Saturday, May 2, 2015

அதில் வரும் பேரானந்தமே பிரம்மானந்தம்.

வையகத்தில்  இறைவனின்   இயக்கம் 

வியப்பினில் ஆழ்த்தும் உண்மை.

ஞானமளித்த தேவன்  நியாயம்  என்றான் ,

சத்தியம் என்றான்  கடமைஎன்றான் 

வையகத்தில் வாழ பொருள் வேண்டும் என்றான் 

பொருளுக்கு அர்த்தம் என்றான் 
அர்த்ததத்திற்கும்  பொருளுக்கும் 

அருள் பொருள் என்றான்.

பொருள் சேர்த்து வாழ்ந்தால் லௌகீகம்  என்றான்.

பொருளுடன் வாழ்ந்தால் அலௌகீகம்  என்றான்.


அருளும் பொருளும்  சேர்ந்த வாழ்க்கை அதிர்ஷ்டம் என்றான்.

அத்ருஷ்ட்  என்றால் பு லப்படாத  என்று பொருள்.

நமக்கே  புலப்படாமல் 
சிலருக்கு பொருள் சேரும்.
சிலருக்குப்   புகழ்   சேரும்.
சிலருக்கு  அருள் சேரும்.

சிலருக்கு வாழ்க்கையே பொருளற்று தோன்றும்.

சிலருக்கு  பொருளே  வாழ்க்கையாகத்  தோன்றும்.

பொருளுள்ளவனுக்கு   ஒரு வெறுமை .

பொருளற்றவனுக்கு   ஒரு வெறுமை 

நோய்தாக்கும்  சிலருக்கு 

சந்தான  பாக்கியம் தட்டும்.

அங்கு இங்கு என்று பிடிப்பில்லா வாழ்க்கையில் 

அமைதி  தேட மனம் அலைபாயும்.

அலைபாயும் மனதில் 
ஆனந்தமும் துக்கமும் 
மன நிறைவும் மனம்  நிறைவற்ற தன்மையும் 

பேரலையாகி  ஒரு கரையில் ஒதுக்கும் 

அதுவே தியானம் .
அதுவே  இறைவழிபாடு.
அதுவே ஆன்மீக நாட்டம்.

அருளும் அமைதியும் நாடும்.

மனம் ஒருநிலைப்பட முயற்சிக்கும்.

அதில் வரும் பேரானந்தமே பிரம்மானந்தம்.







No comments: