Monday, May 25, 2015

அதையே கண்டவர் விண்டிலை விண்டவர் கண்டிலை

காலை நேரம்,குளிர்ந்த காற்று 
நேற்று சற்று மதியம் வெளியில் சென்றபோது 
சகித்த    தகித்த வெயிலின் கொடுமை ,
எரிச்சல் ,வியர்வை ,
மாலை ஐந்துமணிக்கும் ,காலை ஐந்துமணிக்கும் 
மதியம் பன்னிரெண்டுக்கும் இரவு பன்னிரெண்டுக்கும் 

மிகப்பெரிய வேற்றுமை.
இந்த அத்புத அத்ருஷ்ட சக்தி மாற்றம் 
இறைவனின் இயற்கை லீலை 
கடவுளின் சமத்துவம் 
குளிர் சாதன அறையில்லை என்றால் 
மின்விசிறி இல்லை என்றால் 
அனைவரும் ஒரே நிலை .
அவனின் விந்தை அமர நிலை அடைந்தால் 
சந்தக்கட்டையானாலும் ,எரு  ஆனாலும் 
மின் தகனம் ஆனாலும் 
ஒரே எரி  சாம்பல்.
மண்ணில் புதைந்தாலும் மம்மி ஆனாலும் 
ஒரேவித எலும்புக்கூடுமாற்றம்.
லீலாவினோதனின்  லீலை 
லௌகீக  மாற்றம் ,அறிந்து புரிந்து தெளிந்தால் 

அலௌகீக  ஆன்மீக ஆண்டவன் 
த்யானம்  சாந்திக்கு ,அதாவது ஆத்ம்சாந்திக்கு 
அத்யந்த அவசியம் என்பதை 
அவனியில் அறிவர்.
அநுபூதி அடைந்த நம் முன்னோர் 
காட்டிய வழி  பிரம்மானந்த அநுபூதி .
அதில் சிறந்தது கந்தரனுபூதி.
ஆத்மானுபூதி 
அதையே கண்டவர் விண்டிலை விண்டவர் கண்டிலை 
என்றே கூறினார்.
காணும் காட்சியை நம்பும் நாம் 
உணரும் காற்றை நம்பும்னாம் 
காணா  மின்சக்தி ஆற்றலை 
மகிழும் நாம் ,
மலரின் நறுமணம் உணரும் நாம் 
இறைவனின் மகிமை உணருவதே 
இறையனுபூதி .
இணையற்ற  இன்பம் தரும் 
இறையனுபூதி.
உணர்ந்தவர் பித்தர் சித்தர் 
உலகியில் துறந்து 
உண்மை பேசுவோர்.
ஊசி நுனி அளவும் உடன்வராது என்றே 
உணர்ந்து வாழும் ஆழ்மன  ஒருமைப்பாடு 
வந்தால் வையகம் அமைதிப்பூங்கா.


கல்லாப் பிழையும்,
 கருதாப் பிழையும், 

கசிந்துருகி

நில்லாப்

 பிழையும்,
 நினையாப் 
பிழையும், நின்னஞ்செழுத்தைச்

சொல்லாப்

 பிழையும்,
 துதியாப்
 பிழையும்,
 தொழாப் பிழையும்

எல்லாப்     பி ழையும் பொறுத்தருள்வாய்    


கச்சியேகம்பனே.

– திருவேகம்ப மாலை,

 பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்)

நாம் விரும்பும் சக்தி பெறுவோம்.

 விநாயகர்  விரும்பும் நாயகர் 
விக்னங்கள் தீர்க்கும் 

விக்னவினாயகர் 

வினைகள் தீர்க்கும் 

வினைதீர்க்கும் விநாயகர் 
சித்தி தரும் சித்தி விநாயகர் 

முக்தி தரும் முக்குருணி விநாயகர் ,
மன மகிழ்ச்சி தரும் 
மணக்குள விநாயகர் ,
கலக்கம் தீர்க்கும் 
கற்பக  விநாயகர் .
அனைத்து ஆண்டவர்களுக்கும் 
ஆரம்ப பூஜை ஆதிமுதல் 
யானை முகத்தோனுக்கே .

அவன் பாதம் தொழுதே 
காவியங்கள் துவங்கும்.
பிடித்துவைத்த 
மஞ்சள் பிள்ளையார் 
பிடித்தமுடன் பூஜை 
புஷ்பார்ச்சனை 
பாதவிநாயகர்  தரிசனம் பின்னரே 
பழனி ஆண்டவன் தரிசனம்.
ஆற்றங்கரை ,குளக்கரை விநாயகர் 
ஆங்காங்கே அரசமர பிள்ளையார்.
த்வபிகர்ணம் தோப்புக்கரணம் 
ஞானம் நினைவாற்றல் தரும் -அந்த 
ஞான விநாயகனை 
நாளும் தொழுவோம் 
நாடித் தொழுவோம் 
நாம் விரும்பும் சக்தி பெறுவோம்.



Sunday, May 24, 2015

அன்பு அழுதுவடியும்.

அன்பு போதும் என்றார் 
பசிவந்திடப்பணம் வேண்டும் 
அன்பு பசி தீர்க்காது.
மானம் காக்கத் துணி வேண்டும் .
துணிவாங்க அன்பு போதாது 
பணம் வேண்டும்.
இருக்க வீடு வேண்டும் .
குடி இருக்க அன்பு போதாது 
வாடகை தர பணம் வேண்டும்.

காதலே பெரிது என்று 
கண்ணீர் மல்கி 
கசிந்துருகி 
இருந்தோர் 
பரதேசிகள்.
போர் செய்து 
பலரை பலியிட்டு 
பலரை கொன்று 
ஆட்சி பிடித்தோர் 
ஆட்சியாளர் .
அரசன்.
அன்பு எங்கே /
எப்பொழுதும் அடிமைதான் .
பணம் கோலோச்சும்.
அன்பு  அழுதுவடியும்.

வேத மறை நெறியிலே.இன்னல் களைய இதுவே சன்மார்க்கம் .

அவனியில்  ஆண்டவனின் படைப்புகள் 

கண்ணுக்கு தென்படுபவை ,

கண்ணுக்குத் தெரியாதவை.

தொட்டு உணர்பவை 
தொடாமல் தெரிபவை.
வியர்வையில்  ,
முட்டையில்,
கருவில் ,
வெளியில் ,
காற்றில் 
தனக்குள் 
என்று  எத்தனையோ ,

அத்தனையும் அறியா மனிதர்கள் ,

அவன் அறிவதெல்லாம் தான் வாழ ,
தன்  குல ம் வாழ ,
தன்  மதம் வாழ 
தன்  இனம் வாழ 
வாழ நினித்து  அளிக்கும் 
இயற்கையை 
அழிக்கும்  அறிவீனம் .
தான் வாழ அவன் அழித்த  
விலங்கினங்கள் ,
புள்ளினங்கள்,
தாவரங்கள் ,
மனித இனங்கள் ,
மனித ஆற்றல்கள் 
மனிதனின் படைப்புகள்,
இயற்கைப் பேரழிவுகள் ,
போதைப்பழக்கங்கள் ,
பேதை பழக்கங்கள் 
சிந்தித்து நன்னெறி நல்வழி காட்டிய ,காட்டுகின்ற 
நல்லவர்கள் ,வல்லவர்கள், அறிவியலர்கள் ,
ஆன்மீக சிந்தனை ஆளர்கள்,
தனக்கென வாழும் சமுதாயத்தில் 
பிறர்க்கென வாழும் 
வள்ளல்கள் ,
இயற்கை வளம் பெருக்கும்   
இயற்க்கைப்  பிரியர்கள்,
நீர்வளம் காக்க ,
நிலவளம் காக்க ,
விலங்கினம் காக்க ,
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என 
வாழும்  மஹாத்மாக்கள் ,
உத்தமர்கள் 
எண்ணிக்கையில் குறைந்தி ருந்தாலும் 
ஏற்றமிகு பண்பாளர்கள் 
அனைவரின் உள்ளத்தில் 
சற்றே மனிதநேயம் வளர்ப்பவர்கள்.
இறையன்பர்கள் ,
இவ்வையகம் நிலைக்க காரணமானவர்கள் 
இறைப்பற்றாளர்கள்.
அவர்கள் வழியில் இறைவனை 
இயல்பில் நேசித்தால் இல்லை துன்பமே .
வையகம் காட்டும் இன்பம் 
இறைவன் வழிகாட்டும் 
வேத மறை நெறியிலே.
இன்பமே உண்டு.
இன்னல் களைய இதுவே சன்மார்க்கம் .




पर यह नहीं जानते मृत्यु से

हम  मनुष्य भोले -भाले

कर सकते  हैं पहाड़ को राई। 

राई को पहाड़ बनाना नहीं जानते. 

नदी को बाँध बनाकर रोकना तो जानते हैं ,

पर नहीं जानते नयी नदी की सृष्टी। 

मारना  -क़त्ल करना जानते हैं 

न  जानते हैं 

जीवित करना। 

जानते हैं ठगना -ठगाना 

पर हम ठग प्रकट करना  

मानना नहीं  जानते. 

बच्चे से जवान ,जवान से बूढा 
 बूढ़े से शव  जैसे होते हैं 
न तो जानते हैं 
,सदा जवानी बनाये रखने के काबिल नहीं हम. 
पर अहंकार भरी बातें ,
करने में तो काबिल. 

बमें बनाने ,फेंकने जान लेने ,डराने ,धमकाने 
तो  जानते हैं  हम,
पर विनाश की तरीकों  को 
दुखाने को 
रिश्वत देकर पद पाने को 
जो गलत तरिकाएँ  हैं सब तो जानते हैं 
पर यह नहीं जानते मृत्यु से 




Saturday, May 23, 2015

aathmaa --parama aathma

கிருஷ்ணன் மட்டும் பர  ஆத்மா .ஏன் ?
ராமர் மரியாதை புருஷோத்தமர்.
சிவனுக்கு ஆத்ம  லிங்கேஸ்வரர்  என்று பெயர்.

சங்கரர் ,ரமணர் அஹம் பிரம்மாஸ்மி 

அத்வைத்துவம்  ஆத்மா பரமாத்மா ஒன்றே .

ராமரை இதயத்தில் வைத்து பூஜித்தவர் 
தனது இதயத்தை கிழித்து காட்டி 
தன்  ராம பக்தியை நிலைநாட்டியவர் 
அதி பலசாலி ஹனுமான்.

அவர் லோக ரக்ஷகர்.

என்னை சரணடைந்தால் ரக்ஷிப்பேன்  என்பவர்.


கிருஷ்ணன் லோக ரஞ்சகர் /லோகரக்ஷகர்.
கோபிகா பிரியர். ஆயர்.
உத்தவ் மூலம் நிர்குண பக்திக்கு 
தூது அனுப்பியவர் .
கிருஷ்ண  பக்தியே  அத்வைத்துவம் .
பர  என்றால் அடுத்த /அந்நிய 
என்றே பொருள்.
ஆத்மா -பரமாத்மா வேறு .
பரம என்றால் ஷ்ரேஷ்ட்  உயர்ந்த ஆத்மா 

மனித அவதாரத்தில்  பரம  ஆத்மா 
பரம பிதா 
பர லோகம் விஷ்ணுலோகம் 
கைலாயம் செல்லலாம்.
வரலாம் 
பரம  பதம் என்பர்.
ஆகையால் கிருஷ்ண பரந்தாமன் 
கிருஷ்ண பரமாத்மா  .
என் சிற்றறிவில் தோன்றிய விளக்கம்.
நான் வேத உபநிஷத்துகள்  கற்றவன் அல்ல .
என்மனதில் தோன்றுவதே விளக்கம்.

இறைவனின் ஆற்றல் வையகம் புகழும் .

ஆண்டவன் இல்லை என்றார் 

அனைவரும் அவனியிலே 

அமைதி பெற இறுதியில் 

ஆண்டவன் புகழ் பாடி அடக்கமானார்.

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 
கலியுக பக்திக்கு ஒரு தூண்டும் விளக்கு.

அவன் இருப்பதை உணர்த்த 

அம்மா முதல்வரின் சத்தியப் பிரமாணம் அவன் பெயரால்.
அவரது அமைச்சர்கள் அவன் பெயரில் 
அவர் மீண்டும் பதவி அலங்கரிக்க 
அனைத்துவித பிரார்த்தனைகள்,
மண் சோறு தின்பதில் இருந்து முடி காணிக்கை வரை 

விநாயகர் கோயில் கட்டுவதில் இருந்து தங்கத்தேர் பவனிவரை 

தன்னையே  அழித்து  அம்மாவின் ஆட்சிக்கு 
காணிக்கை செலுத்தும்  அமர பக்தி ,
தங்கக் குடம் அளித்த தங்கத் தாரகை 

தரணியில் ஒளிர மிளிர  
 இறை பக்தியில்  சரணடைந்த  இன்றைய நிகழ்ச்சி.
இயற்கை அளிக்கும்  பாடம் .
இறைவனின் சரணாகதி  இன்றைய 
ஒரேவழி. 
அறிவியல் ஆற்றலே ஆண்டவன் அருள் தானே .
அறிவியல் தடைகள் நடக்கும்  போது
இயற்கையின் இன்றியமையாமை உணரும்போது 
இறைவனின் ஆற்றல் வையகம் புகழும் .


Tuesday, May 12, 2015

அதுவே நமக்கு ஆக்கமும் ஊக்கமும் அமைதியும் ஏற்றமும் எளிமையும் உயர்ந்த எண்ணமும் ,பாதுகாப்பும் தரும்.

அன்பு  ஆண்டவன்  அருள் ,

  ஆனந்தம்  ஆண்டவன் அருள்

ஆத்ம  திருப்தி  ஆண்டவன் அருள்

ஆத்மவிஸ் வாசம்  ஆண்டவன் அருள்

ஆஸ்தி   வருவதும் போவதும் ஆண்டவன் அருள் .
மழலைச்  செல்வம்  மகேசன்   அருள் .
பதவி ,பட்டம் ,கலைகள் ,இனிய குரல் ,
அழகு , ஒவ்வொன்றும்  யாருக்கும்
தாங்கள் நினைத்தபடி வருவதில்லை.
புதிய  கண்டுபிடிப்புகள் அதில் ஈடுபாடு  உள்ள நாட்டினர்களுக்கே .
பாரத நாடு  பக்தி.முக்தி. வாழ்க்கைக்கு உணவுவகைகள்,
ஆரோக்யத்திற்கு  ஆன்மிகம் கலந்த மருத்துவ இயல்.
வைகறைதுயில்  எழு.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று .
ஆலயம் சென்றால் சிலர் நேரே கர்பகிரஹம்  மூலவர்  தரிசனம்
புண்ணியம்  என்றே  எண்ணி செயல்பட்டு
சுற்றுலா பேருந்தில் துரித தரிசனம் செய்கின்றனர்.
ஒவ்வொரு ஆலயத்தின்   அமைப்பு  ,,
விஸ்தீர்ணம் ,ஐதீகம் அறிந்து
வழிபட வேண்டும்.
பழனி ,திருவண்ணாமலை  கிரிவலமகிமை ,
அதை நகரமாக்கமால்
இயற்கை  வளம்  மாறாமல் வலம்  வரவேண்டும்.
பழனியில்  கடம்பவனம்
அந்த பூவின் மனம் இன்று அதிகம் இல்லை.
கடம்பவன வாசா கந்தா என்றே  போற்றும் நிலை
 மீண்டும் வரவேண்டும்.
அவ்வாறே அந்த அந்த க்ஷேத்ர
 மரங்கள் வளர்க்கப்பட  வேண்டும்.
புனித க்ஷேத்திரங்கள்
 வணிகமயமாக மாறி
 பக்தி குறைந்து லௌகீக
பொருள் வாங்கி ஏமாறுவதிலோ
 கவர்ச்சியிலோ  தடுமாடுகிறது .

மனம் ஒருநிலைப்படுவது
ஆலயவழிபாட்டின் முக்கியம்.
ஒரு புனித க்ஷேத்திரத்தில்
வாங்கிய தலை கிளிப் ,பாசி ஊசி பற்றியே பேசாமல்
அந்த இறைவனின் புகழைப்  பேசும் நிலை
மாறிவருகிறது.
ஆலயங்களின் அனைத்துப்பிரகாரங்களும்
பிரதக்ஷனம் செய்யவேண்டும்.
இது  பக்தி என்பதுடன் உடற்பயிற்சிக்கு நம் முன்னோர் காட்டிய வழி .
விரதம்  என்பது உணவுக்கட்டுப்பாடு.
மனக் கட்டுப்பாடு .மாயையின் கவர்ச்சிக்
கட்டுப்பாடு. அதை விடுத்து கட்டுப்பாடில்லா பக்தி
 மன ஒருமைப்பாட்டிற்கு
வழிவகுக்காது.
மற்றொன்று பக்திக்கு மனமே பிரதானமாகும்.
மன சஞ்சலம் கூடாது.
அரசகுமாரர்கள் துறவறம் பூண்டது
பாரத புண்ணிய க்ஷேத்திரத்தில்.
உணவு ,ஆரோக்கியம் இரண்டுக்கே
நம்முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுத்தனர்.
உடை ,உறையுள் மிக எளிமை.
தூக்கம் கட்டாந்தரையில் படுத்தாலும் வரவேண்டும்  என்ற நிலை.
இன்று சிலருக்கு குளிர் சாதான அறையில்
 பட்டுமெத்தையில் தூங்கினாலும் தூக்கம் வராது.
எளிமை ,இனிமை,தியாகம் ,துறத்தல் ,
தானம் ,தர்மம் ,யோகா ,பிராணாயாமம் ,
குடிலில் வசித்தல், இயற்கை உணவு ஏற்றல் ,
கசப்பான மருந்து உபயோகித்தல்  என்ற
நிலையே பக்தி நெறி.
இதனால் தான் பாரத தேசம் வளர்ந்த
 உ லக நாடுகளுக்கு  அனைத்துத் துறையிலும் வழிகாட்டி உள்ளது.
  ஹோமப்  புகையின் மஹத்துவம் ரஷ்யர்களால் வியக்கப்படுகிறது.
திருந ள்ளாரின்  அமைப்பு  அறிவியல் வியப்புக்கு காரணமாகிறது.
சிதம்பரத்தின் புவி ஈர்ப்பு மையம்
,நாடி நரம்பு விகிதாசார அமைப்பு அதிசயிக்கவைக்கிறது.
   நாம்  மன ஒருமைப்பாடு தியாகம்
 நிறைந்த வாழ்க்கையை பின்பற்றுவோம்.
தியானம் களையா  தியானம் அதில் இவ்வுலக
 அதாவது லௌகீகம் குறைந்து
அலௌகீகம்  அவ்வுலகவாழ்க் கையில் நாட்டம் செலுத்துவோம்.
அதுவே நமக்கு ஆக்கமும் ஊக்கமும்
அமைதியும் ஏற்றமும் எளிமையும்
உயர்ந்த எண்ணமும் ,பாதுகாப்பும் தரும்.
பல நாகரீகங்கள் அழிந்தாலும் அழியாமல்

 இருப்பது இந்திய நாகரீகமும் பண்பாடும்..
இந்த பண்பாடு அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
மாத,பிதா குரு தெய்வம்.
கூட்டுக்குடும்பம் சகிப்புத்தன்மை  தெய்வீகம் வளர்த்து

 வையகத்தை வாழ  வைக்கும்.
जय  जगत। वसुदैव   कुटुम्बकम।  सर्वे जनाम सुखिनोभवन्तु।














































அன்பே  ஆண்டவன்  பக்தர்களுக்கு
ஆஸ்தியே  பிரதானம் ஆட்சி ஆளர்  களுக்கு

 இறுதியில் இடுகாடோ சுடுகாடோ. இருவருக்கும்

உறுதிநிலை  உலகத்தில்.
மன்னர். மந்திரி பிரதமர் அனைவரும்
மண்ணில் மறைந்தாலும்
பக்தர்கள் அறநெறி ஆன்மீக வழிகாட்டியோர்
என்றும்  எக்காலத்தும் முக்காலமும்
அனைவரும் ஆராதிக்கும் ஆன்மீகத் தலைவர்கள்

Monday, May 11, 2015

அவர்கள் தந்த விலை மதிக்க முடியா ரத்தினங்கள்.

அன்புக்கும்  ஆண்டவனுக்கும் 

தொடர்பு உண்டு.

ஆஸ்திக்கும்  ஆண்டவனுக்கும் 

தொடர்பு  உண்டு. 

 ஆஸ்தி சேர்த் தோருக்கும் 

ஆண்டவனுக்கும்   நெருக்கம் அதிகம்.

ஆனால் ஆண்டவன்  அருளுக்கும் 

ஆசிக்கும் ஆத்ம திருப்திக்கும் 

அமைதிக்கும் ஆரோக்கியத்திற்கும் 

ஆஸ்தி -ஆண்டவன்  இரண்டுக்கும் தொடர்பு உண்டு.

ஆண்டவனையே நினைக்கும் பக்தன் 
பக்தனையே நினைக்கும் ஆண்டவன் 
எளிமையிலும் ஏழ்மையிலும் 
தானே உண்டு.
கபீர் ,துளசி ,மீரா ,ஆண்டாள் ,பக்த மீரா 

அனைவரும்  ஆஸ்திவிரும்பாமல்  ஆண்டவனையே 

அல்லும்  பகலும்   விரும்பும் 

உலகியல் விருப்பம் இல்லா பக்தர்கள்.
அவர்கள் காலப் பெட்டகங்கள். 
அழியா பொக்கிஷங்கள்.

அமைதி தரும் பக்தி இலக்கியங்கள் 
அவர்கள்   தந்த   விலை மதிக்க முடியா ரத்தினங்கள்.








Tuesday, May 5, 2015

 भगवान  वह तो   बागवान। 

रंगबिरंगे  फूल -फल  

 उनमें स्वाद भेद -सुगंध भेद ,

रंग बिरंगे पत्थर ,पानी मीठे ,खारा। 

वह भगवान बागवान की लीला विचित्र। 
मनुष्य में भी कितने  भेद ;
नाटा -लंबा ,काला -गोरा ,अति गोरा ,अति काला 
भाषा में भी  फर्क  कितने ,
नाच ,रंग ,गाना ,राग  बाजा ,वाद्य -यंत्रों में 
कितने भेद ; कितने मनोभाव ;
मेहनती ,आलसी ,सेवक,मालिक ,त्यागी ,भोगी ,रोगी ,
मनुष्य  की ध्वनि में कितने भेद ,
मधुर ,कठोर ,सुरीला ,मंद ,तीव्र 
भगवान  बागवान की लीला अनेक। 
दोदोस्ती -दुश्मनी ,क्षमाशील ,विनम्र ,
बदला ,जानी दुश्मन  न  जाने  
भगवान की लीला अनेक. 
दानी ,कंजूसी ,लोभी ,क्रोधी ,प्रेमी 
अति गहरे विचार करें तो हम हैं नादानी 
उनकी रचनाओं से;
वह तो भगवान बागवान चमत्कारी जादूगर;















Sunday, May 3, 2015

பாரினில் சிறந்த பக்தரே.

ஆண்டவனைத்  தேடி 
அண்டமெல்லாம் அலைந்து
 திரிந்தோர் உண்டு.

கண்டோர் யார் /?
அதிலும்  .சிலர் உண்டு.

அங்கிங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் 

இருக்கும் ஆண்டவனைஇருந்த  இடத்திலேயே 

கண்டு வியந்து விளையாடி மகிழ்ந்தோரும் உண்டு.

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் 

என்றே  அவனை நெஞ்சில் அமர்த்தி 

வியந்தொரும் உண்டு.
கண்ணின் கருவிழியை கட்டிலாக்கி 
கடவுளை அதில் தூங்கவைத்து 
கண்ணின் இரப்பையை கதவாக்கி மூடி 
தியானம் செய்தோரும்  உண்டு.

உண்மையில் ஆண்டவன் பக்தனைத்  தேடிவரும் 

பக்தி  செலுத்துவோர்  பாரினில் சிறந்த பக்தரே.

Saturday, May 2, 2015

அதில் வரும் பேரானந்தமே பிரம்மானந்தம்.

வையகத்தில்  இறைவனின்   இயக்கம் 

வியப்பினில் ஆழ்த்தும் உண்மை.

ஞானமளித்த தேவன்  நியாயம்  என்றான் ,

சத்தியம் என்றான்  கடமைஎன்றான் 

வையகத்தில் வாழ பொருள் வேண்டும் என்றான் 

பொருளுக்கு அர்த்தம் என்றான் 
அர்த்ததத்திற்கும்  பொருளுக்கும் 

அருள் பொருள் என்றான்.

பொருள் சேர்த்து வாழ்ந்தால் லௌகீகம்  என்றான்.

பொருளுடன் வாழ்ந்தால் அலௌகீகம்  என்றான்.


அருளும் பொருளும்  சேர்ந்த வாழ்க்கை அதிர்ஷ்டம் என்றான்.

அத்ருஷ்ட்  என்றால் பு லப்படாத  என்று பொருள்.

நமக்கே  புலப்படாமல் 
சிலருக்கு பொருள் சேரும்.
சிலருக்குப்   புகழ்   சேரும்.
சிலருக்கு  அருள் சேரும்.

சிலருக்கு வாழ்க்கையே பொருளற்று தோன்றும்.

சிலருக்கு  பொருளே  வாழ்க்கையாகத்  தோன்றும்.

பொருளுள்ளவனுக்கு   ஒரு வெறுமை .

பொருளற்றவனுக்கு   ஒரு வெறுமை 

நோய்தாக்கும்  சிலருக்கு 

சந்தான  பாக்கியம் தட்டும்.

அங்கு இங்கு என்று பிடிப்பில்லா வாழ்க்கையில் 

அமைதி  தேட மனம் அலைபாயும்.

அலைபாயும் மனதில் 
ஆனந்தமும் துக்கமும் 
மன நிறைவும் மனம்  நிறைவற்ற தன்மையும் 

பேரலையாகி  ஒரு கரையில் ஒதுக்கும் 

அதுவே தியானம் .
அதுவே  இறைவழிபாடு.
அதுவே ஆன்மீக நாட்டம்.

அருளும் அமைதியும் நாடும்.

மனம் ஒருநிலைப்பட முயற்சிக்கும்.

அதில் வரும் பேரானந்தமே பிரம்மானந்தம்.







எதிர்க்கதுணிவில்லா தேச பக்தர்கள்

நாடு சீரழிய  காரணம்

 மக்களின்  வாழ்க்கைத் தரம் உயர   மக்கள் 

எப்படியும் எதையும் செய்யலாம் என்ற எண்ணம் 

 எங்கும் சிபாரிசு ,பணம் ,லஞ்சம் ஊழல் 

.அதைவிரும்பும் வாக்காளர்கள் /

குழந்தைகளின்  பெற்றோர் /

அதிகாரிகளின் வாழ்க்கை ,
அரசியல்வாதிகள்  கோடிக்கணக்கில்
 செலவு செய்வதை ரசிக்கும் 
கேட்கும்  தலைவர்கள் 

விரும்பும்  பொதுமக்கள் 

பணம் கொடுத்தாலே வாக்கு என்று வாக்களிக்கும்  வாக்காளர்கள் 

நாட்டு துரோகிகள் 

இவைகளை எதிர்க்கதுணிவில்லா  தேச பக்தர்கள் 

துணிந்தவர்களை அழித்து  ஆனந்தம் காணும் 

கூலிப்படைகள் . போதும் நம் பாரத நாடு.
இன்னும் அயல்நாட்டு முதலீடு .
ஆலயங்களின் ஆஷ்ராமங்களின் தேவாலயங்களில் 

பதுங்கி இருக்கும் பக்தர்களின் காணிக்கைகள்.




Friday, May 1, 2015

இன்பமே !துன்பம் இல்லை.

இறைவன்  என்பவன்  யார் ?

இன்மையில் நமை தருபவன் இறைவன்.

இரை அளிப்பவன் இறைவன்.

பாலைவன ஜந்துக்கள் ,மிருகங்கள் 
பாலைவனக் கப்பல் ஒட்டகம் 
கல்லுக்குள் தேரை 
பனிப்ப்ரதேச   விலங்குகள் 
ஆழ்  கடல் அதிசயங்கள் 
ஆண்டவனின்  அல்லது இயற்கையின் விந்தைகள்.
காற்றிலேயே  வாழும் நுண் கிருமிகள்,

கடவுளின்   கருணையை  இயற்கையின் ஆற்றலை 

ஆழ்ந்து  சிந்திக்காத கண்ணுக்குக்குப் புலப்படா 
விந்தணு கருமுட்டையில் தோன்றிய மனிதன் 
இறைவனை இல்லை என்று கூறும் அறிவு 
விந்தையிலும் விந்தையே.
இறைவனை உணர்ந்து ஞானம்பெற்றால் 
இன்பமே !துன்பம் இல்லை.





Image result for DESERT ANIMALS CREATURESImage result for DESERT ANIMALS CREATURES பாலைImage result for DESERT ANIMALS CREATURESவன உImage result for DESERT ANIMALS CREATURES


யிரினங்கள்.