Tuesday, July 14, 2015

செய்த தியானமே.

காலை நேரம் ,இறைவனை  நினைத்து 
மனதை நிலை நிறுத்துவது  கடினம் .
என்ன செய்வது ?
இரண்டு நொடி 
கண்ணை  மூடி தியானம்.
கண்கள் மூடி உள்ளன. 
வாயில் மந்திர  உச்சாடனம்.
மனம் ?அந்த இரண்டு நிமிடத்துக்குள் 
இப்படி உட்காராமல் ,
ஏதாவது செய்யவேண்டுமே ?
என்ன செய்வது ?அதில் சிக்கல்.
ஒய்வு பெற்றுவிட்டோம் .
மனது  ஒய்வு பெறவில்லை.
எம்.எஸ். விஸ்வநாதன் மரணம்.
அவர் இசை கொடுத்த பாடல் நினைவு 
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது .
நம் உள்ளம் ? ஒரே சிந்தனை இல்லை.
கண்ணை மூடி அமரும்  பொழுதுதான் 
அனைத்து நினைவுகளும்.
பள்ளி சென்றது,கோலி  ஆடியது முதல் 
இன்றைய சூழல்  வரை.
சே !எழுதுவது கூட கோர்வையாக வரவில்லை.
இந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள் ,சொற்பொழிவாளர்கள் 

அவர்கள் படைப்பு  ,ஆண்டவனின் வரம் 
ஆசி பெற்றவர்கள்.
ஒவ்வொரு துறை அரசாங்கம் ,ஆட்சி,ஆன்மிகம் மருத்துவம் சட்டம் 
அதில் வல்லுனர்கள் ,அறிவியல் விந்தைகள் படைப்போர் .
நாம் ?கண்ணை மூடி அமர்வதா /
காலம் நகர்கிறது.
புலியைப்பார்த்து பூனை கோடுபோட்ட கதையாக 
வான்கோழி மயில் போல் ஆடிய 
கான  மயிலாட வந்திருந்த வான்கோழி ,
தானும் அதுவாக பாவித்துத் தன் 
பொல்லாச் சிறகினை விரித்து ஆடினார் போலுமே 
கல்லாதான் கற்ற கவி.
அகவை கூடிவிட்டது.
இன்னும் முழு  தியானம் வரவில்லை.
மனம் அலைபாய்கிறது, 
முருகா!
என்றதுமே 
நினைப்பதெல்லாம் சாதிக்கவேண்டும் .
விநாயகா !
 என்றால்
 தடைகள்  நீங்க வேண்டும்.
ஆறுமுகா !
என்றால் 
ஆற்றல் வரவேண்டும்.
இது  சாத்தியம் என்றால் ?
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்  என்ற  வாசகம் 
தெய்வத்தாலாகாதுஎனினும்  முயற்சி
தன்  மெய்வருத்தக் கூலிதரும் 
என்ற குரல்  அனைத்தும் அறிந்தும் 
செயலாக்கம் ,பலன் 
இறைவனின் முழு
 க்ருபாகடாக்ஷம் பெற்றவர்களுக்கே.
ஜோதிடம் படித்து ஜோதிடம் சொல்வோர் 
பார்த்ததும் ஜோதிடம் சொல்வோர் 
இயற்கை யாக சொல்வோர், 
அந்த இயற்கை அறிவு இறைவன் கொடுத்தது .
படிப்பறிவு  ஏடு  கொடுத்தது.
இயற்கை ஆற்றல் உலகம் வியக்கும்.
அவ்வாறே ஓவியம்  தூரிகை பிடித்து  பயில்வோர் 
இயற்கை ஓவியர் ,இசை  இவ்வாறே சிந்தியுங்கள்.
இப்பிறவியில் ஆற்றல் முயற்சி.
இப்பிறவியில் சாதிக்க பயிற்சி. 
இயற்கையில் ஆற்றல் ,பதவி ,மரியாதை,புகழ் வர 
இப்பிறவியில் சாதிக்க இளம் வயதில் தியானம் வேண்டும்.
இதற்கு மனம் அலைபாயக்கூடாது.
இயற்கை ஆற்றல் பெற்றே இருந்த இடத்தில் இருந்தே 
பலர் பெரும் சாதனை படைக்கின்றனர்.
லௌகீக  ஆசைகள்
 முயற்சியால் ,
பணத்தால்,
செல்வாக்கால்
 நிறைவேறும்.
நிலையற்றது .
இவையெல்லாம்  இயற்கையாக வர 
 இறைவனை தியானிப்பது
 அவசியம்.
எழுதும் நீங்கள் ?
வினா சரிதான் ,
விடை  எளிதா ?
   ஆசிரியர் சொல்கிறார் ,
படித்து பட்டம்  பெற்று பெரியவனாக வேண்டும்.
மாணவன் ,ஐயா,நீங்க  அப்படியே இருக்கீங்க ?
 என் அப்பா ,பெரியப்பா அனைவரும்  உங்களிடம் பயின்ற வர்களே .
 இதற்கு விடைதான் இறைசக்தி.
கட்சி ஆரம்பித்தோர் எல்லாம் தலைவன்.
ஆனால் 
முதல்வர் ,பிரதமர்  ஆவதில்லை.
இது இறை சக்தி.
நம் ஒவ்வொரு செயலும் இயக்கும்  இயக்குனர் இறைவன்.
இயக்குனர் லௌகீகத்தில் சொல்லி  இயக்குவார்.
அலௌகீக  ஆன்மீக இயற்கை இயக்கம். முன்னேற்றும்.

இயற் கைஆற்றல் கதிரவன் போல் ,காற்றைப்போல் பெற 
இறை தியானம் ஆள் நிலை தியானம் தேவை.
அது நமக்கு உடனடி பயன் தரவில்லை என்றாலும்,
நம்மை சுற்றி இருப்போருக்கு ,சந்ததியினருக்கு 
நம் தியான அதிரலைகள் ஆற்றல் தரும். 
நம் பாரதத்தின் ஆற்றல் 
யோகிகள் ,சாதுக்கள்,ரிஷி-முனிகள் ,சித்தர்கள் 
செய்த தியானமே.
 மன ஒருமைப்பாடு இறை ஆற்றலை வளர்க்கும்.
விநாயகாய நமஹ !கார்த்திகேயாய நமஹ !
ஓம் நமச்சிவாய !ஓம் துர்காயை  நமஹ1
    
























No comments: