ஹனுமான் சீதையிடம் தான்
யார் என்று கூறினார்.
அம்மா ஜானகி அவர்களே ---நான் ராம தூதர்.
நான் சொல்வது சத்தியம் .
இந்த மோதிரத்தை நான் தான் கொண்டுவந்தேன்.
கருணைக்கடலான ராமர் என்னை அறிந்துகொள்ளத்தான்
இந்த மோதிரத்தை அளித்தார்.
இது தான் ஆதாரம்.
சீதை கேட்டார்--
வானரருக்கும் மனிதருக்கும்
எப்படி நட்பு ஏற்பட்டது?
ஹனுமார் எல்லா விவரங்களையும் சொன்னார்.
ஹனுமாரின் ஒவ்வொரு சொல்லும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. அவர் ஹனுமானை மனம் ,
வாக்கு,செயலால் கருணைக்கடல் ராமரின் தாசர் என்பதை தெரிந்துகொண்டார்.
இறைவனின் தாசர் என்றதும் ஆழ்ந்த அன்பு
ஏற்பட்டது. உடலும் மனதும் ஆனந்தமடைந்தன.
கண்களில் ஆனந்தக்கண்ணீர் வழிந்தோடியது.
ஹனுமான் அவர்களே! பிரிவுக்கடலில் மூழ்கிய எனக்கு கப்பல் போன்று நீர் கிடைத்துவிட்டீர்.
தியாகியே! எனது பிரபு மற்றும் லக்ஷ்மணனின்
நலத்தைக்கூறு.
எனது பிரபு மென்மையான
மனம் படைத்தவர்.
தயை நிறைந்தவர்..
அவர் ஏன் இப்படி இரக்கமற்ற
கொடியவர் ஆனார் ?
சீதை மிகவும் வருத்தத்துடன் சொன்னாள்--
தொண்டர்களுக்கு நலம்
அளிப்பது அவர் இயற்கை குணம்.
அவருக்கு என் நினைவு உள்ளதா ?
அவரைப்பார்த்து என் மனம் குளிருமா ?
கண்கள் மகிழுமா ?
சீதையால் துன்ப மிகுதியால்
பேசமுடியவில்லை.
கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது .
என் நாதர் என்னை மறந்துவிட்டார் என்று புலம்பினார்.
சீதையின் துயரம்
போக்க மிக மென்மையாகவும்
பணிவாகவும் ஹனுமார் சொன்னார் --
அன்னையே!
பிரபு தன் தம்பி லக்ஷ்மணனுடன் நலமே.
உங்கள் துன்பத்தால்
அவர் வருத்தமுடன் உள்ளார்.
உங்கள் மீது அதிக அன்புவைத்துள்ளார்.
நீங்கள் தைரியமாக
ஸ்ரீ ராமரின் செய்தியைக் கேளுங்கள்.
இதைக் கூறும் போதே அன்பு மிகுதியால்
ஆஞ்சநேயரின் கண்களில் இருந்து
கண்ணீர் வழிந்தது.
ராமர் சொன்னார் --சீதையே!
உன் பிரிவால்
எனக்கு எல்லாமே
அனுகூலமற்றதாகி விட்டது.
மரங்களின் துளிர் இலைகள் கூட
நெருப்புபோல் ஆகிவிட்டது.
இரவு எமனின் இரவாகி விட்டது.
நிலவும் சூரியனைப்போல் சுட்டெரிக்கிறது.
தாமரைகளின் வனம் கூட
ஈட்டிபோல் துன்புறுத்துகிறது.
நன்மைதருவன எல்லாம்
துன்பம் தருவதாகிவிட்டது.
மணமும் குளிர்ச்சியும் மேன்மையும் உள்ள காற்று கூட
விஷமுள்ள பாம்பின் சீற்றம்போல் உள்ளது.
மனத்தின் துன்பத்தை
வெளியிட்டால் துயரம் குறையும் .
யாரிடம் சொல்வது?
உனக்கும் எனக்கும் உள்ள
அன்பின் தத்துவம் எனது
மனதிற்குத்தான் தெரியும்.
மேலும் அந்த மனம்
சதாசர்வகாலமும் உன்னிடமே உள்ளது.
பிரபுவின் இந்த செய்தியைக் கேட்டதும் சீதையின் மனதில் அன்பு பெருகியது.
சீதை தன் மெய்மறந்து ராமரின்
நினைவில் மூழ்கினாள்.
அனுமான் , அன்னையே!
ராமரை நினையுங்கள்.
தொண்டர்களுக்கு சுகம் தரும் ராமர்
நலம் தருவார்.
நான் சொல்வதைக்கேளுங்கள்.
கோழையாக இருக்காதீர்கள்.
அரக்கர்களின் கூட்டம்
விளக்கு பூச்சிகள் போன்றது.
ராமரின் பானங்கள் நெருப்பு.
அவர்கள் பொசுங்கிவிடுவார்கள்.
தைரியமாக இருங்கள்.
.உங்கள் செய்தி ராமர் அறிந்தால்
சற்றும் தாமதிக்க மாட்டார்.
அவர். சூரியன்.
இங்கு வந்ததும்
இருள் போன்ற அசுரர்கள்
அழிந்துவிடுவார்கள்.
அன்னையே!நான் நினைத்தால்
உங்களை அழைத்துச் செல்லமுடியும்.
ஆனால் ராமரின் கட்டளை அதுவல்ல.
அன்னையே!சிலநாள் பொறுத்திருங்கள்.
ராமர் வானரங்களுடன் இங்கு வருவார்.
அரக்கர்களை அழித்து
உங்களை அழைத்துச் செல்வார்.
நாரதர் போன்ற ரிஷிகளும்
முனிவர்களும் அவரைப் புகழ்வார்கள்.
யார் என்று கூறினார்.
அம்மா ஜானகி அவர்களே ---நான் ராம தூதர்.
நான் சொல்வது சத்தியம் .
இந்த மோதிரத்தை நான் தான் கொண்டுவந்தேன்.
கருணைக்கடலான ராமர் என்னை அறிந்துகொள்ளத்தான்
இந்த மோதிரத்தை அளித்தார்.
இது தான் ஆதாரம்.
சீதை கேட்டார்--
வானரருக்கும் மனிதருக்கும்
எப்படி நட்பு ஏற்பட்டது?
ஹனுமார் எல்லா விவரங்களையும் சொன்னார்.
ஹனுமாரின் ஒவ்வொரு சொல்லும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. அவர் ஹனுமானை மனம் ,
வாக்கு,செயலால் கருணைக்கடல் ராமரின் தாசர் என்பதை தெரிந்துகொண்டார்.
இறைவனின் தாசர் என்றதும் ஆழ்ந்த அன்பு
ஏற்பட்டது. உடலும் மனதும் ஆனந்தமடைந்தன.
கண்களில் ஆனந்தக்கண்ணீர் வழிந்தோடியது.
ஹனுமான் அவர்களே! பிரிவுக்கடலில் மூழ்கிய எனக்கு கப்பல் போன்று நீர் கிடைத்துவிட்டீர்.
தியாகியே! எனது பிரபு மற்றும் லக்ஷ்மணனின்
நலத்தைக்கூறு.
எனது பிரபு மென்மையான
மனம் படைத்தவர்.
தயை நிறைந்தவர்..
அவர் ஏன் இப்படி இரக்கமற்ற
கொடியவர் ஆனார் ?
சீதை மிகவும் வருத்தத்துடன் சொன்னாள்--
தொண்டர்களுக்கு நலம்
அளிப்பது அவர் இயற்கை குணம்.
அவருக்கு என் நினைவு உள்ளதா ?
அவரைப்பார்த்து என் மனம் குளிருமா ?
கண்கள் மகிழுமா ?
சீதையால் துன்ப மிகுதியால்
பேசமுடியவில்லை.
கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது .
என் நாதர் என்னை மறந்துவிட்டார் என்று புலம்பினார்.
சீதையின் துயரம்
போக்க மிக மென்மையாகவும்
பணிவாகவும் ஹனுமார் சொன்னார் --
அன்னையே!
பிரபு தன் தம்பி லக்ஷ்மணனுடன் நலமே.
உங்கள் துன்பத்தால்
அவர் வருத்தமுடன் உள்ளார்.
உங்கள் மீது அதிக அன்புவைத்துள்ளார்.
நீங்கள் தைரியமாக
ஸ்ரீ ராமரின் செய்தியைக் கேளுங்கள்.
இதைக் கூறும் போதே அன்பு மிகுதியால்
ஆஞ்சநேயரின் கண்களில் இருந்து
கண்ணீர் வழிந்தது.
ராமர் சொன்னார் --சீதையே!
உன் பிரிவால்
எனக்கு எல்லாமே
அனுகூலமற்றதாகி விட்டது.
மரங்களின் துளிர் இலைகள் கூட
நெருப்புபோல் ஆகிவிட்டது.
இரவு எமனின் இரவாகி விட்டது.
நிலவும் சூரியனைப்போல் சுட்டெரிக்கிறது.
தாமரைகளின் வனம் கூட
ஈட்டிபோல் துன்புறுத்துகிறது.
நன்மைதருவன எல்லாம்
துன்பம் தருவதாகிவிட்டது.
மணமும் குளிர்ச்சியும் மேன்மையும் உள்ள காற்று கூட
விஷமுள்ள பாம்பின் சீற்றம்போல் உள்ளது.
மனத்தின் துன்பத்தை
வெளியிட்டால் துயரம் குறையும் .
யாரிடம் சொல்வது?
உனக்கும் எனக்கும் உள்ள
அன்பின் தத்துவம் எனது
மனதிற்குத்தான் தெரியும்.
மேலும் அந்த மனம்
சதாசர்வகாலமும் உன்னிடமே உள்ளது.
பிரபுவின் இந்த செய்தியைக் கேட்டதும் சீதையின் மனதில் அன்பு பெருகியது.
சீதை தன் மெய்மறந்து ராமரின்
நினைவில் மூழ்கினாள்.
அனுமான் , அன்னையே!
ராமரை நினையுங்கள்.
தொண்டர்களுக்கு சுகம் தரும் ராமர்
நலம் தருவார்.
நான் சொல்வதைக்கேளுங்கள்.
கோழையாக இருக்காதீர்கள்.
அரக்கர்களின் கூட்டம்
விளக்கு பூச்சிகள் போன்றது.
ராமரின் பானங்கள் நெருப்பு.
அவர்கள் பொசுங்கிவிடுவார்கள்.
தைரியமாக இருங்கள்.
.உங்கள் செய்தி ராமர் அறிந்தால்
சற்றும் தாமதிக்க மாட்டார்.
அவர். சூரியன்.
இங்கு வந்ததும்
இருள் போன்ற அசுரர்கள்
அழிந்துவிடுவார்கள்.
அன்னையே!நான் நினைத்தால்
உங்களை அழைத்துச் செல்லமுடியும்.
ஆனால் ராமரின் கட்டளை அதுவல்ல.
அன்னையே!சிலநாள் பொறுத்திருங்கள்.
ராமர் வானரங்களுடன் இங்கு வருவார்.
அரக்கர்களை அழித்து
உங்களை அழைத்துச் செல்வார்.
நாரதர் போன்ற ரிஷிகளும்
முனிவர்களும் அவரைப் புகழ்வார்கள்.
No comments:
Post a Comment