ஆண்டவன் இல்லை என்றார்
அனைவரும் அவனியிலே
அமைதி பெற இறுதியில்
ஆண்டவன் புகழ் பாடி அடக்கமானார்.
கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்
கலியுக பக்திக்கு ஒரு தூண்டும் விளக்கு.
அவன் இருப்பதை உணர்த்த
அம்மா முதல்வரின் சத்தியப் பிரமாணம் அவன் பெயரால்.
அவரது அமைச்சர்கள் அவன் பெயரில்
அவர் மீண்டும் பதவி அலங்கரிக்க
அனைத்துவித பிரார்த்தனைகள்,
மண் சோறு தின்பதில் இருந்து முடி காணிக்கை வரை
விநாயகர் கோயில் கட்டுவதில் இருந்து தங்கத்தேர் பவனிவரை
தன்னையே அழித்து அம்மாவின் ஆட்சிக்கு
காணிக்கை செலுத்தும் அமர பக்தி ,
தங்கக் குடம் அளித்த தங்கத் தாரகை
தரணியில் ஒளிர மிளிர
இறை பக்தியில் சரணடைந்த இன்றைய நிகழ்ச்சி.
இயற்கை அளிக்கும் பாடம் .
இறைவனின் சரணாகதி இன்றைய
ஒரேவழி.
அறிவியல் ஆற்றலே ஆண்டவன் அருள் தானே .
அறிவியல் தடைகள் நடக்கும் போது
இயற்கையின் இன்றியமையாமை உணரும்போது
இறைவனின் ஆற்றல் வையகம் புகழும் .
No comments:
Post a Comment