தேவர்கள் வாயு புத்திரன்
ஹனுமான் செல்வதை பார்த்தனர்.
ஹனுமானின் நுண்ணறிவு ,
பலம் போன்றவற்றை அறியவும்
சோதிக்கவும் ,
சுரசா என்ற சர்ப்பங்களின்
அம்மாவை அனுப்பினர்.
சுரசா ஹனுமானிடம் கூறினார் :-
இன்று தேவர்கள் உணவுக்காக உன்னை உணவாக அளித்துள்ளனர்.
இதைக் கேட்டதும் வாயுபுத்திரனான ஹனுமான் சொன்னார்:--
நான் சென்று சீதையின் இருக்குமிடம் அறிந்து ராமனுக்கு அறிவித்துவிட்டு திரும்பி வருகிறேன்,
என்னை சாப்பிட்டு பசி ஆற்றிக்கொள் என்றார்.
நான்சத்தியம் செய்கிறேன்.
இப்பொழுது என்னை செல்ல அனுமதி கொடு.
ஆனால் சுரசா அனுமதி தரவில்லை.
உடனே ஹனுமான் என்னை சாப்பிடு என்றார்.
பாம்பு உடனே நான்கு மைல் அகலத்திற்கு வாயைத் திறந்தது.
உடனே ஆஞ்சநேயர் தன் உருவத்தை எட்டு மைல்
அகலத்திற்கு
உயர்த்திக்கொண்டார்.
உடனே சுரசாவின் வாய்
பதினாறு மைல் அகலத்திற்கு மாறியது.
ஆஞ்சநேயர் முப்பத்திரண்டு மைல் உயரமாக மாறினார்.
சுராசாவின் வாய் அகலம் அதிகமாக அதிகமாக
ஆஞ்சநேயரின் உயரமும் அதற்கு ஏற்றவாறு
இரண்டு மடங்காகியது.
சுராசா நூறுமைல் அகலத்திற்கு வாய் திறந்ததும்
ஹனுமான் மிகச் சிறிய உருவமெடுத்தார்.
அவர் சுரசாவின் வாயில் நுழைந்து வெளியே வந்தார்.
பிறகு வணங்கி அனுமதி கேட்டார்.
அப்பொழுது சுரசா சொன்னது ---
தேவர்கள் உங்கள் அறிவுத் திறனையும்
பலத்தையும் சோதிக்கவே என்னை அனுப்பினர்.
நீ ராமர் கொடுத்த காரியத்தை செய்து முடிததுவிடுவாய்.
நீ அறிவிலும் பலத்திலும் மிகச் சிறந்தவன்.
பின்னர் சுரசா ஹனுமனுக்கு ஆசி வழங்கி சென்று விட்டது.
ஹனுமானும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்.
கடலில் ஒரு ராக்ஷசி வசித்து வந்தாள்.
அவள் தன் மாயா சக்தியால்
பறக்கும் பறவையின் நிழலைப் பற்றியே
ஆகாயத்தில் பறக்கும் பறவைகளைப் பிடித்து விடுவாள்.
இப்படியே ஆகாயத்தில் பரப்பவைகளைப் பிடித்து
ஆகார மாக்கிக் கொள்வாள்.
இப்பொழுது ஹனுமானைப்பிடிக்கவும்
அதே முறையை கையாண்டாள்.
ஆனால் , ஹனுமான் உடனே
அவளின் வஞ்சனையைத் தெரிந்துகொண்டார்.
வாயு புத்திரன் அறிவும் திறனும் கொண்டவர்.
அந்த ராக்ஷஸியை வதம் செய்தார்.
கடல் கடந்து சென்றார்.
அங்கு சென்றதும் வனத்தின் அழகைக் கண்டார்.
அங்குள்ள மலர்களில் வண்டுகள் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தன.
பலவித மரங்கள் பழங்கள் -பூக்களால் பூத்துக்குளிங்கின.
அந்த வனத்தின் அழகு கண்டு ஆஞ்சநேயர் மனமகிழ்ந்தார்.
எதிரில் ஒரு பெரிய மலையைப் பார்த்து ஆஞ்சநேயர்
அச்சத்தை விட்டு ஓடி அதன் மேல் ஏறினார்.
இந்த காட்சியைக் கண்டு சிவபகவான் பார்வதியிடம் சொன்னார் --
இதில் வானரனான ஆஞ்சநேயருக்கு எந்த சிறப்பும் இல்லை.
இதில் கடவுளின் பிராதபம் உள்ளது.
அந்த சக்தி எமனையும் சாப்பிட்டுவிடும்.
ஆஞ்சநேயர் மலைமேல் நின்று ஸ்ரீ லங்காவைப் பார்த்தார்.
மிகப்பெரிய கோட்டை. .
சொல்லால் விவரிக்க முடியாது.
அது மிக உயரமான மதில் சுவர் கொண்டது.
மதில் சுவர்கள் தங்கம் போல் மின்னின.
No comments:
Post a Comment