Wednesday, October 26, 2016

ராமசரிதமானஸ் ----சுந்தரகாண்டம் --பக்கம் பத்து

    தேவர்களும்  திக்கு பாலகர்களும்  கைகூப்பி

   பயத்துடன் ராவணனைப்     பார்த்துக்கொண்டிருந்தனர்.

ராவணனின் வீரத்தைக்  கண்டும்

ஹனுமான்  மனதில்   எள்ளளவும்

பயம்  ஏற்படவில்லை.

பாம்புகளின்  கூட்டத்திற்கு

 நடுவில்  இருக்கும்  கருடன்  போன்று

 பயமின்றி இருந்தார்.

     ஹனுமானைப்பார்த்து   ராவணன்
  கடும்  சொற்களைக்  கூறி சிரித்தான்.
 பிறகு  புத்திரனின்
வதத்தைநினைத்து   வருத்தமடைந்தான்.

 பிறகு    அனுமானிடம் -- வானரா!நீ  யார் ?
உனக்கு பக்கபலமாக  இருப்பவர்  யார் ? வனங்களை   அழித்துவிட்டாய். 

 என்  புகழ்  மற்றும்  பெயரைக்  கேட்டதில்லையா ?
  பைத்தியக்காரா !
நீ  சிறிதளவும்  அச்சமின்றி  இருக்கிறாய். 

 அரக்கர்கள்   செய்த  குற்றம் என்ன?
முட்டாளே! உனக்கு  உயிர்  பயம்  இல்லையா ?

அனுமான்  கூறினான் :--

 
  நான்   தூதன். யார்  தூதன் ? தெரியுமா  ? ராவணா !

பிரம்மா , விஷ்ணு ,மஹேஷ்   மற்றும்

  உலகில்  அனைத்தையும்

 சிருஷ்டிப்பவரின்  தூதன்.
உன்னைப்போன்ற  கொடியவர்களை
  வதம்  செய்கின்றவரின்  தூதன்.
அனைத்து  உலகத்தையும்

 தலையில்  தாங்குகின்றவரின்
தக்க  பலத்துடன்  வந்துள்ளேன்.

அவர்  தேவர்களை ரட்சிக்க பலவித
  அவதாரம் எடுப்பவர்.
உன்னைப்போல  முட்டாள்களுக்கு
தண்டனை  அளிப்பவர்.
 சிவதனுஷை  முறித்தவர்.
அனைத்து  அரசர்களின்
கர்வத்தை  அளித்தவர்.
கரன் , தூஷன் ,திரிசடை , வாலி

போன்ற   வல்லமை
  படைத்தவர்களைக்  கொன்றவன்.
 ஈடு  இணையற்ற பல சாலி.
அவரின்  மிகச்சிறிய  பலம் கொண்டு
 நீ அகில  உலகையும்  வென்றுவிட்டாய்.

அவரின் மனைவியை  ஏமாற்றி
  கடத்தி வந்துவிட்டாய்.
நான்  அவரின்  தூதர்.

  நான்  உன்  வல்லமையை    நன்கே அறிவேன்.

சஹஸ்ரபாஹுவுடன்  போரிட்டாய்.
 வாலியை  வென்று  புகழ்  பெற்றாய்.
   வாயுபுத்திரனின் இதயத்தைத்  தொடும்
பதிலைக் கேட்டு ராவணன்  சிரித்து

 பேச்சின்  போக்கை  மாற்றினான்.

    வாயு புத்திரன்  கூறினான் --

அரக்கர்களின்  தலைவரே!
எனக்குப்  பசி  எடுத்தது.
நான்  பழங்கள்  சாப்பிட்டேன்.
வானரங்களின்  குணப்படி  மரங்களை  ஒடித்தேன்.
மாயைகளின்  தேவரே!
  உயிர் அனைவருக்கும்  மிகவும்  பிரியமானது.  தீயவழியில்  செல்கின்ற  அரக்கர்கள்
 என்னை  அடித்தனர்.
 நானும் தற்காப்புக்காக  தாக்கினேன்.
என்னை  அடித்தவர்களை  அடித்தேன்.
 இதற்காக  உன்  மகன்  என்னைக்  கட்டினான். நானும் என் எஜமானனின்
 சேவைக்காக  வந்துள்ளேன்.  இதில்
எனக்கு  எந்த வெட்கமும்  கிடையாது.

 ராவணா! நீ  உன்  ஆணவத்தை விடுத்து
 நான்  சொல்வதைக்கேள்.

நீ உன் குலத்தைப் பற்றி எண்ணிப்பார்.
 பிரமையை விட்டுவிடு.
பக்தர்களின்  அச்சங்களைப் போக்கும்
பகவானை  பஜனை செய்.
அனைத்து  ஜீவராசிகளையும்
  கொல்லும்  காலனும்
அவரைக்கண்டு  அஞ்சுவான்.
அவரை  பகைத்துக்  கொள்ளாதே.
  அன்னை  ஜானகியை  அனுப்பிவிடு.

கரனின்  விரோதி  ஸ்ரீ ரகுநாதர்
,சரணாகத் வத்சலர்,
சரணடந்தவரைக்  காப்பவர்.
அன்பானவர்.
நீ  சரணடைந்தால்
 உனக்கும்  அருள் புரிவார்.

  நீ  ஸ்ரீ  ராமரின்  தாமரைப் பாதங்களை  இதயத்தில் வைத்து  சரணடைந்து  விடு.
 நீ  நிரந்தரமாக  ஸ்ரீ லங்காவை
 நிலையாக ஆட்சி  செய்.
 ரிஷி   புலச்த்தியரின்  புகழ்
 நிலவைப்போல்
களங்கமற்றது.
 அந்த  நிலவில் நீ   ஒரு  களங்கமாக  விளங்காதே.
.
  ஆணவம்  மோகத்தை  விட்டு
 ராம  நாமத்தை ஜபி.

 சிந்தித்துப்பார்.
 தேவர்களின்  விரோதியே !
எல்லா நகைகளாலும்
 அலங்கரிக்கப்பட்ட  பெண்
 ஆடையின்றி  நிர்வாணமாக  இருந்தால்
 சோபிக்க மாட்டாள்.

  ராமனை  விரும்பா
 மனிதனின் சொத்து
அதிகாரம்  அழிந்துவிடும்.
 அவைகளைப்  பெறுவதும்
  பெறாததற்குச்  சமம்.

மூல ஊற்று இல்லா நதிகள்
 மழைகாலத்தில்  மட்டும்  நீர் ஓடும்.
 வெயில்  காலங்களில் 

காய்ந்து விடும் .

  நான்  பிரதிக்ஞை  செய்து  சொல்கிறேன் --

ராமனை நேசிக்காத  விரோதிகள்
   தப்பிக்க முடியாது.
அவர்களை  எந்த  சக்தியாலும்
 காப்பாற்ற  முடியாது,

  அறியாமையால் உண்டாகும்
  மோகம்  மிகவும்  
 மனத்துயரம்  அளிக்கக்   கூடியது.
இருள்மயமான  ஆணவத்தை  விட்டு  விடு.
 பாற்கடல் பள்ளிகொண்ட
 பெருமான்  ராமனைத்துதி.




No comments: