ஆண்டவனைத் தேடி
அண்டமெல்லாம் அலைந்து
திரிந்தோர் உண்டு.
கண்டோர் யார் /?
அதிலும் .சிலர் உண்டு.
அங்கிங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய்
இருக்கும் ஆண்டவனைஇருந்த இடத்திலேயே
கண்டு வியந்து விளையாடி மகிழ்ந்தோரும் உண்டு.
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்
என்றே அவனை நெஞ்சில் அமர்த்தி
வியந்தொரும் உண்டு.
கண்ணின் கருவிழியை கட்டிலாக்கி
கடவுளை அதில் தூங்கவைத்து
கண்ணின் இரப்பையை கதவாக்கி மூடி
தியானம் செய்தோரும் உண்டு.
உண்மையில் ஆண்டவன் பக்தனைத் தேடிவரும்
பக்தி செலுத்துவோர் பாரினில் சிறந்த பக்தரே.
No comments:
Post a Comment