Saturday, October 22, 2016

ராமசரித மானஸ்--சுந்தரகாண்டம் -௧௧,௧௨,௧௩,௧௪,௧௫,ப -3

  விசித்திரமான  மணிகள் பதிக்கப்பட்ட தங்க மதில்  சுவர்.

அதற்குள் அதிக அழகான  வீடுகள், , 

 நாற்சந்திகள்,கடைத்தெருக்கள்,

மிகவும்  அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

அங்கு  எண்ணிக்கையில்  அடங்கா  யானைகள்

,குதிரைகள், கோவேறிக்கழுதைகள்,  காலாட்படைகள்,தேர்கள்.

பலவடிவங்களில்  அரக்கர்   கூட்டங்கள்,

 பலம் பொருந்திய  படைகள் வர்ணிக்க முடியாத

 அளவிற்கு  காணப்பட்டன.

  வனங்கள், தோட்டங்கள்,பூந்தோட்டங்கள், குளங்கள் , கிணறுகள்,

 படிகளுள்ள கிணறுகள் ஆகியவை

மிகவும் அழகாக  காட்சி அளித்தன.

மனிதர்கள், நாகங்கள்,தேவதைகள்,கந்தர்வர்கள், முனிவர்களின்

மனங்களையும்    கவரும் அழகு.

மலையைப்போல் பெரிய  உடல் கொண்ட

மல்யுத்த வீரர்களின்  அறைகூவல்கள்.

 பெரிய  மைதானத்தில் மோதிக்கொண்டனர் .

    அச்சம்  தரும்  உடல்  அமைப்புள்ள  போர்வீரர்கள்

நகரின்  அனைத்து  திக்குகளையும்

மிகவும்  எச்சரிக்கையுடன் காவல் காத்துவந்தனர்.

சில பகுதிகளில்  கொடிய  அரக்கர்கள் ,

 எருமைகள், மனிதர்கள்,பசுக்கள், கழுதைகள்,ஆடுகள்  ஆகியவற்றை

 சாப்பிட்டுக்  கொண்டிருந்தனர்.

 ராமரின்  அம்புகள் இவர்களை வதம் செய்வதின் முன் அறிவிப்பாக

துளசிதாசர்  இவர்களைப்பற்றி  கூறுகிறார்.

  நகரின் அதிக  எண்ணிக்கையில் உள்ள  காவலர்களைக்கண்டதும்

ஹனுமான்  சிறியவடிவில்   இரவில்   நகரத்திற்குள்

 செல்ல  முடிவெடுத்தார்.

  ஹனுமான்  கொசு  போன்று சிறிய  வடிவுகொண்டு

ஸ்ரீ ராமரை தியானித்துக்கொண்டே  ஸ்ரீலங்கா  நகருக்குள்  சென்றார்.

  ஸ்ரீலங்கா   நகரின்  நுழைவாயிலில் லங்கிணி என்ற

 அரக்கி  காவலில்  இருந்தாள்.

அவள்  ஹனுமானைத்தடுத்து  ,

என்  அனுமதியின்றி  எங்கே செல்கிறாய்  என்று வினவினாள்.

சொன்னாள்--முட்டாளே!நீ  என்  ரகசியத்தை  அறியவில்லை.

திருடர்கள்  அனைவரும் எனக்கு  உணவுப்பொருள்கள்.

மகாவீரரான   ஹனுமான்  எதுவும்  பேசாமல்  ஒரு குத்துவிட்டார்.

அவள் இரத்தம்  கக்கிக்கொண்டே  கீழே விழுந்தாள்.

பிறகு  மீண்டும்  எழுந்தாள்.

பயந்துகொண்டே  கைகூப்பி வேண்டினாள்.

அவள்  சொன்னாள்--

ராவணனுக்கு  பிரம்மா  வரம் அளித்தபோது  சொன்னார்,

நீ ஒரு குரங்கால்  தாக்கப்பட்டு

 குழம்பும்  நாள்.


   அரக்கர்களுக்கு அழிவுநாள் என்று தெரிந்துகொள்.


நான் மிகவும்  புண்ணியம் செய்துள்ளதால்

ராமரின் தூதரை உங்களை பார்த்துவிட்டேன்.

  ஒரு   நொடிப்பொழுதில்  நல்லவர்களை

 சந்திக்கும்  சுகம்,மகிழ்ச்சியை  திராசின்   ஒருதட்டிலும்

சுவர்க்கம், மோக்ஷம்  இரண்டையும் ஒரு தட்டிலும்   வைத்தாலும்

 நல்லவர்கள் ஒரு  நொடி சந்திக்கும்

 மகிழ்ச்சிக்கு  மோக்ஷம்   சமமாகாது.

 அயோத்யாவின் அரசர் ஸ்ரீ  ரகுநாதரை மனதில்  வைத்து

நகருக்குள்  நுழைந்து  அனைத்து செயலையும்  செய்யுங்கள்.

அப்பொழுது  விஷமும்  அம்ருதமாகும்.

எதிரியும்  நண்பனாவான்.

கடலின்  ஆழம்   பசுவின்  குழம்பின் ஆழம் ஆகிவிடும்.

நெருப்பில்  குளிர்ச்சி  வந்துவிடும்.


மேலும்  கருடரே,
 ராமரின்   அருள்   பெற்றோருக்கு

  சுமேரு   மலை ஒரு தூசிபோல்  ஆகிவிடும்.

ஹனுமான்  மிகச்  சிறிய  வடிவெடுத்து  நகருக்குள்

நுழைந்தார்.

 அவர்  அங்குள்ள  ஒவ்வொரு மாளிகையிலும்    சீதையைத்   தேடினார்.

அங்கே  அதிக எண்ணிக்கையில்  போர்  வீரர்களைக்  கண்டார்.

பின்னர்  சொற்களால்   வர்ணிக்க  முடியா  அழகுள்ள

இராவணனின்  அரண்மனையை  அடைந்தார்.

   ஹனுமான்  இராவணன்  படுத்திருப்பதைப்  பார்த்தார்.

ஆனால்  அங்கு  சீதை  தென்படவில்லை.

பிறகு  ஒரு  மாளிகை தென்பட்டது.

அது  இறைவனின்  ஆலயமாகும்.

அங்கு  ஸ்ரீ ராமரின்  அம்பு-வில்  அடையாளங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

அதன் அழகு வர்ணனைக்கு  அப்பால்  இருந்தன.

 புதிய  துளசிச் செடிகள்  அதிகமாக  இருப்பதைக்  கண்டார்.

குரங்கரசர்  ஹனுமான்  மிகவும் ஆனந்தமடைந்தார்.

  இலங்கை   அரக்கர்கள்  வாழும்  இடம் .

இங்கு  நல்லவன் எங்கே  வாழ்கிறான் ?

பலவித மன  சர்ச்சையில்  இருக்கும்  பொது

விபீஷணன்  எழுந்தார்.








No comments: