Wednesday, October 19, 2016

அந்த வல்லமை பெற பிரார்த்திப்போம்.

    இறைவனின்  லீலைகள்  பலவிதம்.

   இவ்வுலகில்   நடப்பது  எல்லாம்  தெரிந்த ,

   எதிர்காலமும்  அறிந்த  பெரிய  ஞானிகள்

  சித்தபுருஷர்கள்   இல்லாமல்  இல்லை.

   தீமைகளால்  செல்வம்  வரும்.

அது  லௌகீக  இன்பமே.

நல்லவைகளால்    இன்பம்  வரும்

அது  அலௌகீகம் .


ஒன்று   சரீர மன  ஆரோக்கியம்  கெடுக்கக்கூடியது.

மற்றொன்று   ஆன்மீக  பலம்  தரக்கூடியது.

ஆத்மபலம்  தரக்கூடியது.

பிரம்மானந்தம்  தரவல்லது.

இந்த  இரண்டாவதுவகையில்  உள்ளவர்கள்  தெய்வ சக்தி  பெற்று

தெய்வமாகவே  வாழ்பவர்கள்.

இவ்வுலக நடப்புகளை   அறிந்தும்  விலகி இருப்பார்கள்.

அந்த  வல்லமை   பெற  பிரார்த்திப்போம்.
  

No comments: