Sunday, May 24, 2015

வேத மறை நெறியிலே.இன்னல் களைய இதுவே சன்மார்க்கம் .

அவனியில்  ஆண்டவனின் படைப்புகள் 

கண்ணுக்கு தென்படுபவை ,

கண்ணுக்குத் தெரியாதவை.

தொட்டு உணர்பவை 
தொடாமல் தெரிபவை.
வியர்வையில்  ,
முட்டையில்,
கருவில் ,
வெளியில் ,
காற்றில் 
தனக்குள் 
என்று  எத்தனையோ ,

அத்தனையும் அறியா மனிதர்கள் ,

அவன் அறிவதெல்லாம் தான் வாழ ,
தன்  குல ம் வாழ ,
தன்  மதம் வாழ 
தன்  இனம் வாழ 
வாழ நினித்து  அளிக்கும் 
இயற்கையை 
அழிக்கும்  அறிவீனம் .
தான் வாழ அவன் அழித்த  
விலங்கினங்கள் ,
புள்ளினங்கள்,
தாவரங்கள் ,
மனித இனங்கள் ,
மனித ஆற்றல்கள் 
மனிதனின் படைப்புகள்,
இயற்கைப் பேரழிவுகள் ,
போதைப்பழக்கங்கள் ,
பேதை பழக்கங்கள் 
சிந்தித்து நன்னெறி நல்வழி காட்டிய ,காட்டுகின்ற 
நல்லவர்கள் ,வல்லவர்கள், அறிவியலர்கள் ,
ஆன்மீக சிந்தனை ஆளர்கள்,
தனக்கென வாழும் சமுதாயத்தில் 
பிறர்க்கென வாழும் 
வள்ளல்கள் ,
இயற்கை வளம் பெருக்கும்   
இயற்க்கைப்  பிரியர்கள்,
நீர்வளம் காக்க ,
நிலவளம் காக்க ,
விலங்கினம் காக்க ,
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என 
வாழும்  மஹாத்மாக்கள் ,
உத்தமர்கள் 
எண்ணிக்கையில் குறைந்தி ருந்தாலும் 
ஏற்றமிகு பண்பாளர்கள் 
அனைவரின் உள்ளத்தில் 
சற்றே மனிதநேயம் வளர்ப்பவர்கள்.
இறையன்பர்கள் ,
இவ்வையகம் நிலைக்க காரணமானவர்கள் 
இறைப்பற்றாளர்கள்.
அவர்கள் வழியில் இறைவனை 
இயல்பில் நேசித்தால் இல்லை துன்பமே .
வையகம் காட்டும் இன்பம் 
இறைவன் வழிகாட்டும் 
வேத மறை நெறியிலே.
இன்பமே உண்டு.
இன்னல் களைய இதுவே சன்மார்க்கம் .




No comments: