாரியங்கள் இந்து முன்னணி,பாரதீய ஜனதா தளம்.ராஷ்ட்ரீய  ஸ்வயம் சேவக் தல்.

ஹிந்து மத ஒற்றுமைக்காக பாடுபடும் பக்த சமாஜங்கள்.


ஹிந்து சக்தி ஒன்றுபடவேண்டும்.

ஹிந்துக்களுக்குள் பல்லாயிரக்கணக்காக வேரூன்றி இருக்கும் விருப்பு,வெறுப்பு,இன,ஜாதி பேதங்கள்  ஒழிக்கப்பபட்டு  ஒரே குரல்,ஒரே சமுதாயமாக விளங்கவேண்டும்.

அதற்கு  ஆலயங்கள்,அர்ச்சகர்கள்,புரோஹிதர்கள்,ஆஷ்ராமங்கள்

புனிதமாகவே இருக்கவேண்டும்.

அங்கு நடக்கும் தவறுகளை  கண்டு தக்க நடவடிக்கைகள்

எடுக்கவேண்டும்; இது நம் சனாதன தர்மத்திற்கு ஒரு வெற்றியைத்தரும்.

இந்த அரசியல்வாதிகள் மதம் என்ற ஆயுதத்தை மக்களை வேறுபடுத்தி

ஆதாயம் காண  பயன் படுத்துகின்றனர்.

ராமர் கோயில் நரசிம்மராவ் காலப்பிரச்சனை. அவர் காலமாகிவிட்டார்.

எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன.   இன்னும் தீர்க்காமல் தேர்தல் நேரத்தில்

போராடுவது,மக்களை திசை திருப்புவது ,மிகவும் வேதனை அளிக்கிறது.

பெரியோர்களே!இளைஞர்களே!

இந்து மத ஒற்றுமைக்கு ஆக்க திட்ட செயல்வழிகளை உருவாக்குங்கள்.

அதை விடுத்து   பாதரக்ஷை அணிந்து கிரிவலம் வருதல் ,பக்தர்கள் அணியும் ஆடை விஷயத்தில் அக்கறைகாட்டி போராடாதீர்கள்.

கோவணத்திலிருந்த நாம் இன்று ஆடைகள் அணிகிறோம். அது ஒரு புற  பக்தி.

உள்ளத்தில் ஒன்றுபட்டு  இந்து மதத்தைக் காப்பாற்றுங்கள்.

கடவுளைப் படைத்தவன் முட்டாள்;காட்டுமிராண்டி என்பதை

சகிக்கும் நாம்  பாதரக்ஷை அணிந்து சென்ற நடிகை கொடும்பாவி எரிப்பது

ஆண்டவனை மகிழ்விக்கும் செயலாக இல்லை.மேலும் கிரிவலப்பாதையில்

பாதரக்ஷை அதாவது செருப்பு ,காலணி அது கட்டையாக/தோலாக நம் காலை கல் -முள்ளிலிருந்து காக்கிறது. அசுத்தத்தை மிதித்தாலும் காக்கிறது.

பாதரக்ஷை ஆட்சி செய்த நாட்டில் இந்த மாதிரியான  போராட்டம் சரி அல்ல.

அவ்வாறே விநாயகர் சிலை கடலில் எறிவதும்.

சிந்திப்பீர்! தவறு ஆஷ்ராமங்கள் செய்தால் உமா பாரதி போல் ஆதரிக்காதீர்கள்;

தவறுகள் ஒழிய  மதம் புனிதமாகும்.

இன்றைய சமுதாயம் சிந்திக்கத் துவங்கியுள்ளது.

கடல் கடந்தால் பாவம் என்ற சித்தாந்தம் மாறி வெளிநாடுகளில் நம் ஆலயங்கள்  கட்டப்பட்டு ,சௌகரியத்துக்குத் தக்க சாஸ்திரம் என்பதுபோல்
பூஜை அர்ச்சனை மலர்கள் மாறிவருகின்றகாலம்.

ஔவையார் பாடினார் ---ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று;
கபீர் பாடினார் -जाति न पूछो साधू की ,पूछ लीजिए ज्ञान ,
भारती पाडिनार --ஜாதிகள் இல்லையடி பாப்பா.

இந்துக்களே ஒன்றுபடுங்கள்!இறைவன் பெயரால் ஏமாற்றும் கூட்டத்தை ஒழியுங்கள்;

நாம் சக்தி பெறுவோம்; இல்லை எனில்  சிறுபான்மை பெரும்பான்மை பெரும்.
அந்த சிறுபான்மை ஓட்டில் தான் அரசு என்று அரசியல்வாதிகள்  ஒன்றுபடுகின்றன.

சிந்திப்பீர் ஹிந்து சகோதரர்களே.!முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு


ஒரு மஹா சக்தியை இந்த ௨௦௧௪ தேர்தலில் நிரூபியுங்கள்.

இது நம்மால் முடியும்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே!நம்மில் வேறுபட்டால் தாழ்வே.

வாழ்க  சனாதன தர்மம்!   வையகம் வாழ்க! வையகம் ஒரு குடும்பம்;

போதித்த மதம். வையகத்தில் சக்தி பெற போலிகளை ஒழிப்போம்;

வலிமை பெறுவோம்; வளம் பெறுவோம்.



No comments: