Thursday, August 30, 2018

பக்தியும் சமரச உணர்வும் -பக்தர்கள் -சந்த்

இடைக்காலத்தில்   பக்தர்கள்- சாதுக்கள்
என்ற வேறுபாடுகள் கிடையாது.
இன்று உருவ வழிபாடு செய்ப்பவர்களை பக்தர்கள் என்றும்
அருவ  வழிபாடு செய்பவர்களை  சாதுக்கள் என்றும்
கருதப்படுகிறார்கள்.  சூர்தாஸ் ,துளசிதாஸ் ,மீரா, ஆண்டாள்
போன்ற உருவழிபாடு செய்பவர்கள்  பக்தர்கள்.
கபீர் ,ரைதாஸ் ,நாம்தேவ் போன்ற அருவ  வழிபாடு செய்ப்பவர்கள்  சந்த அதாவது சாதுக்கள்.
    பாரத ஆன்மீகத்தில்  குருவின் மகத்துவம் அதிகம்.
குரு  இன்றி ஞானமும்  விவேகமும் பெறுவது இயலாதது.

ஹிந்துமதமும் சமுதாயஉணர்வும்.

 சாதுக்கள்   மூலம்
சமுதாய பண்பாட்டில்
புது விழிப்புணர்வுகள்.:--
     கடந்த  ஒரு  ஆயிரம் வருடங்களாக
 பாரதநாட்டில்  சாதுக்களின் பரம்பரை
சமுதாயத்தில் புதிய விழிப்புணர்ச்சி
 ஏற்படுத்தியது .  இதில் பக்தியின்
 மகத்துவத்துடன்  ஒதுக்கி வெறுக்கப்பட்ட
மக்களின்  சமுதாயத்தின் வேதனைகளையும்
அவர்களுடைய மனவிருப்பங்களையும்
வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
  பக்தியின்  பெயரால் ,மதத்தின் பெயரால்
சமுதாயத்தில் நடக்கும் போலிநாடகங்கள் ,
கொடுமைகள் ,தீய முறைகள் 
ஆகியவற்றிற்கு எதிராக
சாதுக்கள் உறுதியாக எதிர்த்தனர்.
மனிதர்களை வேறுபடுத்தும் பொய்யான
சுவற்றை இந்த சாதுக்கள் தகர்த்தெறிந்தனர்.
மனித மேலும் சமுதாய மதிப்புகளை ஸ்தாபிக்க
வலிமையூட்டினார்கள் .
சமத்துவம் , உறவுமுறைகள், அன்பு ,
கடவுளின் ஆட்சி அதிகாரம்  ஆகியவற்றை
விளக்கினார்கள் . இவர்கள் சாதனையாளர்கள்.
சீர்திருத்தவாதிகள். சாதுக்களின் குணம் மிகவும்
சாந்தமானது.
 

Wednesday, August 29, 2018

சமுதாயசமரச உணர்வும் நமது ஹிந்து மதமும்

சமுதாயசமரச உணர்வும் நமது  ஹிந்து மதமும்

      சர்வேஸ்வரன்  கடல் போன்றவன் .
 ஆனால் சாதுக்கள் மேகத்தைப் போன்றவர்கள்.  சமுத்திரத்தில் அதிக தண்ணீர் இருக்கிறது .
ஆனால்  தாகம்   தணியாது.
 விவசாயத்திற்கும் பயன்படாது .
ஆனால்  சமுத்திரத்தின் தண்ணீர்
மேகமாக மாறினால்  நன்நீராக  மாறிவிடுகிறது.
அப்பொழுது அகிலம் முழுவதும் வாழ
மழையாகப் பொழிகிறது.
 சாதுக்களின் மனம் வெண்ணெய் போன்றது
சிறிது  வெப்பம் பட்டாலே உருகிவிடும்.
யாராவது சிறிது வேதனைப் பட்டாலும்
அவர்கள்  மனம் உருகிவிடுகிறது.
 சாதுக்கள் அன்பு மழை  பொழிகிறார்கள்.
அறிவு மழை  பொழிகிறார்கள்  என்று துளஸீதாஸர் சொல்கிறார்.

 எந்தவித பயனும் எதிர்பார்க்காமல் கடவுளிடம் அன்புசெய்கிறவர்களும் ,எந்தவித  உலகியல் ஆசைகளும் இல்லாதவனே , சாது என்று கபீர்  சொல்கிறார்.
சாதுக்கள் ஒரு புனித ஸ்தலத்தைவிட  அதிகம் மகத்துவமுடையவர்கள்  என்று பக்தரான பலட்டு

சொல்கிறார்.  சாதுக்கள் நோக்கில் எல்லா
உயிரினங்களுமே  சமம்தான். அவர்களுக்கு தீங்கிழைப்பவர்களையும்  நல்லது செய்பவர்களையும்
சமமாகக் கருதுவர். எப்படி இரண்டுகைகளிலும் அள்ளிய மலர்கள் வடது -இடது அறியாதோ
அவ்வாறே சாதுக்கள் நல்லவர்கள்
கெட்டவர்கள் என்ற பேதம் பார்க்கமாட்டாட்கள்.







இறையருள் இன்பம் வேண்டும்

காலை வணக்கம்
கடவுள் வணக்கம் .
காக்கும் கடவுள் இன்றைய எண்ணங்கள்
வெளிப்பட எனக்களித்த அறிவு.
கடவுள் /பகவான்/குதா/
காக்கவேண்டும் என்றால்
கருணை பெறவேண்டும் என்றால்
கடவுள் உள்ளிருந்து ஆற்றல்
அளிக்க வேண்டும் என்றால்

ஆத்ம திருப்தி , ஆத்மசந்தோஸம்
அடைய வேண்டும் என்றால் ,
அகில உலகம் சுகம் பெற வேண்டும் என்றால்
தனிப்பட்ட வாழ்வில்
ஏகாந்தத்தில் மகிழ்ச்சி வேண்டும் என்றால்
வேண்டும் இறையருள் .

புராணங்கள் வரலாறு அறிந்தால் போதாது.
வள்ளுவர் சொன்னபடி
கசடு அறக் கற்று ,
அறிந்து உணர்ந்து அதன்படி
அறநெறி ,அன்பு நெறி,சத்திய நெறி ,
அஹிம்சை நெறி , நியாய நெறி
வாழவேண்டும்.
தசரதரும் அழுதே இறந்தான் .
,ராமரும் துன்பத்திலே
கிருஷ்ணருக்குத்
தன் தாய் அரவணைப்பு
கிட்டவில்லை.
அவர் மரணமும் பாவத்தின் தண்டனையே.
புவியில் நிலை பெற்றோர் ,
பக்தர்களே!
அனைத்தும் துறந்த பக்தர்களே.
புவியாளும் அரசர்களில்
ராமா கதை சொல்லுதல் என்றால்
ராம் கஹானி கஹ்னா என்றால்
துன்பக் கதை சொல்லுதல் என்பதே
மரபுத் தொடர்.
பக்த தியாகராஜர்,கபீர்,புத்தர்,
மத்வாச்சாரியார் ,சங்கராச்சாரியார்,ராமானுஜர் ,
ராமானந்தர் அனைவரும் இன்றும்

எடுத்துக்காட்டும் மகான்கள் என்றால் ,

ஜாதி மத பேதமில்லா சமுதாயம்
தொழில் தர்மம் அமைத்தவர்கள்.
ராமானந்தர் மதம் மாறிய இந்துக்களை
தாய்மத்தத்திற்கு மாற்றியவர்கள்.
சிவத்துள் ஹரியும் ஹரியுள் சிவனும்
காத்தலும் அளித்தலும் அழித்தலும்
இன்னலும் இன்பமும் அளிக்கும் நீதியும்
கோவணாண்டியின் மகிழ்ச்சியும்
கோடீஸ்வரனின் இன்னலும் கண்டுணர்ந்து
நேர்வழியில் ,சத்தியவழியில் சென்றே
சாதனைகள் புரியவேண்டும். இறையருள் இன்பம் வேண்டும்.

Tuesday, August 28, 2018

பாரத சாது பரம்பரை

   பவித்திரம் ,பரோபகாரம் ,நல்லொழுக்கம்  என்ற விரிவான பொருள் தான் சந்த்  / சாது.  சாது என்பதன்  பொருள்
சாது ,தியாகி , மஹாத்மா ,ஈஷ்வர்  பக்தர், தார்மீக புருஷர்  என்று பரந்து  விரிந்த  பொருள்.
   சாதுக்கள் உலகத்தின் கஷடங்களைப் பொறுத்துக்கொண்டு  மற்றவர்களின் கஷ்டங்களைப்  போக்குபவர்கள்  என்றுதான்  மக்கள் கருதுகிறார்கள்.
சாதுக்கள் புனிதமானவர்கள்.எல்லா இடங்களிலும் ,எப்பொழுதும்  எளிதாக சந்திக்க  முடியும். அவர்கள்
எல்லோரையும் சமமாகக்  கருதுபவர்கள்.
பக்தர்கள்  சாதுக்களை    சாஃஷாத்  கடவுளின் உருவமாகக்
கருதினர்.

  இந்த பூமியில் கடவுளின் அவதாரம்
எப்பொழுதாவது  ஒருமுறை தான்   எடுப்பார்.
ஆனால்  சாதுக்கள் தினந்தோறும்  அவதாரம் எடுப்பவர்கள்.
சாதுக்கள் சமுதாயத்தில் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருப்பார்கள். அவர்களின்  சுக துக்கங்களை
பங்குபோடுகின்றனர். ஒரு  எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ தூண்டுகின்றனர்.   மேலும்  எல்லோருக்கும் அன்பின் செய்தியை அளிப்பார்கள்.



      

Monday, August 27, 2018

ராமானந்தர் --பக்தி உணர்வும் ஹிந்து சமுதாயமும்-9

  ராமானந்தரின்  ஆளுமை  தாராள  மனப்பான்மை.

சமுதாயத்தில் எவ்வித அனுகூலமற்ற தன்மையை  ஏற்கவில்லை.  அவர் மனிதநேயமிக்க சாது என்பதே  உண்மை.   பிறப்பின் அடிப்படையில்   உயர்வு -தாழ்வு என்ற எண்ணத்தை  கடுமையாக  எதிர்த்தார்.
  அவர்  சமுதாயத்திலும் மத நோக்கத்திலும்  ஒதுக்கப்பட்ட  மேலும்  சுரண்டப்பட்ட  மனிதர்களின்  முன்னேற்றத்திற்காக
நன்மைக்காக  உறுதி பூண்டார்.
   பக்தி ரசம்  எல்லாவித
ஏற்றத்தாழ்வையும் போக்கமுடியும்
என்று சொன்னார்.
  அந்த ஒரு கால கட்டத்தில்
குற்றங்களைத்தடுக்க ,
 மனிதநேயம்  வளர்க்க
சரியான நடவடிக்கைதான்.
ஆனால்  துணிச்சலான காரியம்.
 அவரைப்போன்ற   உறுதியும்  துணிச்சலும்
  மிக்க சிந்தனையாளரால் தான் முடியும்.
   
        ராமானந்தரின்  சீடர்களில்
உருவமற்ற இறைவனை
   வழி  படுபவர்களும்,
உருவமுள்ள இறைவனை
 வழிபடுபவர்களும்  இருவகையினருமே
 இருந்தனர்.

ஆனால் அவர்கள் ராமானந்தர் சீடர் ஆனதும்
ராமர்  என்பதே  கடவுள் என்று  ராமநாமம் ஜபித்து
புகழ் பரப்பினர். கபீர் உருவ வழிபாட்டிற்கு எதிரி.
ஆனால்  அவரும்  ராம நாமத்தை ஏற்றார்.
துளசிதாசர்  உருவ வழிபாட்டை  விரும்புபவர்.
அவரும்  ராமரின் பக்தர்.
கபீரின் ராமர் அளவில்லா சக்தி கொண்டவர்.
துளசரின் ராமர்  தசரதரின் புத்திரர்.
 மனித அவதாரங்களின்
கஷ்டங்களை  அறிந்தவர்.
கபீரின்  ராமரின் கரங்கள்  எண்ணிக்கையில்   எல்லை கடந்தது.  துளசியின்  ராமர்  இருகரங்கள் .


ராமானந்தர் ராமரின் உருவமற்ற உருவமுள்ள தன்மை

இரண்டுமே  ஏற்றார்.

 ராமானந்தர்  குரு ராகவானந்தரிடம்  யோகா கல்வி பயின்றார்.

  அந்தக்காலத்தில் இருந்தே ஹிந்துக்களின் எண்ணம் ஹிந்து
முஸ்லீம்  ஆகலாம். ஆனால் முஸ்லீம் ஹிந்து ஆக முடியாது.
ராமானந்தர் ஹிந்துக்களின் இந்த எண்ணத்தை மாற்ற முயன்றார்.  அவர் முஸ்லீம் ஹிந்துக்களை சாஸ்த்திர ரீதியில்
மீண்டும் ஹிந்துக்களாக்கினார். ஆயிரக்கணக்கான   மதம்
மாறிய  ஹிந்துக்களை மீண்டும் ஹிந்துக்களாக்கி புரட்சி செய்தார் . அயோத்தியா அரசர் ஹரிசிங்கின் தலைமையில் முஸ்லிமாக மாறிய 35 ஆயிரம் ஹிந்துக்களை பராபரிவர்த்தன்  மறு மாற்றம் என்ற உரையில் தாயமாதத்திற்கு மாற்றினார். இதை ஸ்வதர்மம்  என்கிறார்.
தாய் மதம் மாறிய ஹிந்துக்களுக்கு உரிய மரியாதை அளித்தார். வீடு திரும்புதல் என்ற முறையில் அவர் சிஷ்யர்கள்  மதம் மாறிய இந்துக்களை மீண்டும் ஹிந்துக்கள் ஆக்கி  வைஷ்ணவ தர்மத்தை ஏற்கும்படி  செய்தனர்.அவர்கள் கையில் துளசிமாலை ,நெற்றியில் வைஷ்ணவ நாமம்  ,நாவில்    ராமநாமம்  இதுவே
மதம் மாறிய   முஸ்லிம்களின் ஹிந்து  மத சன்னமாகியது.
இந்த முறையால்  இந்துக்களிடம்  தன்னம்பிக்கை ,ஹிந்துத்தப் பற்று உறுதியாகியது.

  ராமானந்தரின்  மிகப்பெரிய மாற்றம்  ஹிந்தியில்
 தர்ம   நூல்களை எழுதியதாகும் . மக்கள் தேவவாணி சம்ஸ்கிருதம் விடுத்து மக்கள் பேசும் மொழியை ஏற்றனர்.
வாலமீகி ராமாயணத்தைவிட துளசி ராமாயணம் ஒவ்வொரு வீட்டிலும்  பாராயணம்  செய்யப்பட்டது.
மக்கள் மொழியில்  பக்திநூல்கள் எழுதியதால் ராமனந்தர் வையகப் புகழ்பெற்றார். அவர் ஜகத்  குருவாக வாழ்ந்தார்.






       

Sunday, August 26, 2018

பக்தி உணர்வும் ஹிந்து சமுதாயமும் ஸ்ரீ ராமானந்தர் --9

பக்தி உணர்வும் ஹிந்து சமுதாயமும்  ஸ்ரீ  ராமானந்தர் --9

            அனைவருக்கும்  பக்தி சாதனையின்
அதிகாரமும் உரிமையும்  இருக்கிறது.

   ஸ்ரீ ராமானந்தர்  பக்தியின்
முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல ,
சமுதாய ஒற்றுமைக்கும்
மறக்கமுடியாத தொண்டாற்றியுள்ளார்.
  சமுதாயத்தின் உயர்ந்த -தாழ்ந்த ஜாதி
 உணர்வுகள்   அறத்திற்கும் மதத்திற்கும்
எதிரானது என்றார்.
 கடவுளின் பிரார்த்தனைக்கு
அனைவரும் அதிகாரம் பெற்றுள்ளனர்.
கடவுளிடம்  சரணாகதி அடைவதற்கு
அனைவருக்கும் அதிகாரமும் உரிமையும் உண்டு.
உயர்ந்த தாழ்ந்த ஜாதி என்று இறைவனுக்கு வேறுபாடு கிடையாது.
 சுவாமி ராமானந்தர்  கூறுவார்--யாருமே ஜாதியைப்பற்றி
கேட்காதீர்கள். "பகவான்  ஹரியை பஜனை   செய்பவர்கள்
யாராயிருந்தாலும்  ஹரியே " என்பார்.  அவர் உபன்யாசம் மட்டும் செய்யவில்லை 25000  சீடர்களைக்கொண்ட
மிகப்பெரிய சிஷ்யர்கள்  பரம்பரையை உருவாக்கினார்.
அனைத்து ஜாதியினருக்கும் குருமந்திரம் அளித்து தீக்ஷை வழங்கினார்.  பக்தியின் மூலம் சமுதாய மாற்றத்திற்கான புதிய  யுகத்தின் தலைமுறையை உருவாக்கினார்.
அவ்ரசீடர்களில்   அனந்தானந்தா ,சுகானந்தா,நரஹரியானந்தா,யோகானந்தா  அனைவரும் பிராமணர்கள்.சந்த்  பீப்பா -க்ஷத்திரியர்,சந்த்  கபீர் -நெசவாளி ,சந்த்  சேன் -சவரத் தொழிலாளி,சந்த்  தன்னா -ஜாட் ,பக்த ரைதாஸ் -சக்கிலியர்.அவரின் சிஷ்யைகள் பத்மாவதி, சுரசரி .
கடவுள் பக்தர்கள் அனைவரும் சமம் என்றார் .