அன்புக்கும் ஆண்டவனுக்கும்
தொடர்பு உண்டு.
ஆஸ்திக்கும் ஆண்டவனுக்கும்
தொடர்பு உண்டு.
ஆஸ்தி சேர்த் தோருக்கும்
ஆண்டவனுக்கும் நெருக்கம் அதிகம்.
ஆனால் ஆண்டவன் அருளுக்கும்
ஆசிக்கும் ஆத்ம திருப்திக்கும்
அமைதிக்கும் ஆரோக்கியத்திற்கும்
ஆஸ்தி -ஆண்டவன் இரண்டுக்கும் தொடர்பு உண்டு.
ஆண்டவனையே நினைக்கும் பக்தன்
பக்தனையே நினைக்கும் ஆண்டவன்
எளிமையிலும் ஏழ்மையிலும்
தானே உண்டு.
கபீர் ,துளசி ,மீரா ,ஆண்டாள் ,பக்த மீரா
அனைவரும் ஆஸ்திவிரும்பாமல் ஆண்டவனையே
அல்லும் பகலும் விரும்பும்
உலகியல் விருப்பம் இல்லா பக்தர்கள்.
அவர்கள் காலப் பெட்டகங்கள்.
அழியா பொக்கிஷங்கள்.
அமைதி தரும் பக்தி இலக்கியங்கள்
அவர்கள் தந்த விலை மதிக்க முடியா ரத்தினங்கள்.
No comments:
Post a Comment