ஆஞ்சநேயர் சீதையை முதன் முதலில்
பார்த்தபோது சீத தேவியின் கண்கள்
பாதங்களையே பார்த்துக்கொண்டிருந்தன .
மனம் ராமரின் பாத கமலங்களையே
நினைத்துக் கொண்டிருந்தது.
ஜானகியின் துக்கத்தைப் பார்த்து
வாயுபுத்திரன் மிகவும் துயரடைந்தார்.
ஹனுமான் மரங்களின் இலைகளில்
தன்னை மறைத்துக்கொண்டு
என்ன செய்யலாம் என்ற யோசனையில் ஆழ்ந்தார்.
அப்பொழுது ராவணன் தன்னை
நன்கு அலங்கரித்துக்கொண்டு
பெண்களுடன் அங்குவந்தார்.
அந்த தீய குணமுள்ள இராவணன் சீதையிடம்
சாம,தான ,தண்ட ,பயம்.
போன்ற அனைத்து முறைகளையும் கையாண்டான்.
மண்டோதரி மற்றும் ராணிகளை சீதைக்கு அடிமை ஆக்குவேன்
என்று வாக்களித்தான்.
ஒருமுறை தன்னை நிமிர்ந்து பார் என்றான்.
சீதை தனது கணவரும் காதலனுமான ராமனை நினைத்துக்கொண்டு
தன் முகத்தை மறைத்துக் கொண்டு சொன்னார்---
பத்துத் தலைகொன்டவரே!
மினுகட்டான் பூச்சி வெளிச்சத்தில்
தாமரை மலருமா ?
நானும் அப்படியே என்று தெரிந்துகொள்.
துஷ்டா! ராமரின் பானங்களின்
செய்தி உனக்குத் தெரியுமா ?
பாவியே! நீ என்னைத் தனியாக இருக்கும் பொழுது கடத்திவந்துவிட்டாய்.
தாழ்ந்தவனே!வேட்கமற்றவனே! உனக்கு வெட்கமில்லையா ?
ராமரை சூரியன் என்றும் தன்னை மின்மினுப்பூச்சி என்றும்
சொன்னதால் இராவணனுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது.
பின்னர் சினத்துடன் வாளை உருவி சொன்னான்---
சீதா!நீ என்னை அவமதித்துவிட்டாய் .
நான் உன் தலையை துண்டித்துவிடுவேன்.
நீ நான் சொல்வதைக் கேள் .அழகுமுகமே!
இல்லை என்றால் நீ உயிர் இழந்துவிடுவாய்..
உடனே சீதை சொன்னாள்---
என் பிரபுவின் புஜங்கள் தாமரை மாலைபோன்று அழகானவை.
யானையின் தும்பிக்கை போன்று
உறுதியும் பெரியதுமானவை.
அந்த கைகள் தான் என்னை
அணைக்கும் பைத்தியக்காரா!
இதுதான் என் சபதம்.
No comments:
Post a Comment