Monday, May 25, 2015

அதையே கண்டவர் விண்டிலை விண்டவர் கண்டிலை

காலை நேரம்,குளிர்ந்த காற்று 
நேற்று சற்று மதியம் வெளியில் சென்றபோது 
சகித்த    தகித்த வெயிலின் கொடுமை ,
எரிச்சல் ,வியர்வை ,
மாலை ஐந்துமணிக்கும் ,காலை ஐந்துமணிக்கும் 
மதியம் பன்னிரெண்டுக்கும் இரவு பன்னிரெண்டுக்கும் 

மிகப்பெரிய வேற்றுமை.
இந்த அத்புத அத்ருஷ்ட சக்தி மாற்றம் 
இறைவனின் இயற்கை லீலை 
கடவுளின் சமத்துவம் 
குளிர் சாதன அறையில்லை என்றால் 
மின்விசிறி இல்லை என்றால் 
அனைவரும் ஒரே நிலை .
அவனின் விந்தை அமர நிலை அடைந்தால் 
சந்தக்கட்டையானாலும் ,எரு  ஆனாலும் 
மின் தகனம் ஆனாலும் 
ஒரே எரி  சாம்பல்.
மண்ணில் புதைந்தாலும் மம்மி ஆனாலும் 
ஒரேவித எலும்புக்கூடுமாற்றம்.
லீலாவினோதனின்  லீலை 
லௌகீக  மாற்றம் ,அறிந்து புரிந்து தெளிந்தால் 

அலௌகீக  ஆன்மீக ஆண்டவன் 
த்யானம்  சாந்திக்கு ,அதாவது ஆத்ம்சாந்திக்கு 
அத்யந்த அவசியம் என்பதை 
அவனியில் அறிவர்.
அநுபூதி அடைந்த நம் முன்னோர் 
காட்டிய வழி  பிரம்மானந்த அநுபூதி .
அதில் சிறந்தது கந்தரனுபூதி.
ஆத்மானுபூதி 
அதையே கண்டவர் விண்டிலை விண்டவர் கண்டிலை 
என்றே கூறினார்.
காணும் காட்சியை நம்பும் நாம் 
உணரும் காற்றை நம்பும்னாம் 
காணா  மின்சக்தி ஆற்றலை 
மகிழும் நாம் ,
மலரின் நறுமணம் உணரும் நாம் 
இறைவனின் மகிமை உணருவதே 
இறையனுபூதி .
இணையற்ற  இன்பம் தரும் 
இறையனுபூதி.
உணர்ந்தவர் பித்தர் சித்தர் 
உலகியில் துறந்து 
உண்மை பேசுவோர்.
ஊசி நுனி அளவும் உடன்வராது என்றே 
உணர்ந்து வாழும் ஆழ்மன  ஒருமைப்பாடு 
வந்தால் வையகம் அமைதிப்பூங்கா.


கல்லாப் பிழையும்,
 கருதாப் பிழையும், 

கசிந்துருகி

நில்லாப்

 பிழையும்,
 நினையாப் 
பிழையும், நின்னஞ்செழுத்தைச்

சொல்லாப்

 பிழையும்,
 துதியாப்
 பிழையும்,
 தொழாப் பிழையும்

எல்லாப்     பி ழையும் பொறுத்தருள்வாய்    


கச்சியேகம்பனே.

– திருவேகம்ப மாலை,

 பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்)

நாம் விரும்பும் சக்தி பெறுவோம்.

 விநாயகர்  விரும்பும் நாயகர் 
விக்னங்கள் தீர்க்கும் 

விக்னவினாயகர் 

வினைகள் தீர்க்கும் 

வினைதீர்க்கும் விநாயகர் 
சித்தி தரும் சித்தி விநாயகர் 

முக்தி தரும் முக்குருணி விநாயகர் ,
மன மகிழ்ச்சி தரும் 
மணக்குள விநாயகர் ,
கலக்கம் தீர்க்கும் 
கற்பக  விநாயகர் .
அனைத்து ஆண்டவர்களுக்கும் 
ஆரம்ப பூஜை ஆதிமுதல் 
யானை முகத்தோனுக்கே .

அவன் பாதம் தொழுதே 
காவியங்கள் துவங்கும்.
பிடித்துவைத்த 
மஞ்சள் பிள்ளையார் 
பிடித்தமுடன் பூஜை 
புஷ்பார்ச்சனை 
பாதவிநாயகர்  தரிசனம் பின்னரே 
பழனி ஆண்டவன் தரிசனம்.
ஆற்றங்கரை ,குளக்கரை விநாயகர் 
ஆங்காங்கே அரசமர பிள்ளையார்.
த்வபிகர்ணம் தோப்புக்கரணம் 
ஞானம் நினைவாற்றல் தரும் -அந்த 
ஞான விநாயகனை 
நாளும் தொழுவோம் 
நாடித் தொழுவோம் 
நாம் விரும்பும் சக்தி பெறுவோம்.



Sunday, May 24, 2015

அன்பு அழுதுவடியும்.

அன்பு போதும் என்றார் 
பசிவந்திடப்பணம் வேண்டும் 
அன்பு பசி தீர்க்காது.
மானம் காக்கத் துணி வேண்டும் .
துணிவாங்க அன்பு போதாது 
பணம் வேண்டும்.
இருக்க வீடு வேண்டும் .
குடி இருக்க அன்பு போதாது 
வாடகை தர பணம் வேண்டும்.

காதலே பெரிது என்று 
கண்ணீர் மல்கி 
கசிந்துருகி 
இருந்தோர் 
பரதேசிகள்.
போர் செய்து 
பலரை பலியிட்டு 
பலரை கொன்று 
ஆட்சி பிடித்தோர் 
ஆட்சியாளர் .
அரசன்.
அன்பு எங்கே /
எப்பொழுதும் அடிமைதான் .
பணம் கோலோச்சும்.
அன்பு  அழுதுவடியும்.

வேத மறை நெறியிலே.இன்னல் களைய இதுவே சன்மார்க்கம் .

அவனியில்  ஆண்டவனின் படைப்புகள் 

கண்ணுக்கு தென்படுபவை ,

கண்ணுக்குத் தெரியாதவை.

தொட்டு உணர்பவை 
தொடாமல் தெரிபவை.
வியர்வையில்  ,
முட்டையில்,
கருவில் ,
வெளியில் ,
காற்றில் 
தனக்குள் 
என்று  எத்தனையோ ,

அத்தனையும் அறியா மனிதர்கள் ,

அவன் அறிவதெல்லாம் தான் வாழ ,
தன்  குல ம் வாழ ,
தன்  மதம் வாழ 
தன்  இனம் வாழ 
வாழ நினித்து  அளிக்கும் 
இயற்கையை 
அழிக்கும்  அறிவீனம் .
தான் வாழ அவன் அழித்த  
விலங்கினங்கள் ,
புள்ளினங்கள்,
தாவரங்கள் ,
மனித இனங்கள் ,
மனித ஆற்றல்கள் 
மனிதனின் படைப்புகள்,
இயற்கைப் பேரழிவுகள் ,
போதைப்பழக்கங்கள் ,
பேதை பழக்கங்கள் 
சிந்தித்து நன்னெறி நல்வழி காட்டிய ,காட்டுகின்ற 
நல்லவர்கள் ,வல்லவர்கள், அறிவியலர்கள் ,
ஆன்மீக சிந்தனை ஆளர்கள்,
தனக்கென வாழும் சமுதாயத்தில் 
பிறர்க்கென வாழும் 
வள்ளல்கள் ,
இயற்கை வளம் பெருக்கும்   
இயற்க்கைப்  பிரியர்கள்,
நீர்வளம் காக்க ,
நிலவளம் காக்க ,
விலங்கினம் காக்க ,
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என 
வாழும்  மஹாத்மாக்கள் ,
உத்தமர்கள் 
எண்ணிக்கையில் குறைந்தி ருந்தாலும் 
ஏற்றமிகு பண்பாளர்கள் 
அனைவரின் உள்ளத்தில் 
சற்றே மனிதநேயம் வளர்ப்பவர்கள்.
இறையன்பர்கள் ,
இவ்வையகம் நிலைக்க காரணமானவர்கள் 
இறைப்பற்றாளர்கள்.
அவர்கள் வழியில் இறைவனை 
இயல்பில் நேசித்தால் இல்லை துன்பமே .
வையகம் காட்டும் இன்பம் 
இறைவன் வழிகாட்டும் 
வேத மறை நெறியிலே.
இன்பமே உண்டு.
இன்னல் களைய இதுவே சன்மார்க்கம் .




पर यह नहीं जानते मृत्यु से

हम  मनुष्य भोले -भाले

कर सकते  हैं पहाड़ को राई। 

राई को पहाड़ बनाना नहीं जानते. 

नदी को बाँध बनाकर रोकना तो जानते हैं ,

पर नहीं जानते नयी नदी की सृष्टी। 

मारना  -क़त्ल करना जानते हैं 

न  जानते हैं 

जीवित करना। 

जानते हैं ठगना -ठगाना 

पर हम ठग प्रकट करना  

मानना नहीं  जानते. 

बच्चे से जवान ,जवान से बूढा 
 बूढ़े से शव  जैसे होते हैं 
न तो जानते हैं 
,सदा जवानी बनाये रखने के काबिल नहीं हम. 
पर अहंकार भरी बातें ,
करने में तो काबिल. 

बमें बनाने ,फेंकने जान लेने ,डराने ,धमकाने 
तो  जानते हैं  हम,
पर विनाश की तरीकों  को 
दुखाने को 
रिश्वत देकर पद पाने को 
जो गलत तरिकाएँ  हैं सब तो जानते हैं 
पर यह नहीं जानते मृत्यु से 




Saturday, May 23, 2015

aathmaa --parama aathma

கிருஷ்ணன் மட்டும் பர  ஆத்மா .ஏன் ?
ராமர் மரியாதை புருஷோத்தமர்.
சிவனுக்கு ஆத்ம  லிங்கேஸ்வரர்  என்று பெயர்.

சங்கரர் ,ரமணர் அஹம் பிரம்மாஸ்மி 

அத்வைத்துவம்  ஆத்மா பரமாத்மா ஒன்றே .

ராமரை இதயத்தில் வைத்து பூஜித்தவர் 
தனது இதயத்தை கிழித்து காட்டி 
தன்  ராம பக்தியை நிலைநாட்டியவர் 
அதி பலசாலி ஹனுமான்.

அவர் லோக ரக்ஷகர்.

என்னை சரணடைந்தால் ரக்ஷிப்பேன்  என்பவர்.


கிருஷ்ணன் லோக ரஞ்சகர் /லோகரக்ஷகர்.
கோபிகா பிரியர். ஆயர்.
உத்தவ் மூலம் நிர்குண பக்திக்கு 
தூது அனுப்பியவர் .
கிருஷ்ண  பக்தியே  அத்வைத்துவம் .
பர  என்றால் அடுத்த /அந்நிய 
என்றே பொருள்.
ஆத்மா -பரமாத்மா வேறு .
பரம என்றால் ஷ்ரேஷ்ட்  உயர்ந்த ஆத்மா 

மனித அவதாரத்தில்  பரம  ஆத்மா 
பரம பிதா 
பர லோகம் விஷ்ணுலோகம் 
கைலாயம் செல்லலாம்.
வரலாம் 
பரம  பதம் என்பர்.
ஆகையால் கிருஷ்ண பரந்தாமன் 
கிருஷ்ண பரமாத்மா  .
என் சிற்றறிவில் தோன்றிய விளக்கம்.
நான் வேத உபநிஷத்துகள்  கற்றவன் அல்ல .
என்மனதில் தோன்றுவதே விளக்கம்.

இறைவனின் ஆற்றல் வையகம் புகழும் .

ஆண்டவன் இல்லை என்றார் 

அனைவரும் அவனியிலே 

அமைதி பெற இறுதியில் 

ஆண்டவன் புகழ் பாடி அடக்கமானார்.

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 
கலியுக பக்திக்கு ஒரு தூண்டும் விளக்கு.

அவன் இருப்பதை உணர்த்த 

அம்மா முதல்வரின் சத்தியப் பிரமாணம் அவன் பெயரால்.
அவரது அமைச்சர்கள் அவன் பெயரில் 
அவர் மீண்டும் பதவி அலங்கரிக்க 
அனைத்துவித பிரார்த்தனைகள்,
மண் சோறு தின்பதில் இருந்து முடி காணிக்கை வரை 

விநாயகர் கோயில் கட்டுவதில் இருந்து தங்கத்தேர் பவனிவரை 

தன்னையே  அழித்து  அம்மாவின் ஆட்சிக்கு 
காணிக்கை செலுத்தும்  அமர பக்தி ,
தங்கக் குடம் அளித்த தங்கத் தாரகை 

தரணியில் ஒளிர மிளிர  
 இறை பக்தியில்  சரணடைந்த  இன்றைய நிகழ்ச்சி.
இயற்கை அளிக்கும்  பாடம் .
இறைவனின் சரணாகதி  இன்றைய 
ஒரேவழி. 
அறிவியல் ஆற்றலே ஆண்டவன் அருள் தானே .
அறிவியல் தடைகள் நடக்கும்  போது
இயற்கையின் இன்றியமையாமை உணரும்போது 
இறைவனின் ஆற்றல் வையகம் புகழும் .