Saturday, October 29, 2016

ராமசரிதமானஸ் -சுந்தரகாண்டம் பக்கம் 14


    ஜாம்பவான்  ---ஹே  ரகுநாதா!  நீங்கள்  காட்டும் கருணையால்  எப்பொழுதும்  எல்லோருக்கும்  நலமே  ஏற்படுகிறது. தேவர்கள் ,மனிதர்கள்,முனிவர்கள்  எல்லோரும் மகிழ்ச்சியாக  இருக்கிறார்கள்.

 உங்கள்  அருள்பார்வை  பெற்றவர்கள் மிகவும்  பணிவும் ,நல்ல  குணமுடையவர்களாகவும் ,நன்னடத்தை  உள்ளவர்களாகவும்  மாறிவிடுகின்றனர். அவனுடைய  புகழ் மூன்று  உலகங்களிலும் பிரகாசிக்கிறது. உங்கள்  கிருபையால்  நாங்கள்  பிறவிப்பயன் அடைந்துள்ளோம். நீங்கள்  எங்களுக்கு  அளித்த  பணி  வெற்றியடைந்துவிட்டது.

  வாயுபுத்திரன் ஆஞ்சநேயர்   செய்து  முடித்த  பணியை    வர்ணிக்க  இயலாது. அவர் செய்த பணி  பற்றி  கூறினார்.

    கருணாநிதி  ராமர்  கேட்டு   மகிழ்ந்து

ஆஞ்சநேயரை  ஆரத்தழுவி

சீதை  எப்படி  உள்ளாள்?

அவள்  தன உயிரை  காத்துக்கொன்டுள்ளாரா? என  வினவினார்.

ஆஞ்சநேயர்  சொன்னார் --

உங்களின்  பெயர்  இரவும் பகலும்

  அவரை காத்துக்கொண்டிருக்கிறது.

உங்களுடைய  தியானம்  கதவாகவும் ,

கண்களை எப்பொழுதும்  கால்களையே

பார்த்துக்கொண்டிருப்பதால்

பூட்டாகவும் உள்ளது?

அப்படியிருக்க  உயிர்போக  வழியில்லை

. வரும்போது  அவர்  சூடாமணி  வழங்கினார்.

அதைப்பார்த்ததும் ரகுபதி

 அதை  இதயத்துடன்   அணைத்துக்கொண்டார்.

   என்னிடம்     அன்னை  தங்களுக்கான  தகவல்  சொன்னார் --

 இரண்டு சகோதரர்களின்

 கால்களைப்பிடித்து  சொல்லவும் --

நீங்கள்  ஏழை  பங்காளன் .
 சரணடைந்தவர்களை  காப்பவர்.

நான் மனம் ,சொல் ,செயல்களால்

 அவரைப்  பின்பற்றி  செல்பவள்.

என்னை ஏன்  அவர்  விட்டுவிட்டார் ?

  என்  மிகப்   பெரிய  தவறு ஒன்று உண்டு .

அவரைப்பிரிந்ததும் நான்

 என்  உயிரை விடவில்லை.

 அது  என்  கண்களின்  தவறு.

உயிர்  போவதற்கு  இடையூறாக  உள்ளன.

 அவைகள்  மிகவும்  பிடிவாதமாக  உள்ளன.

  பிரிவு  என்பது  நெருப்பு.

உடல்  பஞ்சு. மூச்சு  காற்று.

இந்த  உடல்  ஒருநொடியில்

 எரிவதற்குப்  போதுமானது.

ஆனால்  கண்கள்

  தன் னைக்காக்க

 கண்ணீரைப்  பொழிகிறது.

அதனால்  விரகதாபத்தால்
  உடல்  எரியவில்லை.

 சீதைக்கு  வந்த  ஆபத்து  மிகப் பெரிது.

அதை  சொல்லாமல்  இருப்பதே  நலம்.

சொன்னால்  உங்களுக்கு  மிகவும்  வருத்தமேற்படும்.

   கருணைக்கடலே !

சீதையின்  ஒவ்வொரு  நொடியும்

ஒரு  யுகம்போல் கழிகிறது.

 ஆகையால்  உடனே  சென்று  துஷ்டர்களை

 அழித்து சம்ஹாரம்

 செய்து அன்னையை  மீட்டுவாருங்கள்.

   சீதையின்  துயரங்களைக்  கேட்ட

சுகத்தின்  உறைவிடமான  ஸ்ரீ ராமரின்

 கண்களில்  இருந்து

கண்ணீர்  வழிந்தது.

மனம் ,சொல் ,செயலால்  என்னையே  சார்ந்து

நம்பி இருக்கும்  சீதைக்குத்   துயரமா ?

வரலாமா ? வரமுடியுமா ?

ஆஞ்சநேயர் சொன்னார் --

உங்களை  ஜபிக்காமல் , நினைக்காமல்

இருந்தால்  தானே  ஆபத்து.

 நீங்கள் விரோதியை  வென்று  ஜானகியை மீட்டு அழைத்து வாருங்கள்.


ஆஞ்சநேயர் சொல்வதைக்  கேட்டு  ராமர்  சொன்னார் --

வாயு புத்திரா !  உன்னைப்போல்

  உடலும்  பக்தியும்  உள்ள

 பரோபகார சிந்தனை  உள்ள வர்கள்

யாருமே இல்லை.

நீ  தெய்வம் . மனிதன் ,முனி.

நான்  உனக்கு எப்படி  நன்றி  செலுத்தி கைம்மாறு  செய்வேன்

?எனது  மனது   உன்னைப்போல்  இல்லை.

 மகனே  !நான்  மிகவும்  சிந்தனை  செய்து  பார்த்துவிட்டேன் .

நான்  உனக்கு எவ்விதத்திலும்  நன்றி காட்ட முடியாது.

என்  நன்றிக்கடனை  செலுத்த  முடியாது,

தேவர்களையே  காக்கும்  கடவுள்

ஆஞ்சநேயரையே  பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கண்களில்  அன்புக்  கண்ணீர்  பெருக்கெடுத்து ஓடுகிறது.

உடலில்  ஆனந்தம் தெரிகிறது.

ஸ்ரீராமரின்  சொற்களைக்  கேட்டு

 அவரின்  மகிழ்ச்சியையும்  ஆனந்தத்தையும்  கண்டு

ஹனுமான்  மிகவும்  மகிழ்ந்து

 ராமரின்  பாதங்களில்  விழுந்து
"என்னைக்  காப்பாற்றுங்கள் , என்னைக்காப்பாற்றுங்கள் "என

கண்ணீர் வடித்தார்.

  ஸ்ரீராமர்  அவரை  எழுப்ப  விரும்புகிறார்.

ஆனால் அன்புக்கடலில்   மூழ்கிய  ஆஞ்சநேயரை

 தூக்க  மனம்  வரவில்லை.

அவருடைய  தாமரைக்கரம்  ஹனுமானின்

  தலையின்  மேல்  உள்ள்ளது.

அந்த  நிலையை  நினைத்து சிவ பகவான்  அன்பில் மூழ்கிவிட்டார்.

பிறகு    மனதை  சரிப்படுத்தி சிவபகவான்    ராமர்  ஹனுமானின்

கதையை  சொல்ல ஆரம்பித்தார்: --


     ஸ்ரீராமர்    ஹனுமானைத்  தூக்கி  கட்டிப்பிடித்து , கையைப்  பிடித்து   தன் அருகில்  அமரவைத்தார் -- பிறகு

 ஹனுமானே!     நீ  எப்படி  ராவணன்  மூலம்  பாதுகாக்கப்பட்ட  ஸ்ரீ லங்காபுரியையும்  அந்த  உறுதிவாய்ந்த  கோட்டையையும்  எரித்தாய்?

எனக் கேட்டார் .

ஹனுமான்  சிறிதளவும்  கர்வமில்லாமல்  பிரபுவின்  மகிழ்ச்சியால்   மகிழ்ந்து   இலங்கை  நிகழ்ச்சிகளை  சொல்ல  ஆரம்பித்தார்  --

குரங்கின்   வீரமே  தாவுதலில்  தான். கிளைக்கு  கிளை  தாவும்  நான்  சமுத்திரத்தைத்  தாண்டி  தங்க  இலங்கையை எரித்தேன் .
அரக்கர்களை  கொன்று  அசோகவனத்தை  பாழாக்கினேன்.
 இதெல்லாம்  உங்கள்  மகிமையே.
 இதில் என்னுடைய  பெருமை  எதுவும்  இல்லை. உங்கள்  கிருபையும்  மகிழ்ச்சியும் உள்ளவர்களுக்கு  எந்த  செயலும்   கடினமல்ல. உங்கள்  சக்தியால் பஞ்சு  கூட  காட்டுத்தீ யாக முடியும் .  நிகழத்தமுடியாது  என்பதையும்  நிகழ்த்தலாம்.
    எனக்கு  மிகவும்  சுகமளிக்கக் கூடிய உங்கள்  மேல்  சலனமற்ற  பக்தி எனக்கு அளித்து  கிருபை  காட்டுங்கள்.

ஹனுமானின் மிகவும்  எளிமையையும் ,  வார்த்தையும்  கேட்டு   ராமர்  அப்படியே ஆகட்டும்  என்றார் .

  இந்த விவரம்  கூறிய  பின்  சிவன்  தன்  மனைவி   உமாவிடம் ,
ராமனின்  நற்பண்புகளை  அறிந்தவர்களுக்கு  அவரின்  பஜனையை தவிர   வேறு  எதிலும்
மனம்  ஈடுபடாது.  இந்த  சுவாமி -தொண்டனின்  சம்பாஷனைகளைக் கேட்டவர்கள்  இதயத்தில் ராமரின்  பக்தியைப்  பெறுவார்கள்.

  ராமரின்  அருள்  நிறைந்த  சொற்களைக்  கேட்டு  வானரர்கள்
"ஆனந்தமளிக்கும்  கிருபை  காட்டும்  ராமர்  வாழ்க "  ,ஜெய  ராம்  , ஜெயராம்  என்று  முழங்கினர்.

  ராமர்  குரங்குகளின்  அரசன்  சுக்ரீவனிடம்  செல்வதற்கு ஏற்பாடு  செய்   என்றார்.
    இன்னும் ஏன்  தாமதிக்க வேண்டும் .
வானரங்களுக்கு  உடனே  ஆணை இடு. ராவண வதத்தின் ஏற்பாட்டினைக்  கண்டு  மகிழ்ந்து  தேவர்கள்  பூமாரி பொழிந்து மகிழ்வுற்று  தங்கள்  தங்கள்  தேவலோகத்திற்குச்  சென்றனர்.
 
 வானரங்களின்  அரசன்  சுக்ரீவனின்
ஆணைகளைக்  கேட்டு  வானர சேனாதிபதிகள்  ஒன்று  சேர்ந்தனர்.

வானரங்கள் -கரடிகள் ஒப்பிடமுடியாத  பலம் வாய்ந்தவர்களாக   பல  வண்ணங்களில்  காணப்பட்டனர்.

 அவர்கள்  ராமரின்  பாதங்களைப்  பணிந்தனர். மிகப்பெரிய  பலவானனான  கரடி மற்றும்  வானரங்கள்  ஆர்பரித்தனர்.
    ராமர்  வானரங்களின்  படையைப்  பார்த்து  தன்  அருள்  பார்வையை செலுத்தினார்.
  ராமரின்  அருளைப்பெற்றதும் வானரர்கள் சிறகு  கொண்ட  மலையானார்கள்.
  நல்ல  சுப  சகுனங்களுடன்  ராமர்  படையெடுத்தார்.
   எந்த  ஒரு  செயலின்  துவக்கத்திலும்
எல்லாவித  மங்கலங்களும் சுப  சகுனங்களும்  வேண்டும்.
  ராமரின்  யுத்தத்திற்கான  புறப்பாட்டை   ஜானகியும்  உணர்ந்தார்.  அவரின்  இடது  அங்கங்கள்  துடித்தன.

  சீதைக்கு  சுப  சகுனங்களும் ,
ராவணனுக்கு  அசுப  சகுனங்களும்  ஏற்பட்டன.

எண்ணிக்கையிலடங்கா  வானரங்களும்  கரடிகளும் ஆரவாரத்துடன்  புறப்பட்ட  சேனையை  வர்ணிப்பது  யாராலும்  இயலாது .






 










No comments: