Monday, May 25, 2015

அதையே கண்டவர் விண்டிலை விண்டவர் கண்டிலை

காலை நேரம்,குளிர்ந்த காற்று 
நேற்று சற்று மதியம் வெளியில் சென்றபோது 
சகித்த    தகித்த வெயிலின் கொடுமை ,
எரிச்சல் ,வியர்வை ,
மாலை ஐந்துமணிக்கும் ,காலை ஐந்துமணிக்கும் 
மதியம் பன்னிரெண்டுக்கும் இரவு பன்னிரெண்டுக்கும் 

மிகப்பெரிய வேற்றுமை.
இந்த அத்புத அத்ருஷ்ட சக்தி மாற்றம் 
இறைவனின் இயற்கை லீலை 
கடவுளின் சமத்துவம் 
குளிர் சாதன அறையில்லை என்றால் 
மின்விசிறி இல்லை என்றால் 
அனைவரும் ஒரே நிலை .
அவனின் விந்தை அமர நிலை அடைந்தால் 
சந்தக்கட்டையானாலும் ,எரு  ஆனாலும் 
மின் தகனம் ஆனாலும் 
ஒரே எரி  சாம்பல்.
மண்ணில் புதைந்தாலும் மம்மி ஆனாலும் 
ஒரேவித எலும்புக்கூடுமாற்றம்.
லீலாவினோதனின்  லீலை 
லௌகீக  மாற்றம் ,அறிந்து புரிந்து தெளிந்தால் 

அலௌகீக  ஆன்மீக ஆண்டவன் 
த்யானம்  சாந்திக்கு ,அதாவது ஆத்ம்சாந்திக்கு 
அத்யந்த அவசியம் என்பதை 
அவனியில் அறிவர்.
அநுபூதி அடைந்த நம் முன்னோர் 
காட்டிய வழி  பிரம்மானந்த அநுபூதி .
அதில் சிறந்தது கந்தரனுபூதி.
ஆத்மானுபூதி 
அதையே கண்டவர் விண்டிலை விண்டவர் கண்டிலை 
என்றே கூறினார்.
காணும் காட்சியை நம்பும் நாம் 
உணரும் காற்றை நம்பும்னாம் 
காணா  மின்சக்தி ஆற்றலை 
மகிழும் நாம் ,
மலரின் நறுமணம் உணரும் நாம் 
இறைவனின் மகிமை உணருவதே 
இறையனுபூதி .
இணையற்ற  இன்பம் தரும் 
இறையனுபூதி.
உணர்ந்தவர் பித்தர் சித்தர் 
உலகியில் துறந்து 
உண்மை பேசுவோர்.
ஊசி நுனி அளவும் உடன்வராது என்றே 
உணர்ந்து வாழும் ஆழ்மன  ஒருமைப்பாடு 
வந்தால் வையகம் அமைதிப்பூங்கா.


கல்லாப் பிழையும்,
 கருதாப் பிழையும், 

கசிந்துருகி

நில்லாப்

 பிழையும்,
 நினையாப் 
பிழையும், நின்னஞ்செழுத்தைச்

சொல்லாப்

 பிழையும்,
 துதியாப்
 பிழையும்,
 தொழாப் பிழையும்

எல்லாப்     பி ழையும் பொறுத்தருள்வாய்    


கச்சியேகம்பனே.

– திருவேகம்ப மாலை,

 பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்)

No comments: