ஹனுமானின் பக்தி , ஞானம் ,வைராக்கியம் நீதி
நிறைந்த
நன்மை செய்யும் சொற்கள் கேட்டும்
ராவணன் சிரித்து,
இந்த குரங்கு எனக்கு
ஞான குருவாகி விட்டது.
துஷ்டனே! உன் மரணம் நெருங்கிவிட்டது.
நீச்சனே!எனக்கு பாடம் சொல்லிக்கொடுக்க
வந்துவிட்டாயா ? என்றாய்.
ஹனுமான் ஜீ சொன்னார் --
-நீ சொல்வதற்கு நேர் மாறாகத் தான் நடக்கும்.
மரணம் எனக்கல்ல,
உன்னருகில் வந்துவிட்டது.
உன்னுடைய பிரம்மை தான் அதிகம்.
நான் நேரடியாக தெரிந்து கொண்டுவிட்டேன்.
ஹனுமானின் கூற்றைக் கேட்டு
ராவணன் மிகவும் கோபப் பட்டான்.
உடனே இந்த முட்டாளைக்
கொன்றுவிடுங்கள்
என்று கத்தினான்.
உடனே அனைவரும் அவனை அடிக்க ஓடினர்.
அந்த சமயம் விபீஷணன்
மந்திரிகளுடன் அங்கே வந்தான்.
அவன் மிகவும் பணிவுடன் ,
தூதனை அடிப்பது நீதிக்கு விரோதமானது .
வேறு ஏதாவது தண்டனை கொடுக்கலாம் என்றான்.
எல்லோரும் விபீஷணின்
ஆலோசனையை ஆமோதித்தனர்.
இதைக்கேட்டு ராவணன் சிரித்து ,
இவனின் அங்கங்களை காயப்படுத்தலாம்.
குரங்குக்கு அதன் வால்
மிகவும் பிடித்தமானது.
வாலில் துணி சுற்றி
எண்ணெயில் நனைத்து
நெருப்பு வைத்துவிடுங்கள் என்றான்.
வால் இல்லாமல் , இந்த குரங்கு சென்றால்,
இவனுடைய முட்டாள் எஜமானன்
இங்கு வருவான்.
அவனைப் பற்றி இவன் கூறிய
மகிமையை
நேரில் பார்க்கலாம்.
என்று கட்டளை இட்டான்.
No comments:
Post a Comment