ராவணனின் தண்டனை கேட்டு
ஆஞ்சநேயர் ,
மனதிற்குள் புன்னகைத்தார்.
தேவி சரஸ்வதிதான் இவனுக்கு
இம்மாதிரியான அறிவைக் கொடுத்துள்ளார்.
ராவணன் சொல்லியபடி ,
முட்டாள் அரக்கர்கள்
வாலில் நெருப்பு வைக்க ஏற்பாடு செய்தனர்.
வாலில் துணி சுற்ற
வாங்கிய துணி ,
நெய் மற்றும் எண்ணெய் முழுவதும்
தேவைப்பட்டது.
நகரில் இவை அனைத்துமே தீர்ந்துவிட்டன.
ஹனுமான் தன் வாலை
மிகவும் பெரிதாக்கினார்.
நகரத்தில் உள்ளவர்கள்
வேடிக்கை பார்க்கக் கூடினர்.
அவர்கள் ஹனுமானை உதைத்தனர்.
அவரை கேலி செய்தனர்.
முரசு அடித்தனர். கைதட்டினர்.
ஹனுமானை நகரம் முழுவதும்
வலம் வரச் செய்து நெருப்பு மூட்டினர்.
உடனே ஆஞ்சநேயர் தன்
உருவத்தை சிறிதாக்கிக் கொண்டார்.
கட்டிலிருந்து வெளிவந்து
தங்க மாளிகைகளின் மீது ஏறினார்.
அனைவரும் அஞ்சினர்.
அரக்கர்களின் மனைவிகளுக்கு
பயம் அதிகமாகியது.
அச்சமயம் இறைவனின்
தூண்டுதலால்
நாற்பத்தொன்பது
வகையான காற்றுகள் வீசின.
அனுமான் அட்டகாசமாக சிரித்தார்.
ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தார்.
நகரம் முழுவதும் எரியத்துவங்கியது.
உடல் மிகப்பெரியதாகவும்
எடையின்றியும் மாறியது. .
அவர் ஒவ்வொருமாளிகையாக
குதிக்கத் துவங்கினார்.
தீ ஜுவாலை பரவத்துவங்கியது.
நகரித்தின் எல்லா பக்கங்களில்
இருந்தும் ஐயோ ,அம்மா! ஐயோ அப்பா என்று
வேதனைக் குரல் அலறியது.
நாங்கள் முதலிலேயே சொன்னோம் .
அது குரங்கன்று. குரங்குவடிவில் தெய்வம் என்று.
சாதுவின் அமபானத்தால் நகரம்
அனாதையாகி எரியத்துவங்கியது.
விபீஷணின் மாளிகை தவிர
மற்ற அனைத்தும்
எரிந்துவிட்டன .
சிவபகவான் பார்வதியிடம் ,
நெருப்பை உண்டாக்கியவரின் தூதர் என்றார்.
அதனால் தான் அவர் எரியவில்லை.
ஹனுமான் அலைபோல் எழுந்து
பின்வாங்கி எல்லாபக்கமும் சென்று
நகரத்தை எரித்துவிட்டார்.
பிறகு சமுத்திரத்தில் குதித்தார்.
வாலை அணைத்துவிட்டு ,
இளைப்பாறியபின்
சிறிய வடிவில் சீதைமுன்
பணிவாக நின்றார்.
பிறகு பிரபு கொடுத்ததுபோல்
நீங்கள் ஒரு
அடையாளம் கொடுங்கள்.
அவர் தங்களை அறிந்துகொள்ளட்டும்.
சீதை தன் சூடாமணியை கொடுத்தார்.
ஹனுமான் அதை மகிழ்வுடன்
வாங்கிக் கொண்டார்.
சீதை ஆஞ்சனேயரிடம் சொன்னார்--
மகனே!என் வணக்கத்தை பிரபுவிடம் கூறவும்.
அவரிடம் என் பிரார்த்தனை இதுதான்--
ஹே,பிரபு ! என் வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் .
உங்களுக்கென்று எந்த ஆசையும் கிடையாது. ஆனால் ஏழை-எளியவர்களின் மீது இரக்கப்படுவது இன்னல் போக்குவது
உங்கள் விரதம். நான் இந்நாளில் இருக்கிறேன். அந்த விரதத்தை நினைவில் கொண்டு
எனது பெரும் சங்கடத்தை
துயரத்தைப் போக்குங்கள்.
No comments:
Post a Comment