Saturday, October 1, 2016

முதியோர் தின வாழ்த்துக்கள்.

இன்று முதியோர் தினம்.

அனைவருக்கும் முதியோர்
தின வாழ்த்துக்கள்.
________________________________________________________________________________________________________________________
உழைத்து, தன் வாரிசுகளை படிக்கவைத்து

தன்னலம்இல்லாமல் வாழ்ந்து வரும் முதியவர்கள்

அன்புகாட்டும் பிள்ளைகள், 
ஆதரவளிக்கும்பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்.

முதியோர் இல்லத்தில் விட்டு அடிக்கடி சென்றுபார்க்கும்

மருமகள்களுக்கு வாழ்த்துக்கள்.

பெற்றோரா? நானா? என்று மாமியார், மாமனாரை

பார்க்கத்தடுக்கும் மருமகள்களுக்கும் வாழ்த்துக்கள்.
மிக்க அன்பு/
 மிக்க வெறுப்பு/
 இரண்டுங்கெட்டான் நிலை
பணம்/ ஏழ்மை/ ஆரோக்கியமின்மை/
என்ற பல சூழலில் வாழும் முதியோர்கள்,
இறுதியில் இறைநாமமே ஜபித்து
இறை அருளலால் ஆரோக்கியமாக வாழ
இறைவனிடம் வேண்டுகோள்.
இறைவா! முதுமை தான் மனிதனுக்கு
அவன் செயல்களுக்கு கர்ம வினைகளுக்கு ஏற்ப
 இவ்வுலகம் சுவர்க்கம் நரகம்என்ற தண்டனை.
முதுமையில் தான் அதிக நாவடக்கம்

பேச்சிலும், சாப்பாட்டிலும் வேண்டும்.
இறைவன் மனிதர்களுக்கு கர்மவினகளுக்கு
ஏற்ப சந்தான பாக்கியம் அளிக்கிறார்.
ஒரே மகனைப் பெற்றவர்களுக்கு இந்த கலியுகத்தில்

அன்பு என்பது பண வசதி தான்.

ஒரே மகன் வெளிநாட்டில்.

கலியுகத்தின் வரம் வலைத்தளம்.

நேரில் பார்த்து பேசுவதுபோல்.

வானப்ப்ரஸ் த/ சந்நியாச நிலை.

நம்முன்னோர்களின் ஞானம்.

பிரம்மச்சர்யம்-க்ருஹச்தம்/ வானப்ரஸ்தம். சந்நியாசம்.
இதுவே யதார்த்தம்.

குழந்தைகளை வாழ்த்துங்கள்.

சில முதியவர்கள் சபிக்கிறார்கள்.
அது வேண்டாம்.
நமக்கு முதுமையில் ஆதரவு/ ஆதரவற்ற நிலை
நமக்கு ஆண்டவனருள்.
குழந்தையற்ற முதியவர் நிலை.
எந்த நிலையிலும்
நம் நிலை நம்மிலும் மெலியாரை விட உயர்ந்தது என்று

இறைவழிபாட்டுடன் அனைவரையும் வாழ்த்தி வாழ்வோம்.

No comments: