அன்பு போதும் என்றார்
பசிவந்திடப்பணம் வேண்டும்
அன்பு பசி தீர்க்காது.
மானம் காக்கத் துணி வேண்டும் .
துணிவாங்க அன்பு போதாது
பணம் வேண்டும்.
இருக்க வீடு வேண்டும் .
குடி இருக்க அன்பு போதாது
வாடகை தர பணம் வேண்டும்.
காதலே பெரிது என்று
கண்ணீர் மல்கி
கசிந்துருகி
இருந்தோர்
பரதேசிகள்.
போர் செய்து
பலரை பலியிட்டு
பலரை கொன்று
ஆட்சி பிடித்தோர்
ஆட்சியாளர் .
அரசன்.
அன்பு எங்கே /
எப்பொழுதும் அடிமைதான் .
பணம் கோலோச்சும்.
அன்பு அழுதுவடியும்.
No comments:
Post a Comment