Sunday, October 2, 2016

கலியுகம்


    பக்தி  என்பது   இறைவனின்  நினைவை  மட்டுமே


   முன்நிலைப்  படுத்தவேண்டும்.

ஆனால்   இன்றைய  நிலை  என்ன?

ஆடம்பரங்கள்  அதிகம்.

ஆலய  தரிசனங்கள்   செய்ய    குடும்பத்துடன்  செல்லும்  பக்தர்கள்


கூட்டமாகச்  செல்லும்  பக்தர்கள்  இறை நாமம்   மட்டுமே  இருக்கும்.

இன்று  எந்த  உணவு    விடுதியில்  சாப்பிடலாம் .
எந்த  தங்கும்  விடுதி ,
யாரின்  பரிந்துரையால்  துரித  தரிசனம்,

முக்கியஸ்தர்களின்  பரிந்துரை மட்டும்  சிறப்பு  அனுமதிச்  சீட்டு  கிட்டுமா ?

என்ற  லௌகீக   எண்ணங்கள் சர்ச்சைகள்  அதிகம்.

அரோஹரா,  கோவிந்தா  என்ற  முழக்கங்கள்  குறைவு.

 பக்தர்களின்  பொருளாதாரத்திற்கு   ஏற்ற   மிக அருகில் , சற்று  அருகில் ,
சற்று   தொலைவில் , மிக  தொலைவில்   அதுமட்டுமல்ல
கர்ப்பக்ரகத்தின்  முன்னால்  நிற்கும்  நேரமும்  தரத்திற்கு  ஏற்றவாறு.

  ஆகையால்  வேண்டுதல்   பணம்  பெற  என்ற  நிலையில்  மாறுகிறது.

ஆலயங்களில்  வணிகவளாகம்.  அதில் பொருளின் தரம் , விலை  அனைத்திலும்   ஏமாற்றம்.

 உள்ளே  தேங்காய்  உடைப்பு  வேறு.

இத்தனையும்  அறிந்தும் புரிந்தும்  தெளிந்தும்  செல்லும்  கூட்டம்.

இது  எதிர்கால  சமுதாயத்தில்  பணம் உள்ளோருக்கே  ஆலய தரிசனம்

என்ற  நிலைக்கு   மாறி  ஜாதி  போய்  பொருளாதாரம்

இறைவனுக்கு  முன்  எல்லோரும்  சமம்  என்ற  நிலையை

மாற்றுவதாகாதா?

 சிந்திப்பீர்.



No comments: