விநாயகர் விரும்பும் நாயகர்
விக்னங்கள் தீர்க்கும்
விக்னவினாயகர்
வினைகள் தீர்க்கும்
வினைதீர்க்கும் விநாயகர்
சித்தி தரும் சித்தி விநாயகர்
முக்தி தரும் முக்குருணி விநாயகர் ,
மன மகிழ்ச்சி தரும்
மணக்குள விநாயகர் ,
கலக்கம் தீர்க்கும்
கற்பக விநாயகர் .
அனைத்து ஆண்டவர்களுக்கும்
ஆரம்ப பூஜை ஆதிமுதல்
யானை முகத்தோனுக்கே .
அவன் பாதம் தொழுதே
காவியங்கள் துவங்கும்.
பிடித்துவைத்த
மஞ்சள் பிள்ளையார்
பிடித்தமுடன் பூஜை
புஷ்பார்ச்சனை
பாதவிநாயகர் தரிசனம் பின்னரே
பழனி ஆண்டவன் தரிசனம்.
ஆற்றங்கரை ,குளக்கரை விநாயகர்
ஆங்காங்கே அரசமர பிள்ளையார்.
த்வபிகர்ணம் தோப்புக்கரணம்
ஞானம் நினைவாற்றல் தரும் -அந்த
ஞான விநாயகனை
நாளும் தொழுவோம்
நாடித் தொழுவோம்
நாம் விரும்பும் சக்தி பெறுவோம்.
No comments:
Post a Comment