Friday, July 3, 2015

அனைத்தும் அளிக்கின்றான்.

இறைவன்  இருக்கிறான் -அவன் 
அங்கு இங்கு எனாதபடி 
ஆனந்தப்ரகாஷமாக 
குமரகுருபரர் கூற்றுப்படி 
குன்றுதோறும் எழுந்தருளி 
எங்கும் இருக்கிறான் ,
ஐந்து எழுத்தாக ஆறுமுகமாக 
ஏழுகன்னியாக  அஷ்டலக்ஷ்மியாக 
நவ்க்ரஹ நாயகியாக ,தஷவதாரமாக 
ஒளிமயமாக இருக்கிறான் 
ஓங்காரமாய்  இருக்கிறான் 
ஔசாதமாக இருக்கிறான் 
கணபதியாக ,ஞான ஒளியாக 
சக்கரதாரியாக . 
டமரு    (உடுக்கை ) தாரியாக 
தண்டபாணியாக
 நாகபூஷண தாரியாக 
அகோர பத்திரனாக 
வீரபத்திரனாக 
கருப்பண்ண சாமியாக 
முநீஸ்வரனாக 
மாரியாக 
முண்டகக்கன்னி யாக
 ஸகுணமாக 
நிர்குணமாக 

உருவமற்றவனாக 
எங்கும் இருக்கிறான் 
ஏற்றம் அளிக்கிறான் 
ஐயமின்றி தொழுதால் 
அனைத்தும் அளிக்கின்றான்.






No comments: