Sunday, October 30, 2016

இவைனருள்

காலை வணக்கம் .
காலை மூன்று மணி முப்பது நிமிடம்.
இரத்த அழுத்தம் சற்றே அதிகம்.
இதயம் எனபது மட்டும் துடிப்பதில்லை.
இதய எண்ண அலைகளும்
நல்ல கெட்ட மான அபமான
சிந்தனை இரத்தத்தால் ஓடி
அழுத்தத்தை அதிகரிக்கவோ
கு றைக்கவோ
இரத்த நாளங்களை
வெடிக்கவோ செய்யும்.
அப்படிப்பட்ட
மன சஞ்சல அலைகளுக்கு
நம் முன்னோர் வழிகாட்டிய
தியானம் ப்ரா ணாயாம்
யோகா இல்லை என்றால்
தெய்வீக சிந்தனை இல்லை என்றால்
முதுமையில் ஆரோக்யமாய்
வாழ்தல்அரிது
ஓம் கணேசாய நம .:
ஓம் கார்த்திகேயாய நம:
ஓம் நமச்சிவாய
ஓம் துர்காயை நம:
  நல்லவை தீய எண்ணங்களை
நல்ல எண்ணங்களின்
இரத்த ஓட்டமாக மாற்றட்டும்
நடப்தெல்லாம் இறைவன் செயல்.
நம்மால் முடிவதென்ன?
அனுபவத்தால்  தான் புரியும்
நம் சாதனைகள் வேதனைகள்
நமமை மீறிய  அமானுஷ்ய சக்தியால் என்பது.
எனது  நண்பர் மனிதன் முயன்றால்
அனைத்தும்  செய்யலாம் என்று.
இன்று அகவை அறுபதைக்கடந்து
விட்டது .தனக்கென ஒரு மழலை இல்லை
மற்றொரு நண்பர்உ றவினர் .
சிததபிரம்மை பிடித்தவர்.
அவருக்குத்திருமணம்.
இந்தபைத்தியத்தின் மனைவி பாவம் என்றனர்
பத்தாவது மாதத்தில்
சுவர்ண விக்ரஹம் போன்ற குழந்தை. வளர வளர அறிவு மேதையாக
தந்தையின் தோற்றத்தோடு.
அறிவுமேதைக்குப் பிறந்த மகன் தருதலையாக.
அவனியை அக்கம்பக்க நிகழ்வுகளை
ஆராய்ந்து பாருங்கள்
அந்த ஆண்டவனின்
அத்புத வல்லமையை
ஏற்று  அவனையே மனம் நாடிச் செல்லும்.

உலகியல்  மறந்து பேரானந்நம் கிட்டும்
இதற்கு ஒரு இடைத்தரகர் வேண்டியதில்லை.
ஓம் நமச்சிவாய .

Saturday, October 29, 2016

சிந்திக்குமா ? சனாதன மதம்


சனாதன தர்மம்


மகிழ்வா ? இன்னலா? இனியவையா ?
எளிமையா ? பாரதத்தில் மட்டுமே புத்தம் சமணம் சீக்கியம் . துவைதம் அத்வைதம் விஷிஷ்டாத்வைதம்
சிவ உபாசனை , சக்தி உபாசனை , விஷ்ணு ,ராமர் , கிருஷ்ணர் உபாசனைகள்,
பலவித ஆஷ்ரமங்கள் , சம்பிரதாயங்கள்
ஏன்?
விவாதிப்போமா ? மக்கள் புரிய !தெளிய ! அறிய !பின்தொடர ! மனம் மாறி தாய் மதம் வர.
அதைவிடுத்து பலகோடி ரூபாய்கள் அழகு விநாயகர் சிலைகள் கடலில் எரிந்து அவமானப்படுத்துவது
அந்த கோடி ரூபாய்களில் எவ்வளவு நாட்டிற்கு ,
ஏழைகளுக்கு உதவலாம்.
ஆலயங்கள் முன் பிச்சைக்காரக் கூட்டம் ,
ஏன் குறைவதில்லை.
தண்டச்சோறு போட்டு ஒரு பெரும் கூட்டத்தையே ஏன் வளர்க்கிறோம் ?
எத்தனை சமுதாயத் திருடர்கள் , ஏமாற்றுக்காரர்கள் இந்த ஆலயங்களில்.
ஆலயம் செல்வது மன சஞ்சலங்கள் தீர்க்க.
ஆலயம் செல்வது மன அமைதிக்காக .
ஆலயம் செல்வது மன நிறைவுக்காக,
ஆனால் அங்கு ஒலிபெருக்கிகள் அலறுகின்றன --
திருடர்கள் ஜாக்கிரதை .
மணிபர்ஸ் ஜாக்கிரதை.
யாரையும் நம்பி ஏமாறவேண்டாம்.
எளிய தரிசனம் ,குறுக்கு வழி தரிசனம்,
கட்டண தரிசனம் நீங்களே டிக்கட் பெற்று செல்லவும்.
நடுவில் அர்ச்சனைக் கூடை கேட்பார்கள் .
ஏமாறாதீர்கள்.
சற்றே சிந்தியுங்கள்.
ஆலயங்களில் மன அமைதி மன ஒருமைப்பாடு கிட்டுமா ?
இறைவனின் சிந்தனைகள் அதிகரிக்குமா ?
திருடர்கள் / ஏமாற்றுக்காரர்கள் அச்சம் அதிகரிக்குமா ?
ஆசைகள் அதிகமாகுமா ?
மாயைகள் ஆலயம் சுற்றியுள்ள வணிகவளாகண்களால்
ஆடம்பரங்காளால்
கறுப்புப்பணம் வைரக்கிரீடங் களால்
மாயை / சைத்தான் /ஊழல்கள் அதிகரிக்குமா ?
இறைபயம் நேர்மை அதிகரிக்குமா !
சினேகா செருப்புபோட்டதற்கு
கொடும்பாவி எதிர்த்த கூட்டம்,
அரைக்கால் டவுசர் கோவணம்கட்டி சாதுக்கள் வாழும்
நாட்டில் எதிர்க்கும் கூட்டம் ,
விநாயகரை ஐம்பதயிரன் சிலவில் கடலில் எரியும் கூட்டம்
சிந்திக்குமா?
அடாவடி வசூலை அதிகாரிகள் ஆன்மீகவாதிகள்
தடுப்பார்களா?
பக்தி என்ற பெயரில் சுரண்டும் கூட்டம்
இறைவனே ஆதரிக்காது.

இறைவன் இரக்ஷிப்பார்.






காலை வணக்கம் .
கடவுள் எங்கே ?
அவரை நல்லவர்களும் துதிக்கிறார்கள். 
கேட்டவர்களும் அதிகக் கூட்டத்துடன் 
வேள்விகள் செய்து , தங்கமளித்து 
வைரக்கிரீடம் சாத்தி வணங்குகின்றனர். 
புண்ணியாத்துமாவும் வணங்குகிறது . 
பாவாத்மாவும் வணங்கு கிறது. 
இரண்டையும் படைத்தவன் இறைவனே. 
அதற்கு என்ன காரணம் ?

அறியமுடியாது .ஆனால் பார்க்க முடியும்.
சிலர் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் தீராத் துயரில்
சிலர் துயரத்தில் மூழ்கி இருப்போதுபோல்
ஆழ்மன மகிழ்ச்சியில்
சிலர் துயரக் கடலில் ஆனந்தமாக.
அனைத்து வசதிகள் அனைத்து சுகம் அனைத்தும் ஆனந்தம் பேரானந்தம் என்ற நிலை உண்டு .
தெரியுமா ? அதை அடைய அறிவு/ ஞானம் பெற்ற மனிதனால் முடியுமா ?
முடிந்தும் முயலாமல் இருப்பது ஏன் என்று தெரியுமா ?
சிலந்திவலையில் சிக்கிய பூச்சியின் 
துள்ளல் கண்டு வருந்திய மனிதன் 
நேராகச் சென்றான் மதுக்கடைக்கு. 
அவனுக்கு குடிக்க ஒரு காரணம். 
மற்றொருவன் வருத்தத்துடன் நிகழ்வைக் கண்டு

நேராக வருத்தம் போக்க மாதுவைத் தேடிச்சென்றான்.
மூன்றாமவன் நேராக கசா ப்புக்கடைக்குச் சென்று
ஆடு,கோழி,மீன் என வாங்கிச்சென்று
இல்லாளிடம் பக்குவமாகச் சமைக்கச் சொல்லி
வயிறார ருசியாக உண்டு மகிழ்ந்தான்.
பூச்சி? கண்டதும் துயரம் மீள மாயை வலிகள்.வழிகள்.
பேரானந்தம் அடைந்தவர்கள்
வெளி உலகைத் துறந்தனர்.
இன்னல் நிறைந்த அழியும் உலகம்.
இந்த படைப்பின் ரகசியம் புரியாது.
புரிய சித்தார்த்தர் போன்று 
உலகியல் துறந்து சென்றவர்களும் உண்டு. 
வள்ளுவர் போல் இல்லறத்துறவிகளும் உண்டு. 
ரமண மகர்ஷி போல் அருள் பெற்று ஆண்டவன்

அழைப்பேற்று மகிழ்வுடன் பேரானந்தத்தில்
மூழ்கி தெய்வீக குரு ஆனவர்களும் உண்டு.
அருணகிரிநாதர் நாதர் போன்ற பாவிகள்
ரக்ஷிக்கப்பெற்று புகழ்பெற்ற நிகழ்வுகளும் உண்டு. 
அசோகர் கொடு ங்கோலன் என்ற நிலை மாறி

நன்மைகள் பலபுரிந்த நன்மன்னன் ,பேரரசர்
ஆனதும் உண்டு. 
இந்த ஆண்டவன் அருள் பெற

ஒரே வழி உண்டு.
நாம் நம் கடமையை மட்டும் நேர்மையாக ,
ஊழலின்றி கையூட்டு இன்றி
செய்தால் போதும்.
பேரானந்தம் கிட்டும் .
மாயை நிறைந்த உலகில் எத்தனை பேர் 
இந்த மாயை , சாத்தான் ,சைத்தானில் இருந்து 
தப்பிச் செல்வர் ?
ஜனனம் --மரணம் உறுதி .
நம்முடன் எதுவும் வராது. 
இறந்தால் நாம் பிணம். 
அதைக்காட்டி நெருப்பு வை, புதை என்பதே 
இறுதி .

நல்லதே செய்யுங்கள்! நல்லதை விரும்புங்கள்!
நன்மை செய்யக்கூட பிறரிடம் கேட்காதீர்கள் .

நல்லவை நடந்தே தீரும் .
இருக்கின்ற ஆலயங்களைக் காப்பாற்றுங்கள்.
ஆலய நன்கொடை புதிய ஆலயங்கள்
இறைவனருளால் உருவாகிவிடும்.
பட்டினி கிடந்தது மெய் வருத்தி தியானம் வேண்டாம். 
தியானத்தில் மூழ்கினால் , பசி இருக்காது. 
ஆசையிருக்காது. 
ஞானமும் பேரானந்தமும் கிட்டும். 
இறைவன் /பகவான் / ஆண்டவன் இரட்சிப்பார்.

ராமசரிதமானஸ் -சுந்தரகாண்டம் பக்கம் 14


    ஜாம்பவான்  ---ஹே  ரகுநாதா!  நீங்கள்  காட்டும் கருணையால்  எப்பொழுதும்  எல்லோருக்கும்  நலமே  ஏற்படுகிறது. தேவர்கள் ,மனிதர்கள்,முனிவர்கள்  எல்லோரும் மகிழ்ச்சியாக  இருக்கிறார்கள்.

 உங்கள்  அருள்பார்வை  பெற்றவர்கள் மிகவும்  பணிவும் ,நல்ல  குணமுடையவர்களாகவும் ,நன்னடத்தை  உள்ளவர்களாகவும்  மாறிவிடுகின்றனர். அவனுடைய  புகழ் மூன்று  உலகங்களிலும் பிரகாசிக்கிறது. உங்கள்  கிருபையால்  நாங்கள்  பிறவிப்பயன் அடைந்துள்ளோம். நீங்கள்  எங்களுக்கு  அளித்த  பணி  வெற்றியடைந்துவிட்டது.

  வாயுபுத்திரன் ஆஞ்சநேயர்   செய்து  முடித்த  பணியை    வர்ணிக்க  இயலாது. அவர் செய்த பணி  பற்றி  கூறினார்.

    கருணாநிதி  ராமர்  கேட்டு   மகிழ்ந்து

ஆஞ்சநேயரை  ஆரத்தழுவி

சீதை  எப்படி  உள்ளாள்?

அவள்  தன உயிரை  காத்துக்கொன்டுள்ளாரா? என  வினவினார்.

ஆஞ்சநேயர்  சொன்னார் --

உங்களின்  பெயர்  இரவும் பகலும்

  அவரை காத்துக்கொண்டிருக்கிறது.

உங்களுடைய  தியானம்  கதவாகவும் ,

கண்களை எப்பொழுதும்  கால்களையே

பார்த்துக்கொண்டிருப்பதால்

பூட்டாகவும் உள்ளது?

அப்படியிருக்க  உயிர்போக  வழியில்லை

. வரும்போது  அவர்  சூடாமணி  வழங்கினார்.

அதைப்பார்த்ததும் ரகுபதி

 அதை  இதயத்துடன்   அணைத்துக்கொண்டார்.

   என்னிடம்     அன்னை  தங்களுக்கான  தகவல்  சொன்னார் --

 இரண்டு சகோதரர்களின்

 கால்களைப்பிடித்து  சொல்லவும் --

நீங்கள்  ஏழை  பங்காளன் .
 சரணடைந்தவர்களை  காப்பவர்.

நான் மனம் ,சொல் ,செயல்களால்

 அவரைப்  பின்பற்றி  செல்பவள்.

என்னை ஏன்  அவர்  விட்டுவிட்டார் ?

  என்  மிகப்   பெரிய  தவறு ஒன்று உண்டு .

அவரைப்பிரிந்ததும் நான்

 என்  உயிரை விடவில்லை.

 அது  என்  கண்களின்  தவறு.

உயிர்  போவதற்கு  இடையூறாக  உள்ளன.

 அவைகள்  மிகவும்  பிடிவாதமாக  உள்ளன.

  பிரிவு  என்பது  நெருப்பு.

உடல்  பஞ்சு. மூச்சு  காற்று.

இந்த  உடல்  ஒருநொடியில்

 எரிவதற்குப்  போதுமானது.

ஆனால்  கண்கள்

  தன் னைக்காக்க

 கண்ணீரைப்  பொழிகிறது.

அதனால்  விரகதாபத்தால்
  உடல்  எரியவில்லை.

 சீதைக்கு  வந்த  ஆபத்து  மிகப் பெரிது.

அதை  சொல்லாமல்  இருப்பதே  நலம்.

சொன்னால்  உங்களுக்கு  மிகவும்  வருத்தமேற்படும்.

   கருணைக்கடலே !

சீதையின்  ஒவ்வொரு  நொடியும்

ஒரு  யுகம்போல் கழிகிறது.

 ஆகையால்  உடனே  சென்று  துஷ்டர்களை

 அழித்து சம்ஹாரம்

 செய்து அன்னையை  மீட்டுவாருங்கள்.

   சீதையின்  துயரங்களைக்  கேட்ட

சுகத்தின்  உறைவிடமான  ஸ்ரீ ராமரின்

 கண்களில்  இருந்து

கண்ணீர்  வழிந்தது.

மனம் ,சொல் ,செயலால்  என்னையே  சார்ந்து

நம்பி இருக்கும்  சீதைக்குத்   துயரமா ?

வரலாமா ? வரமுடியுமா ?

ஆஞ்சநேயர் சொன்னார் --

உங்களை  ஜபிக்காமல் , நினைக்காமல்

இருந்தால்  தானே  ஆபத்து.

 நீங்கள் விரோதியை  வென்று  ஜானகியை மீட்டு அழைத்து வாருங்கள்.


ஆஞ்சநேயர் சொல்வதைக்  கேட்டு  ராமர்  சொன்னார் --

வாயு புத்திரா !  உன்னைப்போல்

  உடலும்  பக்தியும்  உள்ள

 பரோபகார சிந்தனை  உள்ள வர்கள்

யாருமே இல்லை.

நீ  தெய்வம் . மனிதன் ,முனி.

நான்  உனக்கு எப்படி  நன்றி  செலுத்தி கைம்மாறு  செய்வேன்

?எனது  மனது   உன்னைப்போல்  இல்லை.

 மகனே  !நான்  மிகவும்  சிந்தனை  செய்து  பார்த்துவிட்டேன் .

நான்  உனக்கு எவ்விதத்திலும்  நன்றி காட்ட முடியாது.

என்  நன்றிக்கடனை  செலுத்த  முடியாது,

தேவர்களையே  காக்கும்  கடவுள்

ஆஞ்சநேயரையே  பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கண்களில்  அன்புக்  கண்ணீர்  பெருக்கெடுத்து ஓடுகிறது.

உடலில்  ஆனந்தம் தெரிகிறது.

ஸ்ரீராமரின்  சொற்களைக்  கேட்டு

 அவரின்  மகிழ்ச்சியையும்  ஆனந்தத்தையும்  கண்டு

ஹனுமான்  மிகவும்  மகிழ்ந்து

 ராமரின்  பாதங்களில்  விழுந்து
"என்னைக்  காப்பாற்றுங்கள் , என்னைக்காப்பாற்றுங்கள் "என

கண்ணீர் வடித்தார்.

  ஸ்ரீராமர்  அவரை  எழுப்ப  விரும்புகிறார்.

ஆனால் அன்புக்கடலில்   மூழ்கிய  ஆஞ்சநேயரை

 தூக்க  மனம்  வரவில்லை.

அவருடைய  தாமரைக்கரம்  ஹனுமானின்

  தலையின்  மேல்  உள்ள்ளது.

அந்த  நிலையை  நினைத்து சிவ பகவான்  அன்பில் மூழ்கிவிட்டார்.

பிறகு    மனதை  சரிப்படுத்தி சிவபகவான்    ராமர்  ஹனுமானின்

கதையை  சொல்ல ஆரம்பித்தார்: --


     ஸ்ரீராமர்    ஹனுமானைத்  தூக்கி  கட்டிப்பிடித்து , கையைப்  பிடித்து   தன் அருகில்  அமரவைத்தார் -- பிறகு

 ஹனுமானே!     நீ  எப்படி  ராவணன்  மூலம்  பாதுகாக்கப்பட்ட  ஸ்ரீ லங்காபுரியையும்  அந்த  உறுதிவாய்ந்த  கோட்டையையும்  எரித்தாய்?

எனக் கேட்டார் .

ஹனுமான்  சிறிதளவும்  கர்வமில்லாமல்  பிரபுவின்  மகிழ்ச்சியால்   மகிழ்ந்து   இலங்கை  நிகழ்ச்சிகளை  சொல்ல  ஆரம்பித்தார்  --

குரங்கின்   வீரமே  தாவுதலில்  தான். கிளைக்கு  கிளை  தாவும்  நான்  சமுத்திரத்தைத்  தாண்டி  தங்க  இலங்கையை எரித்தேன் .
அரக்கர்களை  கொன்று  அசோகவனத்தை  பாழாக்கினேன்.
 இதெல்லாம்  உங்கள்  மகிமையே.
 இதில் என்னுடைய  பெருமை  எதுவும்  இல்லை. உங்கள்  கிருபையும்  மகிழ்ச்சியும் உள்ளவர்களுக்கு  எந்த  செயலும்   கடினமல்ல. உங்கள்  சக்தியால் பஞ்சு  கூட  காட்டுத்தீ யாக முடியும் .  நிகழத்தமுடியாது  என்பதையும்  நிகழ்த்தலாம்.
    எனக்கு  மிகவும்  சுகமளிக்கக் கூடிய உங்கள்  மேல்  சலனமற்ற  பக்தி எனக்கு அளித்து  கிருபை  காட்டுங்கள்.

ஹனுமானின் மிகவும்  எளிமையையும் ,  வார்த்தையும்  கேட்டு   ராமர்  அப்படியே ஆகட்டும்  என்றார் .

  இந்த விவரம்  கூறிய  பின்  சிவன்  தன்  மனைவி   உமாவிடம் ,
ராமனின்  நற்பண்புகளை  அறிந்தவர்களுக்கு  அவரின்  பஜனையை தவிர   வேறு  எதிலும்
மனம்  ஈடுபடாது.  இந்த  சுவாமி -தொண்டனின்  சம்பாஷனைகளைக் கேட்டவர்கள்  இதயத்தில் ராமரின்  பக்தியைப்  பெறுவார்கள்.

  ராமரின்  அருள்  நிறைந்த  சொற்களைக்  கேட்டு  வானரர்கள்
"ஆனந்தமளிக்கும்  கிருபை  காட்டும்  ராமர்  வாழ்க "  ,ஜெய  ராம்  , ஜெயராம்  என்று  முழங்கினர்.

  ராமர்  குரங்குகளின்  அரசன்  சுக்ரீவனிடம்  செல்வதற்கு ஏற்பாடு  செய்   என்றார்.
    இன்னும் ஏன்  தாமதிக்க வேண்டும் .
வானரங்களுக்கு  உடனே  ஆணை இடு. ராவண வதத்தின் ஏற்பாட்டினைக்  கண்டு  மகிழ்ந்து  தேவர்கள்  பூமாரி பொழிந்து மகிழ்வுற்று  தங்கள்  தங்கள்  தேவலோகத்திற்குச்  சென்றனர்.
 
 வானரங்களின்  அரசன்  சுக்ரீவனின்
ஆணைகளைக்  கேட்டு  வானர சேனாதிபதிகள்  ஒன்று  சேர்ந்தனர்.

வானரங்கள் -கரடிகள் ஒப்பிடமுடியாத  பலம் வாய்ந்தவர்களாக   பல  வண்ணங்களில்  காணப்பட்டனர்.

 அவர்கள்  ராமரின்  பாதங்களைப்  பணிந்தனர். மிகப்பெரிய  பலவானனான  கரடி மற்றும்  வானரங்கள்  ஆர்பரித்தனர்.
    ராமர்  வானரங்களின்  படையைப்  பார்த்து  தன்  அருள்  பார்வையை செலுத்தினார்.
  ராமரின்  அருளைப்பெற்றதும் வானரர்கள் சிறகு  கொண்ட  மலையானார்கள்.
  நல்ல  சுப  சகுனங்களுடன்  ராமர்  படையெடுத்தார்.
   எந்த  ஒரு  செயலின்  துவக்கத்திலும்
எல்லாவித  மங்கலங்களும் சுப  சகுனங்களும்  வேண்டும்.
  ராமரின்  யுத்தத்திற்கான  புறப்பாட்டை   ஜானகியும்  உணர்ந்தார்.  அவரின்  இடது  அங்கங்கள்  துடித்தன.

  சீதைக்கு  சுப  சகுனங்களும் ,
ராவணனுக்கு  அசுப  சகுனங்களும்  ஏற்பட்டன.

எண்ணிக்கையிலடங்கா  வானரங்களும்  கரடிகளும் ஆரவாரத்துடன்  புறப்பட்ட  சேனையை  வர்ணிப்பது  யாராலும்  இயலாது .






 










நரன் மனிதன் தான் அசுரன்

நர் கா அசுர்  என்று பிரிக்கலாமோ ?
அசுர குணம் தலை எடுக்கும்போது தான் தீமைகள் உண்டாகின்றன.

காமம் பேராசை கோபம் ஆணவம் பொறாமை  இவை தான் அசுரகுணத்தை உண்டாக்கும் . இதை உணர்ந்து ஒதுக்கவேண்டும் .
வள்ளுவர்
ஆசை அவா வெகுளி இன்னாச்சை இவை நான்கும் இழுக்காதியனறது அறம் என்கிறார்.
துளசி தாசர்
காம் க்ரோத் மத் லோப் ஜப்மன்மே லகை கான்
பண்டித் மூர்கவ் தோவும் ஏக் சமான்  என்கிறார்.
தங்கள் கூற்று உண்மைதான் .
நன்றி .
தமிழ்மணி வேலு நரகாசுர் என்ற அசுரன் கிடையாது மனிதர்களுக்குள் இருக்கும் தீய குணங்கள்தான் அசுரானாக்குகிறது
அவைகளை அழிக்கத்தான் தீபாவளி .
என்றார். உண்மையாக இருக்குமோ .?
பல படுகொலைகள் நடக்கின்றன.
மனைவி மாற்றானுடன் ஓடுகிறாள் .
காதல் பணம்மாறுகிறது
தேர்தல்ஊழல் கருப்புப்பணம் லஞ்சம் இதெல்லாமேஅசுரகுணம்.
இவைஎல்லாயுகங்களிலும் உண்டு.

Friday, October 28, 2016

ராமசரிதமானஸ் தொடர்ச்சி --சுந்தரகாண்டம் பக்கம் பதிமூன்று

 
 சீதை  ஹனுமனிடம் ,

  ஹனுமானே!

 ராமரிடம்  இந்திரனின்  புத்திரன்  ஜெயந்தனின்

   மரணச் செய்தி  சொல்லவும்.

  அவரின்  பாணங்களின்  சக்தியை  நினைஊட்டவும் .

  ஒரு  மாதத்தில்  வந்து என்னை  மீட்கவில்லை  என்றால்

  என்னை  உயிருடன்  காண முடியாது  என்று  சொல்லவும்.

    நீ சொல் !  நான்  எப்படி உயிருடன்  இருப்பது ?

   நீயும்  இப்பொழுது செல்லப்  போகிறாய்.

 உன்னைப்பார்த்து  சற்றே மனம்

குளிர்ந்தது.

 மீண்டும்  அதே இரவு-பகல்.

என்றார்..

  ஹனுமான்  அவருக்கு  பலவிதத்தில்  தைரியம்  கூறி ,

அவர்  பாதங்களை

வணங்கி  புறப்பட்டார்.

  போகும் பொழுது  அவர் பெரும்  குரலில்  கர்ஜித்தார்.

அதனால்  பயந்த  பல  அரக்கிகளின்

  கர்பங்கள்  கலைந்தன.

 கடல் தாண்டி  வந்ததும்  தன் மகிழ்ச்சியின்
 ஆரவார  சிரிப்பு  சிரித்தார்.

வானரங்கள்  ஹனுமானின்  முகத்தில்  மகிழ்ச்சியும்
 உடலில்  ஒரு தேஜஸையும்  கண்டனர்.
இதெல்லாம்  ராமரின் செயல்  என்றே கருதினர்.

  எல்லோரும்  அங்கதனின்  அனுமதியுடன்  மதுவனத்தில்  நுழைந்தனர்.

எல்லோரும்  பழங்களை  சாப்பிட்டனர்.

தடுக்க  வந்த  வனக்காவலர்களை

விரட்டினர்.

  அவர்கள் சுக்ரீவனிடம்   சென்று  இளவரசர்
 காட்டை பாழ் படுத்துகின்றார் என்றனர்.
இதைக்கேட்டதும்  சுக்ரீவன் மிகவும்  மகிழ்ந்தான்.

இதெல்லாம்  ராமச்சந்திர பிரபுவின்

 செயல் என்றே  நினைத்தான் .

 சீதையின்  செய்தி  கிடைக்கவில்லை  என்றால்

அவர்கள் மதுவன  பழங்களை  சாப்பிடமுடியாது  என்று

 சுக்ரீவன்  நினைக்கும்  போதே

அங்கு வானர கூட்டங்கள் வந்துவிட்டன.


   அனைவரும்  சுக்ரீவனை  வணங்கினர்.

எல்லோரையும்  சுக்ரீவன்  மிகவும்  அன்போடு  சந்தித்தான்.
 எல்லோரின் நலனையும்  விசாரித்தான்.

 எல்லோரும் கூறினர்--ராமரின்  கிருபையால்
  அவர்
 ஒப்படைத்த  பணி
சிறப்பாக  முடிந்துவிட்டது.

  ஹனுமான் தான் காரியத்தை  வெற்றியுடன்  முடித்தார்.
 வானரங்களின்  உயிர்களைக்  காப்பாற்றினார்.

  பிறகு  சுக்ரீவன் , ஹனுமான்  அனைவரும்  சேர்ந்து
இராமரை  சந்திக்கச்   சென்றனர்.

  ராமர்  வானரங்கள்  சேர்ந்து வருவதைப்
 பார்த்து  மிகவும்  மகிழ்ந்தார் .
இரண்டு சகோதரர்களும் பளிங்குப் பாறையில்  அமர்ந்திருந்தனர்.
 எல்லோரும்  சென்று  ராமரின்  பாதங்களில்   விழுந்து  வணங்கினர்.

   தயாநிதி ராமர்  அனைவரையும்
ஆலிங்கனம்  செய்து நலம்  விசாரித்தார்,

வானரங்கள்  அவரிடம்
 உங்கள்  கிருபையால்  நலமே  என்றனர்.
  

Thursday, October 27, 2016

ராமசரிதமானஸ் --சுந்தரகாண்டம் பக்கம் பன்னிரண்டு

 
      ராவணனின்  தண்டனை  கேட்டு

ஆஞ்சநேயர் ,

  மனதிற்குள்  புன்னகைத்தார்.

 தேவி  சரஸ்வதிதான்  இவனுக்கு

இம்மாதிரியான   அறிவைக் கொடுத்துள்ளார்.

 ராவணன்  சொல்லியபடி  ,

முட்டாள்  அரக்கர்கள்

வாலில் நெருப்பு வைக்க  ஏற்பாடு  செய்தனர்.

வாலில்  துணி சுற்ற

வாங்கிய துணி ,

நெய் மற்றும்  எண்ணெய்  முழுவதும்

தேவைப்பட்டது.

 நகரில் இவை  அனைத்துமே  தீர்ந்துவிட்டன.

 ஹனுமான் தன்  வாலை

 மிகவும்  பெரிதாக்கினார்.
நகரத்தில்  உள்ளவர்கள்
வேடிக்கை  பார்க்கக்  கூடினர்.
   அவர்கள்  ஹனுமானை  உதைத்தனர்.

அவரை  கேலி செய்தனர்.
முரசு  அடித்தனர்.  கைதட்டினர்.

ஹனுமானை நகரம்  முழுவதும்

 வலம்  வரச் செய்து  நெருப்பு  மூட்டினர்.

 உடனே  ஆஞ்சநேயர்  தன்
 உருவத்தை  சிறிதாக்கிக் கொண்டார்.

  கட்டிலிருந்து  வெளிவந்து
 தங்க  மாளிகைகளின்  மீது  ஏறினார்.
அனைவரும்  அஞ்சினர்.

அரக்கர்களின்  மனைவிகளுக்கு

 பயம்  அதிகமாகியது.

   அச்சமயம்  இறைவனின்

தூண்டுதலால்
 நாற்பத்தொன்பது
 வகையான  காற்றுகள்  வீசின.

அனுமான்  அட்டகாசமாக  சிரித்தார்.

ஆகாயத்தில்  பறக்க  ஆரம்பித்தார்.

நகரம்  முழுவதும்  எரியத்துவங்கியது.

உடல் மிகப்பெரியதாகவும்  



எடையின்றியும்  மாறியது. .

அவர்  ஒவ்வொருமாளிகையாக

 குதிக்கத் துவங்கினார்.

தீ  ஜுவாலை   பரவத்துவங்கியது.

    நகரித்தின் எல்லா பக்கங்களில்

 இருந்தும்   ஐயோ ,அம்மா! ஐயோ அப்பா  என்று

 வேதனைக்  குரல் அலறியது.

 நாங்கள்  முதலிலேயே  சொன்னோம் .

  அது  குரங்கன்று.  குரங்குவடிவில் தெய்வம்  என்று.

  சாதுவின் அமபானத்தால் நகரம்

 அனாதையாகி  எரியத்துவங்கியது.

விபீஷணின்  மாளிகை தவிர

  மற்ற  அனைத்தும்

எரிந்துவிட்டன .

  சிவபகவான்  பார்வதியிடம் ,

நெருப்பை  உண்டாக்கியவரின்  தூதர்  என்றார்.
அதனால்  தான்  அவர்  எரியவில்லை.
  ஹனுமான்  அலைபோல் எழுந்து
 பின்வாங்கி எல்லாபக்கமும்  சென்று

 நகரத்தை  எரித்துவிட்டார்.
பிறகு  சமுத்திரத்தில்  குதித்தார்.
வாலை  அணைத்துவிட்டு ,

இளைப்பாறியபின்
சிறிய  வடிவில்  சீதைமுன்
பணிவாக  நின்றார்.
  பிறகு  பிரபு  கொடுத்ததுபோல்
 நீங்கள்  ஒரு
அடையாளம்  கொடுங்கள்.
அவர்  தங்களை அறிந்துகொள்ளட்டும்.

சீதை தன் சூடாமணியை கொடுத்தார்.

 ஹனுமான் அதை  மகிழ்வுடன்
  வாங்கிக் கொண்டார்.

சீதை   ஆஞ்சனேயரிடம்  சொன்னார்--
மகனே!என்  வணக்கத்தை பிரபுவிடம்  கூறவும்.
   அவரிடம்  என் பிரார்த்தனை இதுதான்--
   ஹே,பிரபு !  என்  வணக்கத்தை  ஏற்றுக்கொள்ளுங்கள் .
 உங்களுக்கென்று  எந்த ஆசையும்  கிடையாது. ஆனால்  ஏழை-எளியவர்களின்  மீது  இரக்கப்படுவது இன்னல்  போக்குவது
 உங்கள்  விரதம். 
 நான் இந்நாளில் இருக்கிறேன்.  அந்த விரதத்தை  நினைவில்  கொண்டு
 எனது  பெரும்  சங்கடத்தை
 துயரத்தைப்  போக்குங்கள்.                                                           

ராமசரித மானஸ்---சுந்தரகாண்டம் .பக்கம் பதினொன்று


   ஹனுமானின்   பக்தி , ஞானம் ,வைராக்கியம் நீதி

 நிறைந்த  

 நன்மை  செய்யும்  சொற்கள் கேட்டும்

 ராவணன் சிரித்து,

 இந்த  குரங்கு எனக்கு

 ஞான குருவாகி  விட்டது.

  துஷ்டனே! உன்  மரணம்  நெருங்கிவிட்டது.

 நீச்சனே!எனக்கு  பாடம் சொல்லிக்கொடுக்க

  வந்துவிட்டாயா ? என்றாய்.


  ஹனுமான்  ஜீ   சொன்னார் --

-நீ  சொல்வதற்கு  நேர்  மாறாகத் தான் நடக்கும்.

 மரணம்  எனக்கல்ல,

உன்னருகில்  வந்துவிட்டது.

உன்னுடைய  பிரம்மை தான்  அதிகம்.

நான்  நேரடியாக  தெரிந்து கொண்டுவிட்டேன்.

   ஹனுமானின்  கூற்றைக்  கேட்டு
  ராவணன்  மிகவும்  கோபப் பட்டான்.

உடனே    இந்த  முட்டாளைக்

 கொன்றுவிடுங்கள்

என்று கத்தினான்.

உடனே  அனைவரும்  அவனை  அடிக்க  ஓடினர்.

அந்த  சமயம்  விபீஷணன்

 மந்திரிகளுடன்  அங்கே  வந்தான்.

  அவன்  மிகவும்  பணிவுடன் ,

தூதனை அடிப்பது  நீதிக்கு  விரோதமானது .

   வேறு ஏதாவது  தண்டனை  கொடுக்கலாம்  என்றான்.

எல்லோரும்   விபீஷணின்

 ஆலோசனையை  ஆமோதித்தனர்.

       இதைக்கேட்டு  ராவணன்  சிரித்து ,


இவனின்  அங்கங்களை  காயப்படுத்தலாம்.


குரங்குக்கு  அதன் வால்

 மிகவும்  பிடித்தமானது.

வாலில்  துணி  சுற்றி
 எண்ணெயில்  நனைத்து

  நெருப்பு வைத்துவிடுங்கள்  என்றான்.

  வால்  இல்லாமல் , இந்த  குரங்கு  சென்றால்,

 இவனுடைய   முட்டாள்    எஜமானன்

  இங்கு  வருவான்.

அவனைப்  பற்றி  இவன்  கூறிய
 மகிமையை
  நேரில்  பார்க்கலாம்.

என்று  கட்டளை  இட்டான்.

அவனின்றி அவனியில் வாழ்வதரிது

அவனின்றி  அவனியில்  வாழ்வதரிது.

அவன் புகழே  அவனியில் சாஸ்வதம் .
ஆஸ்திகள் பல கோடி .

வசதிகள் இல்லாததில்லை.

மருத்துவர் கூட்டம் .
இருபெரும் தலைவர்கள் .
அன்புள்ளம் கொண்ட தொண்டர்கள்
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரார்த்தனை.
ஆஸ்திகப் பேரரசர் திமுருகத் தொண்டர்

ஆன்மீக ஞானி தமிழ் வடமொழி மேதை

திருமுருக கிருபானந்தவாரியை
விதியின் வலிமை அமேரிக்கா சென்றாலும் விடாது என்றதற்குத் துரத்தி அடித்த கும்பல்
மண் சோறு சாப்பிடுகிறது.
காவடி எடுக்கிறது.
கண்ணீர் மல்கி பிரார்த்திக்கிறது.
என்ன செய்வது ?
இறைவனை வேண்டும் .
இறைவனின் பலத்திற்கு முன் லௌகீக பலம்

வீண் .

எல்லாம் வல்ல இறைவனின் ஆற்றல் , திறன்

மக்கள்
அறியவே மூப்பு , நோய் , மரணம்.

இறைவா ! போற்றி.
பக்தர்களுக்கு அருள்வாய் போற்றி.
தி.க உன்னை அவமதித்த கூட்டத்தை கலங்கவைக்கும்
உன் வல்லமை போற்றி.

கோடிகள் சேர்த்தாலும் . துணைவியர்கள் சேர்த்தாலும்
தொண்டர்கள் சேர்த்தாலும் பதவிகள் பல வகித்தாலும் உன்னருளின்றி வாழ்வதரிது.
இறைவா! காப்பாற்று!
உன்னடி சரணம்.
உன்னைப்போற்றுவோரும் உன்னடி சரணம் .

உன்னைத் தூற்றியோரும்
தூற்றுவோரும்
உன்னடி சரணம் !
வீரமணிகண்டா! ஐயப்பா! உன்னைத் தூற்றியோரும்

உன் முன் இருகரம் இணைத்து வணங்கும் காலம்.

ராமா! கிருஷ்ணா ! சிவா! முருகா ! கணேசா !

உன்னடி சரணம்.

பல பங்களாக்கள் , அரண்மனைகள் காலப்போக்கில் இல்லை .
உன் புகழ்பாடும் வேதங்கள் , குரான் , பைபிள் , குரு கிரந்த சாஹப் என்றும் மன நிறைவு. மன அமைதி . ஓம் சாந்தி! ஓம் சாந்தி ! ஓம் ! ஓம்!







ஓம் ! இதுவே சத்தியம்.
உன்னடி சரணம்.

Wednesday, October 26, 2016

ராமசரிதமானஸ் ----சுந்தரகாண்டம் --பக்கம் பத்து

    தேவர்களும்  திக்கு பாலகர்களும்  கைகூப்பி

   பயத்துடன் ராவணனைப்     பார்த்துக்கொண்டிருந்தனர்.

ராவணனின் வீரத்தைக்  கண்டும்

ஹனுமான்  மனதில்   எள்ளளவும்

பயம்  ஏற்படவில்லை.

பாம்புகளின்  கூட்டத்திற்கு

 நடுவில்  இருக்கும்  கருடன்  போன்று

 பயமின்றி இருந்தார்.

     ஹனுமானைப்பார்த்து   ராவணன்
  கடும்  சொற்களைக்  கூறி சிரித்தான்.
 பிறகு  புத்திரனின்
வதத்தைநினைத்து   வருத்தமடைந்தான்.

 பிறகு    அனுமானிடம் -- வானரா!நீ  யார் ?
உனக்கு பக்கபலமாக  இருப்பவர்  யார் ? வனங்களை   அழித்துவிட்டாய். 

 என்  புகழ்  மற்றும்  பெயரைக்  கேட்டதில்லையா ?
  பைத்தியக்காரா !
நீ  சிறிதளவும்  அச்சமின்றி  இருக்கிறாய். 

 அரக்கர்கள்   செய்த  குற்றம் என்ன?
முட்டாளே! உனக்கு  உயிர்  பயம்  இல்லையா ?

அனுமான்  கூறினான் :--

 
  நான்   தூதன். யார்  தூதன் ? தெரியுமா  ? ராவணா !

பிரம்மா , விஷ்ணு ,மஹேஷ்   மற்றும்

  உலகில்  அனைத்தையும்

 சிருஷ்டிப்பவரின்  தூதன்.
உன்னைப்போன்ற  கொடியவர்களை
  வதம்  செய்கின்றவரின்  தூதன்.
அனைத்து  உலகத்தையும்

 தலையில்  தாங்குகின்றவரின்
தக்க  பலத்துடன்  வந்துள்ளேன்.

அவர்  தேவர்களை ரட்சிக்க பலவித
  அவதாரம் எடுப்பவர்.
உன்னைப்போல  முட்டாள்களுக்கு
தண்டனை  அளிப்பவர்.
 சிவதனுஷை  முறித்தவர்.
அனைத்து  அரசர்களின்
கர்வத்தை  அளித்தவர்.
கரன் , தூஷன் ,திரிசடை , வாலி

போன்ற   வல்லமை
  படைத்தவர்களைக்  கொன்றவன்.
 ஈடு  இணையற்ற பல சாலி.
அவரின்  மிகச்சிறிய  பலம் கொண்டு
 நீ அகில  உலகையும்  வென்றுவிட்டாய்.

அவரின் மனைவியை  ஏமாற்றி
  கடத்தி வந்துவிட்டாய்.
நான்  அவரின்  தூதர்.

  நான்  உன்  வல்லமையை    நன்கே அறிவேன்.

சஹஸ்ரபாஹுவுடன்  போரிட்டாய்.
 வாலியை  வென்று  புகழ்  பெற்றாய்.
   வாயுபுத்திரனின் இதயத்தைத்  தொடும்
பதிலைக் கேட்டு ராவணன்  சிரித்து

 பேச்சின்  போக்கை  மாற்றினான்.

    வாயு புத்திரன்  கூறினான் --

அரக்கர்களின்  தலைவரே!
எனக்குப்  பசி  எடுத்தது.
நான்  பழங்கள்  சாப்பிட்டேன்.
வானரங்களின்  குணப்படி  மரங்களை  ஒடித்தேன்.
மாயைகளின்  தேவரே!
  உயிர் அனைவருக்கும்  மிகவும்  பிரியமானது.  தீயவழியில்  செல்கின்ற  அரக்கர்கள்
 என்னை  அடித்தனர்.
 நானும் தற்காப்புக்காக  தாக்கினேன்.
என்னை  அடித்தவர்களை  அடித்தேன்.
 இதற்காக  உன்  மகன்  என்னைக்  கட்டினான். நானும் என் எஜமானனின்
 சேவைக்காக  வந்துள்ளேன்.  இதில்
எனக்கு  எந்த வெட்கமும்  கிடையாது.

 ராவணா! நீ  உன்  ஆணவத்தை விடுத்து
 நான்  சொல்வதைக்கேள்.

நீ உன் குலத்தைப் பற்றி எண்ணிப்பார்.
 பிரமையை விட்டுவிடு.
பக்தர்களின்  அச்சங்களைப் போக்கும்
பகவானை  பஜனை செய்.
அனைத்து  ஜீவராசிகளையும்
  கொல்லும்  காலனும்
அவரைக்கண்டு  அஞ்சுவான்.
அவரை  பகைத்துக்  கொள்ளாதே.
  அன்னை  ஜானகியை  அனுப்பிவிடு.

கரனின்  விரோதி  ஸ்ரீ ரகுநாதர்
,சரணாகத் வத்சலர்,
சரணடந்தவரைக்  காப்பவர்.
அன்பானவர்.
நீ  சரணடைந்தால்
 உனக்கும்  அருள் புரிவார்.

  நீ  ஸ்ரீ  ராமரின்  தாமரைப் பாதங்களை  இதயத்தில் வைத்து  சரணடைந்து  விடு.
 நீ  நிரந்தரமாக  ஸ்ரீ லங்காவை
 நிலையாக ஆட்சி  செய்.
 ரிஷி   புலச்த்தியரின்  புகழ்
 நிலவைப்போல்
களங்கமற்றது.
 அந்த  நிலவில் நீ   ஒரு  களங்கமாக  விளங்காதே.
.
  ஆணவம்  மோகத்தை  விட்டு
 ராம  நாமத்தை ஜபி.

 சிந்தித்துப்பார்.
 தேவர்களின்  விரோதியே !
எல்லா நகைகளாலும்
 அலங்கரிக்கப்பட்ட  பெண்
 ஆடையின்றி  நிர்வாணமாக  இருந்தால்
 சோபிக்க மாட்டாள்.

  ராமனை  விரும்பா
 மனிதனின் சொத்து
அதிகாரம்  அழிந்துவிடும்.
 அவைகளைப்  பெறுவதும்
  பெறாததற்குச்  சமம்.

மூல ஊற்று இல்லா நதிகள்
 மழைகாலத்தில்  மட்டும்  நீர் ஓடும்.
 வெயில்  காலங்களில் 

காய்ந்து விடும் .

  நான்  பிரதிக்ஞை  செய்து  சொல்கிறேன் --

ராமனை நேசிக்காத  விரோதிகள்
   தப்பிக்க முடியாது.
அவர்களை  எந்த  சக்தியாலும்
 காப்பாற்ற  முடியாது,

  அறியாமையால் உண்டாகும்
  மோகம்  மிகவும்  
 மனத்துயரம்  அளிக்கக்   கூடியது.
இருள்மயமான  ஆணவத்தை  விட்டு  விடு.
 பாற்கடல் பள்ளிகொண்ட
 பெருமான்  ராமனைத்துதி.




Tuesday, October 25, 2016

ராமசரிதமானஸ் ---சுந்தரகாண்டம் பக்கம் ஒன்பது

 
  சீதையின் ஆசிகளைக்கேட்டு  ஆஞ்சநேயர்


சீதையை  வணங்கி  கைகூப்பி   சொன்னார் ---

  அன்னையே!உங்களுடைய ஆசிகள்

   என்னை எப்பொழுதும் காக்கும்.

   உங்கள்  ஆசிகள் தவறாது, இது  புகழ்  பெற்றது.

   இங்குள்ள் மரங்களின் பழங்களைப் பார்த்து

பசி  அதிகமாகிவிட்டது.

அப்பொழுது  சீதை --மகனே! பெரிய  பலம் வாய்ந்த  போர் வீரர்கள்

      இந்த  வனத்தைக்  காக்கின்றனர்  என்றார்.

    அன்னையே!  நீங்கள்  மகிழ்ச்சியுடன்  ஆணையிட்டால்

எனக்கு  அச்சமே  இருக்காது.
   ஹனுமானின்  அறிவையும் வலிமையையும் பார்த்து

சீதை ---மகனே!ரகுநாதனின் பாதங்களை  வணங்கி   மனதில் கொண்டு

பழங்களை   சாப்பிடவும்.

   அவர்  சீதையை  வணங்கி   தோட்டத்தில்  நுழைந்தார்.

பழங்களை  சாப்பிடவும் , மரங்களை  உடைக்கவும்  தொடங்கினார்.

அங்குள்ள  வன காவலர்களில்  சிலரைக்  கொன்றார். சிலர்  சென்று ராவணனிடம்   புகார் அளித்தனர்.

 தலைவா! ஒரு  மிகப்  பெரிய  குரங்கு வந்துள்ளது. அது  அசோக  வனத்தை

பாழாக்குகிறது .   பழங்களை  சாப்பிட்டது. காவலர்களை  நசுக்கி  தரையில் போட்டுவிட்டது.

 இதைக்கேட்டு  இராவணன்   அதிக  போர்வீரர்களை  அனுப்பினார்.

அவர்களைப்பார்த்து  ஆஞ்சநேயர்  கர்ஜித்தார்.

அனைத்து  காவலர்களையும்   அடித்தார்.  சிலர் குற்றுயிர் ஆயினர்.

சிலர்  அபயக்குரல்  எழுப்பினர்.

பினனர்  ராவணன் அக்ஷய குமாரனை அனுப்பினார். அவன்  எண்ணிக்கையற்ற  வீரர்களுடன் வந்தான். அவனைப்பார்த்ததும்

ஒரு   பெரிய  மரத்தைப்பிடுங்கி  அவனைக்  கொன்று  பேரிரைச்சல் போட்டார்.

சேனையில்  சிலரை அடித்தார். நசுக்கினார்,கொன்றார், சிலர்  பயந்தோடி

ராவணனிடம்    குரங்கு  மிகவும்  பலசாலி என்றனர்.

  மகனின்  வதம்  பற்றி அறிந்து  ராவணன்  மிகவும்  கோபமுற்றான்.

அவன் மிகவும்  பலசாலியான  தன்  மூத்தகுமாரன்

  மேகநாதனிடம்   அவனைக்  கொன்றுவிடாதே,
 உயிருடன்  பிடித்துவா   என்று  அனுப்பினான்.

அந்த  குரங்கு  எங்கிருந்து  வந்துள்ளது  என்பதை அறியலாம்.

   மேகநாத்  தன்  சகோதரன்  கொல்லப்பட்ட  செய்தி  அறிந்து
  மிகவும் சினமுற்றான்.  அவன்   இந்திரனையே  வென்ற
  ஈடு  இணையற்ற  வீரனாவான்.
  இப்பொழுது  பயங்கர போர்  நடக்கும்  என  அறிந்து  கடுமையாக

கூச்சலிட்டுக் கொண்டே  ஓடினார்.

    ஒரு  மிகப்பெரிய  மரத்தை வேரோடு  பிடுங்கி

 மேகநாதனின்  தேரை பயனற்றதாக்கினார்.

தேரை உடைத்தெரிந்தார்.

 அவனுடன் வந்த மிகப்பெரிய வீரர்களை
 தன்  உடலுடன்  சேர்த்து  நசுக்கினார்.

அவர்கள்  அனைவரையும் கொன்றுவிட்டு

 மேகநாதனுடன்  மோதினார்.

அவனின்  மீது  ஒரு  குத்து போட்டு

அவனை மயக்கமடையச் செய்தார்.

சில  நொடிகள்  மயக்கமடைந்து  எழுந்ததும்

பல மாயைகள் புரிந்து  போரிட்டான்.

ஆனால்  வாயுகுமாரனை   வெல்ல  முடியவில்லை.

 இறுதியில்  அவன்  பரகுமாஸ்திரத்தை  பயன்  படுத்தினான்.


வாயுகுமாரர்    பிரம்மாஸ்த் திறத்தின்  மேன்மை

குறையக்கூடாது என்று  நினைத்துக்  கட்டுப்பட்டார்.

பிரம்மாஸ்த்  திரம்   பட்டதுமே    வாயுகுமாரர்
மரத்தில்  இருந்து  விழுந்தார்.

 கீழே  விழும்போதே  பல  வீரர்களைக்  கொன்றார்.

ஹனுமான்  மூர்ச்சை அடைந்ததைக்  கண்டதும்  நாகபாசத்தால்

அவரைக்  கட்டினான்.

  இந்நிகழ்ச்சியைக்  கண்ட சிவன்  தன்  மனைவி  பார்வதியிடம்

கூறினார்-- ராமநாம  ஜெபத்தால்   பக்தர்கள்

  உலக  பந்த்தத்தை முறித்துக்கொள்வர்.
ஆனால்   ராமச்சந்திர  பிரபுவிற்காக
 ஹனுமான்  கட்டுண்டு  இருக்கிறார்.

 குரங்கு கட்டப்பட்டதை  அறிந்து  
வேடிக்கை பார்க்க  பல  அரக்கர்கள்
 ராஜசபைக்கு  வந்தனர்.

வாயுகுமாரர்  ராவணனின்  அவைகண்டு  வியந்தார்.

அதன்  ஐஸ்வர்த்தை   வர்ணிக்க வார்த்தைகள் கிட்டவில்லை.








ராமசரிதமானஸ் ---சுந்தரகாண்டம் --பக்கம் எட்டு

  ஹனுமானின்   சொல்லைகேட்ட   சீதை ,

   மகனே!அந்த வானரங்கள்

உன்னைப்போலவே  இருப்பார்கள் .

அரக்கர்களோ  மிகவும்

பலம்  பொருந்தியவர்கள்.

 போர்வீரர்கள்.

அதனால்  என்  மனதில்  அதிகக்  கவலை  உண்டாகிறது.

நீங்கள்  எப்படி அரக்கர்களை  வெல்வீர்கள்.


இதைக்  கேட்டதும்

 ஆஞ்சநேயர் தன்  உண்மைத்  தோற்றத்தில்  தோன்றினார்.

  தங்கக்  குன்று  போன்ற   மிகப்  பெரிய   உடல்,

எதிரிகளை  பயமுறுத்தும்  தோற்றம்.

மிக அதிக  வீரம் ,

பலம் நிறைந்த பெரிய  தோற்றம்.

  ஆஞ்சநேயரின்  தோற்றம்  கண்டு

சீதையின்  மனதில்   நம்பிக்கை  உண்டாகியது.

ஹனுமான்  மீண்டும்  சிறிய

உருவத்தை  அடைந்தார்.

  சொன்னார் ---
  அன்னையே!  வானரங்களுக்கு  பலம்  கிடையாது.

  அறிவு  கிடையாது.

 ஆனால்

  ஸ்ரீ  ராமரின்   வீரத்தால்

  மிகச்  சிறிய பாம்பு  கூட

 கருடனை  வீழ்த்த   முடியும்.


  வீரமும்  தீரமும்  விவேகமும்

  பலமும்  பொருந்திய

  ஆஞ்சநேயர்  சொற்களைக்  கேட்ட  சீதைக்கு

 மன  நிறைவும்

மன  மகிழ்ச்சியும்  ஏற்பட்டது.

சீதை    ஆஞ்சநேயருக்கு   ஆசி  வழங்கினார்.

நீ பலம் மற்றும்  வீரத்தின்  இருப்பிடமாவாய்.

நீ எப்பொழுதும்  இளமையுடன்  இருப்பாய்.

சிரஞ்சீவியாக  இருப்பாய்.

பிரபு  கிருபை  செய்யட்டும்.

அன்னையின்  ஆசியால்  ஆஞ்சநேயர்  அகமகிழ்ந்தார்.

பார் பார் !

காலை வணக்கம்.
பகவான் பாரினைக் காக்கிறார்.
பார்! பார்! பாரினைப்பார்!
பாரினை இணைப்பார்.
சனாதன தர்மம் பாரதம்.
வையகம் முழுவதும் வியாபித்த தர்மம்.
விவேகானந்தர் மூலம் பாரில்
உள்ளோர் உள்ளன்புடன்
சகோதர சகோதர பாசத்துடன் இணைத்தார்.
இஸ்லாம் என்றே இறைவனால் இணைந்ததுபார்.
ஏசுவால் இணைந்த அவனி.
பகவான் பாரினை இணைப்பார் பார்காண்.
ரைட் சகோதரர்கள் மூலம் சரியாக இணையவைத்தார்.
பாரினில் கலகங்கள் மதங்களால்,
பாரின் சுமை குறைக்க வெடிமருந்துகள்.
வெடித்தால் வெடித்து சிதறுவன
ஆலயங்கள் .
சுனாமிவந்தால் மூழ்கிஅழிபவர்கள்
மக்கள்.
தொற்றுநூய் வந்தால் ஒரு குறிப்பிட்ட
மதங்களைமட்டுமா
தாக்குகின்றன.
கப்பல்/ விமானம்/ தொடர்வண்டி/பேருந்து
விபத்துக்கள்.
அங்கே கூடும் கூட்டம்
உற்றார்.உறவினர், நண்பர்என்று தேடும் கூட்டம்
ஒரே மதத்தையோ, மொழியையோ, இணைத்தையோ
சார்ந்ததல்ல.
அதில் வையகத்தின் அனைத்துஇனமும்
பாதிக்கப்படுகின்றன.
இயற்கை சீற்றங்கள்/விபத்துக்கள்/நோய்கள்
ஒருகுறிப்பிட்ட மத/இன/ஜாதிகளைத் தாக்கவில்லை.
இனிப்பு அனைவருக்கும்ஒன்றே.
கசப்பும் அனைவருக்கும் ஒன்றே.
மிளகாய்த்தூள் முகமதியனுக்கு இனிப்பல்ல.
இந்துக்கு இனிப்பல்ல.
கிறிஸ்தவனுக்கு இனிப்பல்ல.
அனைவர் கண்களில் பட்டாலும்
ஒரே எரிச்சல் தான்.
பாரினை இணைக்கும் சனாதன தர்மம்
வையகம் வாழ்கஎன்றது.
வையகம் ஒரு குடும்பம் என்றது.
கடவுளை உருவமற்றவன் என்றது.
கடவுளை உருவமுள்ளது என்றது.
ஜனன மார்க்கம் ஒன்றே.
இளமை. முதுமை, நரைஅனைத்தும் ஒன்றே.
பாரினை இணைக்கும்தொலை தொடர்பு,
பாரினை துண்டிக்கும் தொலைதொடர்பு
உலகை அளிக்கும் வெடி குண்டுகள்.
உலகைக் காக்கும் வெடிகுண்டுகள்.
உயிரெடுக்கும் கத்த்திகள்,
உயிர்காக்கும் கத்திகள்.
காப்பவன் அகிலத்தை இணைப்பான்.
எடுப்பவன் நிம்மதிஇன்றி தவிப்பான்.
வையகம் வாழ்க! ஜய ஜகத்.!

Monday, October 24, 2016

ராமசரிதமானஸ் --சுந்தர காண்டம் பக்கம் ஏழு

       ஹனுமான் சீதையிடம்  தான்

          யார் என்று கூறினார்.

         அம்மா  ஜானகி  அவர்களே ---நான்  ராம தூதர்.
நான்  சொல்வது  சத்தியம் .
இந்த மோதிரத்தை நான்  தான்   கொண்டுவந்தேன்.

கருணைக்கடலான  ராமர் என்னை அறிந்துகொள்ளத்தான் 

 இந்த மோதிரத்தை  அளித்தார்.

இது தான்  ஆதாரம்.

    சீதை   கேட்டார்--

வானரருக்கும் மனிதருக்கும் 

எப்படி  நட்பு  ஏற்பட்டது?

ஹனுமார் எல்லா விவரங்களையும்  சொன்னார்.

ஹனுமாரின் ஒவ்வொரு  சொல்லும் நம்பிக்கை  அளிப்பதாக  இருந்தது. அவர்  ஹனுமானை மனம் ,
வாக்கு,செயலால் கருணைக்கடல்  ராமரின் தாசர் என்பதை தெரிந்துகொண்டார்.

    இறைவனின்  தாசர்  என்றதும்  ஆழ்ந்த  அன்பு
ஏற்பட்டது. உடலும்  மனதும்  ஆனந்தமடைந்தன.

கண்களில் ஆனந்தக்கண்ணீர் வழிந்தோடியது.

ஹனுமான் அவர்களே! பிரிவுக்கடலில்  மூழ்கிய  எனக்கு    கப்பல்  போன்று  நீர்  கிடைத்துவிட்டீர்.
 
    தியாகியே! எனது  பிரபு  மற்றும்  லக்ஷ்மணனின் 


நலத்தைக்கூறு. 

எனது  பிரபு  மென்மையான 

 மனம்  படைத்தவர்.  
தயை   நிறைந்தவர்..
 அவர்    ஏன்  இப்படி   இரக்கமற்ற 

கொடியவர்  ஆனார் ?

     சீதை  மிகவும்  வருத்தத்துடன்  சொன்னாள்--

தொண்டர்களுக்கு  நலம்  

அளிப்பது    அவர்  இயற்கை  குணம்.

அவருக்கு  என்  நினைவு  உள்ளதா ?

அவரைப்பார்த்து  என்  மனம்  குளிருமா ?


கண்கள்  மகிழுமா ?

  சீதையால்  துன்ப  மிகுதியால் 
 பேசமுடியவில்லை.
கண்களில்  கண்ணீர்  பெருக்கெடுத்தது .

என்  நாதர் என்னை மறந்துவிட்டார்  என்று புலம்பினார்.

சீதையின்  துயரம்

  போக்க  மிக மென்மையாகவும்
 பணிவாகவும்  ஹனுமார்  சொன்னார் --

அன்னையே!

 பிரபு  தன் தம்பி  லக்ஷ்மணனுடன்  நலமே.

 உங்கள்  துன்பத்தால்

அவர் வருத்தமுடன்  உள்ளார்.

 உங்கள்  மீது  அதிக அன்புவைத்துள்ளார்.

 நீங்கள்  தைரியமாக

ஸ்ரீ ராமரின் செய்தியைக்  கேளுங்கள்.

  இதைக்  கூறும் போதே  அன்பு  மிகுதியால்

 ஆஞ்சநேயரின்  கண்களில்  இருந்து

 கண்ணீர்  வழிந்தது.
      ராமர்   சொன்னார் --சீதையே!

 உன்  பிரிவால்

எனக்கு  எல்லாமே

 அனுகூலமற்றதாகி விட்டது.

மரங்களின்  துளிர்  இலைகள்  கூட
  நெருப்புபோல் ஆகிவிட்டது.

இரவு  எமனின் இரவாகி  விட்டது.

நிலவும் சூரியனைப்போல்   சுட்டெரிக்கிறது.

   தாமரைகளின்  வனம் கூட
  ஈட்டிபோல்  துன்புறுத்துகிறது.
நன்மைதருவன  எல்லாம்
துன்பம்  தருவதாகிவிட்டது.

 மணமும்  குளிர்ச்சியும்  மேன்மையும் உள்ள  காற்று  கூட
விஷமுள்ள  பாம்பின்  சீற்றம்போல்  உள்ளது.

மனத்தின்  துன்பத்தை
 வெளியிட்டால்  துயரம்  குறையும் .

யாரிடம்  சொல்வது?

உனக்கும்  எனக்கும்  உள்ள

 அன்பின்  தத்துவம்  எனது
 மனதிற்குத்தான்  தெரியும்.

 மேலும்  அந்த  மனம்
சதாசர்வகாலமும் உன்னிடமே உள்ளது.

 பிரபுவின்  இந்த  செய்தியைக்  கேட்டதும்  சீதையின்  மனதில்  அன்பு  பெருகியது.

சீதை தன்  மெய்மறந்து  ராமரின்

 நினைவில்  மூழ்கினாள்.

           அனுமான் ,  அன்னையே!
ராமரை  நினையுங்கள்.
தொண்டர்களுக்கு  சுகம்   தரும்  ராமர்
  நலம்  தருவார்.
நான்  சொல்வதைக்கேளுங்கள். 

கோழையாக  இருக்காதீர்கள்.

      அரக்கர்களின்  கூட்டம்
விளக்கு பூச்சிகள்  போன்றது.

ராமரின்  பானங்கள்  நெருப்பு.
 அவர்கள் பொசுங்கிவிடுவார்கள்.
தைரியமாக இருங்கள்.
.உங்கள்  செய்தி  ராமர்   அறிந்தால்
 சற்றும்   தாமதிக்க  மாட்டார்.
அவர். சூரியன்.
 இங்கு வந்ததும்
இருள் போன்ற  அசுரர்கள்
  அழிந்துவிடுவார்கள்.

    அன்னையே!நான்   நினைத்தால்
உங்களை  அழைத்துச்  செல்லமுடியும்.
ஆனால்  ராமரின்  கட்டளை  அதுவல்ல.
அன்னையே!சிலநாள்  பொறுத்திருங்கள்.
 ராமர்  வானரங்களுடன்  இங்கு  வருவார்.

 அரக்கர்களை  அழித்து
 உங்களை அழைத்துச்  செல்வார்.
 நாரதர்  போன்ற ரிஷிகளும்
முனிவர்களும்  அவரைப்  புகழ்வார்கள்.