Tuesday, December 15, 2015

प्रार्थना

ॐ  नमः  शिवाय! ॐ  नमः  शिवाय   जपो!
शिखर पर पहुँच जाओगे !
सिक्के मिलेंगे सोने के !
चाँदी  की चिड़िया चमकेगी !
पर  अधर्म के लिए जपोगे तो 
अतः पतन होगा ज़रूर !
मिले धन को दान करो !
श्मशान  के भस्म लगाकर 
सादगी के अवतार ;
उनके  नाम जपो ;
विश्वनाथ करेंगे ;
पूरी तेरी  मनोकामनाएँ !
 ॐ नमः शिवाय ! ॐ नमः शिवाय ! ॐ नमः शिवाय ! ॐ नमः शिवाय ! ॐ नमः शिवाय !

Monday, December 14, 2015

கணேசா சரணம்

ஹிந்துக்கள் மன்னிக்கவும்.
  இன்றைறு காலை என்னை எழுதத்தூண்டிய ஒருவேகம்.
மிகுந்த மனப்போராட்டத்திற்குப்பின் எழுதுகிறேன்.இந்த எண்ணங்கள் அடிக்கடி ஒரு தெய்வீக தூண்டுதலால் எழுதிவருகிறேன்.
அழகான விநாயகர் கணபதி
ஞான வடிவம் .
அதை சமுத்திரத்தில் எரிவது
பாவத்தை சம்பாதிப்பதும் இறைனை அவமானப்படுத்துவதும் ஆகும் .சென்னை ஜலப்ரளயத்திற்கு இதுவும் காரணம் .சிந்திப்பீர்  செயல்படுவீர் .திலகர் விடுதலைப்போராட்டம் முடிந்துவிட்டது.
ஞான பூர்வமாக சிந்தியுங்கள்
காவல் துறை பாதுகாப்பு விநாயக ஊர்வலம் என்பதே அது ஆன் மீகமற்ற கலாசாரம்
திருச்செந்தூர் சூரசம் ஹார கூட்டத்திற்கோ பழனி தைப்பூசம்
மாமங்கம்  இதை விட அதிக காவல்துறைபாதுகாப்பு பதட்டம்
விநாயகர் ஊர்வலம் .இது பக்தி அல்ல.அரசியல்  வேண்டாம் இந்த கடவுள் அவமான ஊர்வலம் .

உண்மையே கடவுள்

உள்ளத்தில் உண்மை இருந்தால்
உலகநாதன் உத்தமன் என்றறிந்து
மன மகிழ்ச்சி மனசாந்தி தருவான்.
உண்மையே இறைவன்
உள்ளத்தில் உண்மையே
இறைவன் வசிக்க விரும்பும் இடம்.
பணம் பொருள் பட்டம் பதவி இருந்தாலும் மனநிறைவு
என்று உண்டு.அது உண்மையால்
கிட்டும்.அப்பொழுது அஹம் ப்ரஹ்மாஸ்மி.நான் கடவுள்.


Sunday, December 13, 2015

விழித்தெழுவது எப்போது

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
ஜனவரி  பதினேழு இரண்டாயிரத்து பதினாறு  பெரும் மழை சென்னை
பாதிப்பு இது சத்தியமான செய்தி
என்ற மதுரை விஜயலக்ஷ்மி முகநூல் செய்தி.
அதில் இன்னொருவர்
தனுஷ்கோடி போல் ஆனால்
உணர்வார்கள் .
என்னே உயர்ந்த எண்ணம்..!
தண்ணீரால் கண்ணீரில் மிதக்கும் சென்னை.
இந்த சோகத்திலும்  அரசியல்
ஒட்டுப்படம் ஒட்டாப்படம்
அம்மா படம் இப்போ
அய்யா கலைஞர் படம் அப்போ.!ஃபிலிம் காட்டியது போதும்
உண்மை நாட்டுப்பணி எப்போ.!
திடீர் நகரம் உருவாக்கி
தாழ்வுப் பகுதியில் குடியேற்றி
மூழ்கிய பகுதியில் முழங்கால்
அளவு தண்ணீரில் அரிசி கொடுத்து
ஓட்டு வாங்கும் அரசியல ஒழிக்க
வழிப்பணர்வு எப்ப வரும்.
கோட்டூர் புரம்  தாழ்வில்
மக்களை வசிக்கவைத்தவர் யார்.
ஓட்டு என்ற ஒன்றுக்காக அவர்களை மனசாட்சி இன்றி
மூழ்கடித்து வேடிக்கை பார்க்கும் கட்சிகள்.
நிவாரணம் கையேந்தி சாப்பாடு
காரணம் ஓட்டுப்போடும்
பள்ளத்தில் குடிசையில்
வாழும் ஏழைகள் அறியாமை.
அனுதாபம் காட்டி வெள்ளத்தில் உதவி பள்ளத்தில் குடியமர்த்திய
தலைவர் சுய நலம் அறிவது எக்காலம் .

Saturday, December 12, 2015

ப்ரார்த்தனை

காலை வணக்கம்.

அனைவரையும் அகிலத்தையும்
மூஞ்சூறு வாஹனன் ஞானம் அளித்து காக்க.
மயில் வாஹனன் மனநிறைவு தந்து காக்க.
காளை வாகனன் கருணையுடன் காக்க.
கருடவாஹனன் அஷ்டலக்ஷிமியுடன் காக்க.
தாமரையில் வீற்றிருப்பவள்
கலைகளின் ஞானம்தந்து காக்க
சிம்ம வாஹினி சக்தி வீரம் தந்து காக்க.
காலபைரவன் காலபயம் நீக்கி காக்க.
கருங்குதிரைவாகன கருப்பண்ணசாமி
காவல் தெய்வமாக காக்க.
ஆன்மீகஆசாரியர்கள்
மனிதஒற்றுமை  மனிதநேயம் வளர்த்து அகிலத்தைக் காக்க.
அல்லா ஏசு  சிவன்
விஷ்ணு  அன்பை பண்பை
அஹம்சை அறம் தானம் தர்மம்
செய்வோரை காப்பவர்களே.
இயற்கையான ஒற்றுமையை
சுயநலத்தால் வேற்றுமையாக்கும்
மத போதகர்கள் மனம் மாறி
ஒற்றுமை வளர்க்க தெய்வங்களே.!
நல்லறிவு தாருங்கள்.
நன்மை புரியுங்கள்
மனித இன ஒற்றுமைக்கும்
மனித மகிழ்ச்சிக்கும்
மனிதநேயத்திற்கும்
மதபேத வன்முறை ஒழியவும்
ப்ரார்த்திப்போம்.
இயற்கையைக்காப்போம்.
இயற்கை எய்துவதை நிறுத்தமுடியாது என்பதை மனத்தில் கொள்வோம் .

அவனியில் சுகம் தரும்

வருவான் வடிவேலன் ,
அடியார் துயர் தீர்க்கவே 

வருவான் வடிவேலன் ,
வேண்டிய வரமளிப்பான் 
வேண்டாதவைகளைத் தவிர்க்கவே 
வேதனைகளைப்போக்கவே 
வருவான்  வடிவேலன்.
வரங்கள் வேண்டியதைப் பெறவே 
அவனடி பற்றுவோம் .
வேலன்வரும் வேளை 
வேழமுகத்தோன் அருள் கிட்டும் .
அண்ணனின் அருளும் 
 தம்பியின் அருளும் 
அவனியில்  சுகம் தரும் .--மன 
சாந்தி தரும்; மகிழ்ச்சிதரும்.
ஆறுதல் தர  வருவான் வடிவேலன்.







Friday, December 11, 2015

praise nature

இயற்கை மிக சக்தி வாய்ந்தது .

இயற்கையின் வளம் மகிழ்ச்சி தரக்கூடியது.

இயற்கையைப்  பேண, 
இயற்கையையே தெய்வமாக வழிபட்ட முன்னோர்கள்.
ஆனால் ,நகரம் என்ற செயற்கை  ஆடம்பரம் 
ஆஸ்தி தந்தது. பொழுதுபோக்கு அம்சங்கள் தந்தது.

பெரும் மால்கள் தந்தது. பணம் .பணம்.பணம்.

கடன் தர வங்கிகள்,கடன் வாங்கித்தர தரகர்கள் ,
கடன் வாங்கத்தூண்ட முகவர்கள் ,
 பார்த்ததெல்லாம் வாங்கிக்குவித்த  மக்கள் , இன்று 
மாரி  வெள்ளத்தால் பரிதாப நஷ்டத்தில் 
சிந்திக்கவேண்டும் தவணை முறையில் வாங்கிய 
மரத்தூள் அழுத்திய மரக்காட்டில் அழகுதான் ;ஆ னால் 
மழை  தண்ணீர் ஊறியதால் தூள்;தூள் ;
தெய்வப்படங்கள் இன்று தெரு குப்பைத்தொட்டியில் 
இயற்கை சீற்றத்தால் இயல்பான வாழ்க்கை பாதிப்பு.
மதங்கள் மறந்த நட்பு ,
மனம் நிறைந்த களங்கமில்லா அன்பு.
இறைவனின் லீலையால் ஒன்று சேர்ந்த சரித்திரம்.
இறைவனை வணங்குவோம் ;இயற்கையைப் போற்றுவோம்.