Thursday, January 5, 2017

रामचरित मानस --ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --முப்பது.

रामचरित मानस --ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --முப்பது.


   ராமர் கூறியதை ஏற்று சிவன் சொன்னார் ,
 இது தகுந்த செயலல்ல. ஆனால்
 நீங்கள் சொல்வதை  மறுக்க முடியாது.
உங்கள் கட்டளையை சிரமேற்கொண்டு அதை
பின் பற்றுவது  எனது  மேலான கடமை.

தாய், தந்தை, குரு ஆகியோரின் கட்டளையை
 சிந்திக்காமலேயே சுபமானது என்றே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
மேலும் நீங்கள் எனக்கு அனைத்துவிதத்திலும்
நன்மை அளிப்பவர். என் நலம் விரும்புபவர்.
நான் உங்கள் கட்டளையை ஏற்று நடக்கிறேன்.

சிவபகவானின்  பக்தி ,ஞானம், தர்மசிந்தனையுடான  வாக்கு ,
ஆகியவற்றைக்கேட்டு  ஸ்ரீ ராமர் மிகவும் திருப்தி அடைந்தார்.
ராமர்  சொன்னார் -- உங்களுடைய பிரதிக்ஞை  முடிந்துவிட்டது.
இப்பொழுது நான்  சொன்னதை  மனதில் வைத்துக்கொள்ளவும் .
இதைக்  கூறியதும்  ராமர்  மறைந்துவிட்டார்.
சிவபகவன் ராமரின் உருவத்தை மனதில் பதிந்து கொண்டார்.

அப்பொழுதே சப்தரிஷிகள் சிவபகவானிடம் வந்தனர்.
அவர்களிடம் மென்மையாகக் கூறினார் ;-
நீங்கள் பார்வதியிடம்  சென்று  அவரின் அன்பை சோதியுங்கள்.
ஹிமவானை பார்வதியை அழைத்துவர அனுப்புங்கள்.
பார்வதியின் சந்தேகத்தைப் போக்குங்கள்.
 சப்தரிஷிகள் அங்கு  சென்று தவமே உருவெடுத்தது போன்று
தவத்தில் ஈடுபட்ட பார்வதியைப் பார்த்தனர்.
 முனிவர்கள்  அவரிடம்  கேட்டனர் ;-
மலைமகளே! நீ ஏன் இப்படி கடினமான தவம்
செய்துகொண்டிருக்கிறாய் ?
நீ யாரை ஆராதனை செய்கிறாய்?
என்ன விரும்புகிறாய் ?
எங்களிடம் உன் உண்மையான ரகசியத்தை ஏன் சொல்லவில்லை ?

பார்வதி தேவி சொன்னாள்:-
 என் தவ விஷயம் சொல்ல என்  மனம் வெட்கப்படுகிறது.
நீங்கள் என் முட்டாள்தனத்தைக் கேட்டு சிரிப்பீர்கள்.
மனம் பிடிவாதம் செய்கிறது. தண்ணீரில் சுவர் எழுப்ப விரும்புகிறது.
நாரதர் சொன்னதை சத்திய வாக்காக  கருதி ,
இறக்கைகட்டி  பறக்க விரும்புகிறேன்.

நான் சிவனையே கணவனாக விரும்புகிறேன்.
 என் அறியாமையைப் பாருங்கள்.
பார்வதியின்  வார்த்தைகளைக்கேட்டு  முனிவர்கள் சிரித்தனர்.
 உன் உடல் மலையால் உருவானது.
நாரதரின் உபதேசம் கேட்டு யாருடைய வீட்டில் வசிக்கிறாய் ?

அவர் தக்ஷனின் மகன்களுக்கு உபதேசம் செய்தார்.
அவர்கள் திரும்பிவரவில்லை.
சித்திரகேதுவின்  வீட்டை அவர்தான் அழித்தார்.
இதே நிலைதான்  ஹிரண்ய கஷ்யபுவிற்கு  ஏற்பட்டது.

நாரதர் உபதேசம் கேட்ட ஆண்களும் பெண்களும்
 வீட்டைவிட்டு வெளியேறி
பிச்சைக்காரர்கள் ஆகிவிடுகின்றனர்.
அவர் மனம் கபடமானது. உடலில் நல்லவர்களின் தோற்றப்பொலிவு.
அவர் அனைவரையும் தன்னைப்போலவே ஆக்க விரும்புகிறார்.
 அவரின் பேச்சை நம்பி
 வருத்தமான எல்லாவற்றியும் அலட்சியம் செய்கின்ற,
குணமற்ற,வெட்கமில்லாத, கெட்ட வேடமுள்ள ,
மனித மண்டை ஓடுகளை மாலையாய் அணிந்த ,
குலமற்ற , வீடுவாசல் இல்லாத, உடலில் பாம்பை சுற்றிவைத்திருக்கிற
நிர்வாணமான சிவனை  கணவனாக அடைய விரும்புகிறாய்.
இப்படிப்பட்ட வரனை அடைவதால் உனக்கு என்ன சுகம் கிடைக்கும்?
நீ அந்த மோசக்காரனின் தூண்டுதலால் தவறு செய்கிறாய் .
முதலில் பஞ்சாயத்தார் சொன்னதால் சதியை திருமணம் செய்தார்.
ஆனால் அவரை கைவிட்டு கொன்றுவிட்டார்.

இப்பொழுது சிவனுக்கு எவ்விதக் கவலையும் இல்லை.
பிச்சை எடுத்து சாப்பிடுகிறார். ஆனந்தமாக துயில்கிறார்.
இப்படிப்பட்ட தனிமையில் வசிக்கின்ற வருடன்  மனைவி  இருக்கமுடியுமா ?
நாங்கள் சொல்வதைக்கேள். உனக்காக நல்லவரனைப் பார்த்துள்ளோம்.
அவன் அழகன்.
சர்வ வல்லமை படைத்தவன்.
 பரிசுத்தமானவன்.
சுகமளிப்பவன்.
நல்ல ஒழுக்கம் உடையவன்.
அவனுடைய புகழையும் லீலைகளையும் வேதங்கள் பாடுகின்றன.
 அவன் குற்றமற்றவன்.
அவன் எல்லா நற்பண்புகளையும் கொண்டவன்.
வைகுண்டத்தில் இருப்பவன். லக்ஷ்மியின் கணவன்.
இப்படிப்பட்ட  வரனை அழைத்துவந்து உன்னுடன் சேர்த்துவிடுவோம்.

இதைக்கேட்ட மலைமகள், ஆம் ,நான் மலையிலிருந்து தோன்றியவன் .
என் பிடிவாதத்தை விடமாட்டேன். உடல் அழியட்டும். கவலை இல்லை.
தங்கமும் கல்லில் இருந்துதான் தோன்றுகிறது.
நெருப்பில் புடம் போட்டாலும் அது தன குணத்தை விடுவதில்லை.
அதனால் நான் நாரதர் கூறியபடி தான் இருப்பேன்.
அதை விடமாட்டேன்.
வீடு அமைந்தாலும் சரி, பாழடைந்தாலும்  சரி ,
நான் இதற்கு அஞ்சவில்லை.
குருவின் வாக்கில்  நம்பிக்கை இல்லை என்றால் ,
அவனுக்கு சுகமும் சாந்தியும் , வெற்றியும் கனவிலும் கிட்டாது.

மகாதேவர் தீய குணங்களின் பவனம்.
விஷ்ணு அனைத்து  குணங்களின் இருப்பிடம்.
ஆனால் மனம் எதில் ஈடுபடுகிறதோ, அதில் தான் அதற்கு சுகம்.
முனிவர்களே! நீங்கள் முதலிலேயே சந்தித்திருந்தால் ,
உங்கள் கூற்றை  ஏற்பேன்.
நான் இப்பிறவியில் சிவனை ஏற்றுக்கொண்டுவிட்டேன்.
ஏற்றபின்  குணம் -குற்றங்களை அறிந்து எண்ணி என்ன பயன் ?

உங்கள் மனது பிடிவாதமாக  இருந்து திருமணம் செய்ய விரும்பினால்
உலகில் எத்தனையோ வரன்கள்-வதுக்கள் இருக்கின்றனர்.
விளையாடுபவர்களுக்கு சோம்பேறித்தனம் இருக்காது.
வேறு எங்காவது சென்று விளையாடுங்கள்.

எனது கோடி பிறவிகளிலும் சிவனையே மணந்து கொள்வேன் . இல்லையெனில்  குமரியாகவே  இருந்துவிடுவேன்.
சிவனே வந்து நூறுதடவை சொன்னாலும்
நாரதரின் உபதேசத்தை விடமாட்டேன்.
 நான் உங்களின் கால்களில் விழுகிறேன்.
நீங்கள் உங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்.
மிகவும் நேரமாகிவிட்டது.
பார்வதியின் சிவனிடத்தில் உள்ள அன்பு கண்டு கேட்டு ,
முனிவர்கள் சொன்னாற்கள்:--
உலகமாதாவே!நீங்கள் வாழ்க!வாழ்க!
ஜெயம் உண்டாகட்டும்.
நீங்கள்  மாயை. சிவன் பகவான்.
நீங்கள் இருவரும் அனைத்து உலகங்களுக்கும்
தாய் -தந்தையர்கள். முனிவர்கள் முனிவர்கள் மிகுந்த ஆனந்தமடைந்தனர்.
பார்வதிதேவியின் பாதங்களை வணங்கிவிட்டு சென்றனர்.
 முனிவர்கள் ஹிமவானை பார்வதியை அழைத்துவர அனுப்பிவிட்டு
பிறகு சிவனை சந்தித்து  பார்வதியின் நிலையைக் கூறினர்.

பார்வதியின் அன்பைக் கேட்டதுமே ,
 சிவபகவான் ஆனந்தசாகரத்தில்
மூழ்கிவிட்டார்.
சப்தரிஷிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் பிரம்மலோகத்திற்குத் திரும்பிச்சென்றனர்.
சிறந்த சிவன்  மனதை நிலைப்படுத்தி ராமரின்  தியானத்தில் ஈடுபட்டார்.

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -இருபத்தொன்பது

ராமசரிதமானஸ்  --பாலகாண்டம் -இருபத்தொன்பது

   சதி உயிர்த்தியாகம்   செய்ததிலிருந்து
 சிவபகவானின்  மனதில் வைராக்கியம் வந்துவிட்டது.

அவர் சதாசர்வகாலமும் ராமரை ஜெபிக்கத் துவங்கினார்.

அங்கு இங்கு எங்கு சென்றாலும் இராமரின் குணங்களின்

கதைகள்  கேட்கத் துவங்கினார்.

சிதானந்தரும், சுகத்தின் இருப்பிடமும, மோகம் ,
ஆணவம் , காமமும் இல்லா  சிவபகவான் ,
அனைத்து உலகிற்கும் ஆனந்தம் தருகின்ற ,
 பகவான்   இப்பொழுது ராமரை இதயத்தில் வைத்து
ஜபம் செய்துகொண்டே  பூமியில்
சுற்றத் தொடங்கினார்.
அவர் சில இடங்களில் முனிவர்களுக்கு
ஞானோபதேசம் செய்வார்.
சில இடங்களில்  ராமரின் புகழை வர்ணிப்பார்.

பகவான்  சிவன் எந்தவித பலனையும்  எதிர்பார்க்காதவர்.
இருந்தாலும் தன் பக்தனின் பிரிவுத் துன்பத்தால் ,
துக்கப்படவராக  இருந்தார்.

இவ்வாறு நீண்ட காலம் கழிந்துவிட்டது.
ராமரின்  சரணங்களில்  நித்தம் புதிய அன்பு உண்டாகியது.
 சிவபகவானின் கடின  நியமங்கள்,
அவர் இதயத்தின் ஆழ்ந்த அன்பு  ஆகியவற்றை
ராமர்  கவனித்தார்.
  நன்றியுள்ள , கிருபை நிறைந்த , ,
குணக்கருவூலமான, மிக சக்திவாய்ந்த  ராமர்
காட்சி அளித்தார்.
ராமர் பலவிதங்களில் சிவபகவானை புகழ்ந்தார்.
உங்களைத்தவிர  வேறு யாரும்  இப்படிப்பட்ட
விரதத்தைக் கடைப்பிடிக்க முடியாது.
 ராமர் பலவிதங்களில் சிவபகவானுக்கு விளக்கினார்.
பார்வதியின்  பிறப்பைப் பற்றி சொன்னார்.
கிருபையின் பொக்கிஷமான   ராமர்
பார்வதியின்  மிகவும் புனிதமான செயலைப் பற்றி கூறினார்.
பிறகு சிவனிடம் சொன்னார்:-
என்னிடம் மிகுந்த அன்பு  இருந்தால்,
என்னுடைய வேண்டுகோளைக் கேளுங்கள்.
நீங்கள்   பார்வதியை மணந்து என் கோரிக்கையை
நிறைவேற்றுங்கள்.

Wednesday, January 4, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --இருபத்தெட்டு

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --இருபத்தெட்டு

       பிராண பதியான  சிவனின்  பாதங்களை இதயத்தில் வைத்து

வணங்கி    பார்வதி வனத்தில்   தபம் செய்யச் சென்றார்.
பார்வதியின் மிக அழகான மென்மையான  உடல்
தவம் பண்ண தகுதியற்றது. இருந்தாலும்
கணவனின்  பாதங்களை நினைத்து  எல்லா
சுகங்களையும் தியாகம் செய்துவிட்டார்.
சுவாமியின் சரணங்களில்  தினம் புதிய அனுராகங்கள்
உண்டாகியது. தன்  மெய் மறந்து தாபத்தில் ஈடுபட்டார்.

ஓராயிரம் ஆண்டுகள் வரை வெறும்
பழங்களும் கிழங்குகளும் சாப்பிட்டார்.
பிறகு நூறாண்டுகள்  காய்கறிகள் மட்டுமே
சாப்பிட்டு நாட்களை கழித்தார்.
சில நாட்கள் தண்ணீரும் காற்றுமே உணவாகின.
சில நாட்கள் கடுமையான உபவாசம் .(பட்னியாக )  இருந்தாள்.
மூவாயிரம் ஆண்டுகள் உதிர்ந்த இலைகளை சாப்பிட்டார்.
பிறகு காய்ந்த இலைகள் சாப்பிடுவதையும் விட்டுவிட்டார்.

அதனால் தான் பார்வதியின் பெயர் அபர்ணா என்றாகியது.
தவத்தின் காரணமாக  மெலிந்த  உமாவின்  உடல் பார்த்து  ஆகாயத்தில் இருந்து கம்பீரமான  இறைவனின் குரல் வந்தது.

 பர்வத ராஜ குமாரியே!  கேள் .
 உன்னுடைய  மனவிருப்பம்  வெற்றிபெற்றுவிட்டது.
இப்பொழுது எல்லா பொறுக்கமுடியாத  இன்னல்களை  விட்டு விடு.
இப்பொழுது உனக்கு சிவபகவான்  கிடைப்பார்.
ஹே  பவானி !  தீரர்கள் , முனிவர்கள் ஞானிகள் தோன்றினர்.
ஆனால் இப்படிப்பட்ட தவம் யாரும் செய்யவில்லை.
இப்பொழுது  நீ இந்த மென்மையான
 பிரம்மாவின் வாணியை  எப்பொழுதும்  சத்தியம் நிரந்தரமான
பவித்திரமாக அறிந்து  உன் இதயத்தில் வைத்துக்கொள்.
உன்னை உன்  தந்தை அழைக்க வந்தால் பிடிவாதத்தை விட்டுவிட்டு
வீட்டிற்குச்செல். உன்னை சப்த ரிஷிகள் சந்திப்பார்கள்.
அப்பொழுது இந்த அசரீரி உண்மை என தெரிந்துகொள்.

ஆகாயத்தில் இருந்துவந்த  பிரம்மாவின் குரல் கேட்டதுமே ,
பார்வதி மிகவும் மகிழ்ந்தாள். யாக்யவல்கியர் பரத்வாஜரிடம் சொன்னார் :-
நான் இப்பொழுது பார்வதியின் அழகான  கதை சொன்னேன்.
இப்பொழுது சிவனின்  கதை கேள். 

Tuesday, January 3, 2017

रामचरित मानस ராமசரித மானஸ்- பாலகாண்டம் -இருபத்தேழு

       மைனா தன் கணவரிடம் சொன்னார் :-
                 தகுந்த வரம் கிடைக்கவில்லை என்றால் மலையின் இயற்கை குணமே ஜடம்தான்.இதை எண்ணி திருமணம் செய்யுங்கள். பின்னர் வருந்தவேண்டிய நிலை ஏற்படும். இதை சொல்லி கணவரின் காலில் விழுந்தாள் . அப்பொழுது ஹிமவான் சொன்னார் :-
  " நிலவில் நெருப்புகூட  உண்டாகலாம் , ஆனால் நாரத முனிவரின் வாக்கு
       பொய்யாகாது ."
அன்பே! கவலையை விட்டுவிட்டு இறைவனின் நினை.
பார்வதியை  படைத்தவர்  நல்லதே  செய்வார்.
மகளின் மேல் அதிக அனுப்பு இருந்தால் , அவளிடம்
 சிவன்  கிடைக்க  கடும்  தவம் செய் என்று சொல்.
மற்ற  வழிகளினால்   இந்த மனக்கிலேஷம் போகாது.

நாரதரின் இந்த  வாக்கு , ரஹசியத்துடனும்

தகுந்த  காரணத்துடன்  கூடியது.
சிவபகவான் அனைத்து  குணமும் கொண்ட அழகுக் குன்று.
இதை எண்ணி  பொய்யான  சந்தேகத்தை விட்டு விடு.
சிவன் அனைத்து விதத்திலும்  களங்கமற்றவர்.

கணவனின் ஆறுதலான சொல் கேட்டு , மனமகிழ்ச்சியுடன் மகள்
பார்வதியிடம்  சென்றாள் .
 மகளைப் பார்த்ததும் கண்களில் கண்ணீர் வடிந்தது.

அவளை அன்புடன் மடியில் வைத்துக்கொண்டார்.

மீண்டும் மீண்டும் தழுவினாள்.
ஜகத்ஜனனி  பவானி அனைத்தும் அறிந்தவள்.
அம்மாவின் மனநலன் புரிந்து கொண்டு
அவளை மகிழ்விக்க மென்மையாக சொன்னாள்:-
   அம்மா! நான் ஒரு கனாகண்டேன். அதில் ஒரு
அழகான வெள்ளை நிற அந்தணர் கீள்க்கண்ட  உபதேசம் செய்திருக்கிறார் :-
அப்பொழுது தாய் மகளிடம் சொன்னாள்:-
நாரதரின் வாக்கை  சத்தியவாக்காக கருதி ,
நீ கடும் தவம் செய். உன் பெற்றோர்களுக்கும் அவர் வாக்கு
நல்லதாகவே தோன்றுகிறது.
தவம் சுகமளிக்கக் கூடியது.
துன்பத்தைப் போக்கவல்லது.
தவ வலிமையினால் தான் பிரம்மா உலகைப் படைக்கிறார்.
தவ வலிமையால் தான் விஷ்ணு உலகைக் காக்கிறார்.
தவ வலிமையினால்தான் சம்பு ருத்ர ரூபத்தில் சம்ஹாரம் செய்கிறார்.
தவ வலிமையால்  தான் சேஷன்  உலகின் சுமை  சுமக்கிறார்.
பவானி! படைப்புகளெல்லாம் தவத்தின் அடிப்படையில் தான் .
இதை மனதில் ஏற்று நீ தவம் செய்.
இதைக்கேட்டு  அம்மாவிற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
அவர் ஹிமவானை அழைத்து மகளின்  கனவைக் கூறினாள்.
பெற்றோர்களுக்கு விளக்கிக் கூறி , பார்வதி தேவி
தவம் செய்ய புறப்பட்டாள்.

அன்புள்ள குடும்ப உறுப்பினர்கள் , பெற்றோர்கள் எல்லோரும்
வியாகூலம் (கவலை)அடைந்தனர். அனைவரும் மௌனமானார்கள்.
அப்பொழுது வேத ஞானியான முனிவர் வந்து பார்வதிதேவியின்
மகிமைகளைக்  கூறி எல்லோருக்கும் ஆறுதல்  அளித்தார்.



ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -இருபத்தாறு . (துளசிதாஸ் )

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -இருபத்தாறு .

  நாரதர்   பார்வதி பிறந்த பூமியின் செய்திகேட்டு
 குதுகூலமாக ஹிமாச்சலத்திற்கு   வந்தார்.
பர்வதராஜர்  அவரை மிகவும்
மரியாதையுடன்  வரவேற்றார்.
அவரின் கால் களை  கழுவி
நல்ல ஆசனத்தில் அமரவைத்தார்.
பிறகு மனைவியுடன் சேர்ந்து வணங்கினார்.
அவரின் பாதங்கள்  கழுவிய  நீரை  வீட்டில் தெளித்தார்.
ஹிமாச்சல் தன்  பாக்யத்தை வர்ணித்து ,
தன் மகளை அவர் பாதங்களில்  போட்டார்.
முனிவரே!  நீங்கள் முக்காலமும் அறிந்தவர்.
எல்லாமும் அறிந்தவர். உங்களால் அனைத்து
இடமும் செல்ல முடியும் .
அதனால்  நன்கு பார்த்து பெண்ணின்
குண தோஷங்களை சொல்லுங்கள்.

நாரதர் சிரித்து  ரஹசியத்துடன்
மென்மையான  குரலில் சொன்னார் :-
உன் மகள் நல்ல குணவதி.
 இயற்கையிலேயே அழகும், நல்லொழுக்கமும் ,
அறிவும் உள்ளவள். குணங்களின் சுரங்கம்.
உமா,அம்பிகா, பவானி ஆகியவை இவளுடைய பெயர்கள்.

உங்கள் பெண் எல்லா லக்ஷணங்களும் பொருந்தியவள்.
தன்  கணவனுக்கு மிக அன்பானவள்.
இவள் தீர்க்க சுமங்கலி.
இவளால் இவளின் பெற்றோர்கள்  புகழ் பெறுவார்கள்.
 வையகம் முழுவதும் புகழ் பெறுவார்.
இவளுக்கு சேவை செய்தால் கடினம் எதுவும் இல்லை.
செய்யமுடியாதது எதுவும் இல்லை.
உலகில் பெண்கள்   இவரின் நாம ஜபம் செய்து பதிவிரதை  ஆவார்கள்.

ஹே  பர்வத ராஜனே!
 உன் மகள் நல்ல லக்ஷணம் பொருந்தியவள்.
இவளின்  கணவன்  குணமற்றவன்,
 மானம் இல்லாதவன்,
பெற்றோர் இல்லாதவன் ,
வருத்தமானவன் ,
அலக்ஷியமானவன்,
 யோகி,ஜடாமுடி உள்ளவன் ,
நிர்வாணமாக இருப்பவன், அமங்கலமான  வேடதாரி ,.
இவள்  கைரேகை அப்படித்தான் சொல்கிறது.
 நாரதமுனிவரின்  வார்த்தைகளைக் கேட்டு ,
அதை உண்மை என அறிந்து ,
ஹிமவானுக்கும் மைனாவிற்கும்
மிகவும் வருத்தமாக இருந்தது.
ஆனால்நா பார்வதி தேவி மனதிற்குள்
மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
 வேறு யாரும்  இந்த ரகசியத்தை அறியவில்லை.
நாரதருக்கும் தெரியாது.
எல்லோரின் வெளி நிலை
  ஒரே மாதிரியாக  இருந்தாலும்
உள்ளறிவு வேறுபட்டது.
தோழிகள்,பார்வதி, மலையரசன் ஹிமவான் ,
எல்லோரும் ஆனந்தமாகவும் வருத்தமாகவும் இருந்தனர்.
பர்வதகுமாரி எதிர்கால கணவனின்  நிலை கேட்டு
கண்ணீர் வடித்தனர்.
தேவரிஷி நாரதரின் வாக்கு பொய்யாகாது.
இதை நினைத்து பர்வதகுமாரி அந்த நாரதர் கூற்றை
மனதில் ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு சிவனின்    சரண கமலங்களில் அன்பு அதிகரித்தது.
ஆனால் அவர் கிடைப்பது கடினம்    என்ற ஐயம் மனதில்
எழுந்தது.
சந்தர்ப்பம் சரியில்லாததால்   தன்  அன்பை மனதில்
மறைத்துக்கொண்டு  தோழியின் மடியில் சென்று
அமர்ந்தார்.
தேவரிஷியின் வாக்கு பொய்க்காது என
ஹிமவான், மைனா  மற்றும் எல்லா புத்திசாலி  தோழிகள்
கவலைப்  பட்டனர்.
பிறகு மனதை திடப்படுத்திக் கொண்டு
 பர்வதராஜர்    என்ன செய்யலாம்?
வேறு உபாயம் என்ன ? என்று வினவினார்.
 முநீஸ்வரரான  நாரதர் சொன்னார் :-
பிரம்மா தலையில் எழுதியதை யாராலும் மாற்றமுடியாது.
தேவர்கள், அரக்கர்கள், மனிதர்கள், நாகர்கள்,முனிவர்கள்
யாரும் தலையெழுத்தை  அழிக்க முடியாது.
ஒரே உபாயம்  தான். தெய்வம்  விரும்பினால்
சித்திபெற  முடியும்.
நான் வர்ணித்தபடிதான்  வரன் உமாவிற்கு கிடைக்கும்.
இதில் சந்தேகமே இல்லை.
ஆனால் நான் சொன்ன  வரனின் குறைகள்
 எல்லாம் சிவனிடம் உள்ளன.
சிவனுடன் திருமணம் செய்தால்
சிவனின் தோஷங்களும்  குணமாகவே சொல்வார்கள்.
விஷ்ணு ஆதிஷேசன் என்ற பாம்பை படுக்கை ஆக்கினாலும்
பண்டிதர்கள் யாரும் குறை சொல்வதில்லை.
சூரியனும் அக்னி தேவனும் நல்லவை தீயவை இரண்டையும்
ஏற்றாலும் அவர்களை யாரும் குற்றமாக  கருதுவதில்லை.
கங்கையில் நன்னீரும் கழிவுநீரும் கலந்தாலும் அதை
புனிதமற்றது என  யாரும் கூறுவதில்லை.

முட்டாள் மனிதர்கள்  ஞானத்தின் கர்வத்தால் , இவ்வாறு
போட்டியிட்டால் பல   யுகங்களுக்கு  நரகத்திலேயே இருப்பார்கள்.
ஜீவராசிகள் கடவுளுக்கு சமமாக முடியுமா ?
கங்கை ஜலத்தால்  செய்யப்பட்ட   மதுவை
சாதுக்கள் அறிந்தால் அருந்தமாட்டார்கள்.
ஆனால் அதே கங்கையில் கலந்தால் பவித்திரமாகிவிடுகிறது.
கடவுளுக்கும் ஜீவனுக்கும் அப்படியே வேறுபாடு உள்ளது.

சிவபகவான்  இயற்கையாகவே ஞானமுள்ளவர்.
அதனால் இந்த திருமணத்தால் நல்லதே நடக்கும்.
மகாதேவனை  ஆராதிப்பது கடினம்.
ஆனால் தவம் செய்தால் அவர் மிகவும் சீக்கிரமாக
திருப்தி அடைந்துவிடுவார்.

உன் மகள் தவம்  செய்தால் ,
திரிபுராரி மகாதேவரை கெட்டிக்காரரை விட்டுவிட முடியும்.
உலகில் வரன்கள்  அதிகம். ஆனால் இவளுக்கு சிவனைத்தவிர
வேறு  வரன்  கிடையாது.

சிவபகவான்  வரம் அளிப்பவர்.
சரணடைந்தவர்கள்   துன்பத்தைப்
போக்குபவர்.
கிருபைக் கடல், தொண்டர்கள் மனதை மகிழ்விப்பவர்.
சிவபகவானின் ஆராதனை செய்யாமல்,
கோடிக்கணக்கான யோகமும்  ஜபமும் செய்தாலும்
விரும்பிய  பலன்  கிடைக்காது.
இப்படி சொல்லி இறைவனை ஜபித்து நாரதர் ஆசிர்வாதம்  செய்தார்.
பர்வதராஜரே!நீ சந்தேகத்தை விட்டுவிடு.  இறைவன்  நல்லதே செய்வார்.
இவ்வாறு கூறிவிட்டு  நாரதமுனிவர் பிரம்மலோகத்திற்குச்
சென்றுவிட்டார்.
இனிமேல் நடந்ததைக் கூறுகிறேன் கேள்.
கணவனை தனிமையில் பார்த்து மைனா --நாதா!
நாரதர் சொன்னது எதுவும் புரியவில்லை என்றாள்.
நமது பெண்ணிற்கேற்ற வீடு,குலம், வரன்
உத்தமமாய் இருந்தால் திருமணம் செய்யுங்கள்.
நமது பெண் பார்வதி எனக்கு உயிருக்கும் மேலாக
பிரியமானவள்.
நான் ஒரு தகுதியற்றவனுடன்
அவள் திருமணம் செய்வதை விரும்பவில்லை.

Monday, January 2, 2017

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --இருபத்தைந்து.

 
ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --இருபத்தைந்து.

  சிவபகவன்  பார்வதி தேவியிடம்  ஹரிபகவானின்
ரசம் நிறைந்த கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

  தக்ஷண்  மக்களின் அதிபதி ஆனார்.
பிரம்மா  தக்ஷணை பிரஜாபதியின் தலைவர் ஆக்கினார்.
இவ்வளவு  பெரிய அதிகாரம் ஆட்சி பெற்றதும்
அவருக்கு அகங்காரம் உண்டாகியது.
 உலகில் அதிகாரம் , செல்வாக்கு பெற்று ,
ஆணவமாக இல்லாதவர்கள் தோன்றவில்லை.
தக்ஷண்  எல்லா முனிவர்களையும் அழைத்து
மிகப் பெரிய யாகம் செய்ய ஆரம்பித்தான்.
யாகத்தில் பங்கு பெரும் தேவர்களை
எல்லாம்  மிக மரியாதையுடன் அழைத்தான்.
கின்னரர்கள், நாகர்கள்,சித்தர்கள்,கந்தர்வர்கள்,
எல்லா தேவர்களும்  தங்கள் மனைவியுடன்
தக்ஷண்ணின்   வேள்வியில் பங்கு கொள்ள  தங்கள்

விமானங்களை அலங்கரித்துக் கொண்டு  புறப்பட்டனர்.

விஷ்ணு, பிரம்மா, மகாதேவன் மூவரும்
அழைப்பில்லாததால்  செல்லவில்லை.

 தக்ஷகுமாரி   பலவித  அழகான  விமானங்கள்
ஆகாயத்தில்  பறந்துகொண்டிருப்பதப் பார்த்தாள்.
தேவலோக அழகிகள் இனிமையான
 பாடல்கள் பாடிக்கொண்டிருந்தனர்.
அவர்களின் பாடல்கள் கேட்டு முனிகளின் தியானம் கலைந்தது.

சதி சிவனிடம் இதைப்பற்றி  கேட்டார்.
 சிவன் தக்ஷனின் யாகம் பற்றி கூறினார்.
அப்பாவின் யாகம் செய்வதறிந்து தேவி மகிழ்ந்தார்.
சிவன் அனுமதி அளித்தால் தானும் வேள்வியில்
கலந்து தன தந்தையின் வீட்டில் சில நாட்கள்
இருந்து வரலாமே  என்று  நினைத்தார்.

அவர் மனதில் கணவனால் தியாகம் செய்யப்பட்ட
மிகப்பெரிய துயரம்  இருந்தது.
ஆனால் தன தவறை உணர்ந்து பேசாமல் இருந்தார்.
தன் ஆர்வத்தை அடக்கமுடியாமல்
சதிதேவி  தன் அச்சம், நாணம் போன்றவற்றை விட்டு விட்டு
அன்பான உள்ளம்கவரும் விதத்தில்  தன்  தந்தை வீட்டிற்குச் செல்ல
அனுமதி கேட்டார்.
என் தந்தையின் வீட்டில் மிகப்பெரிய உத்சவம் நடக்கிறது.
எனக்கு செல்ல அனுமதி கொடுங்கள்.
நான் மரியாதையுடன் அங்கு செல்கிறேன்.
 சிவன் சொன்னார்,   நீ கேட்பது நல்லதுதான்.
நானும் விரும்புகிறேன்.
ஆனால் உன் தந்தை என்னை அழைக்கவில்லை.
மற்ற மகள்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
நம் விரோதத்தின் காரணமாக அவர் உன்னையும் மறந்துவிட்டார்.
ஒரு முறை பிரம்மனின்  சபையில் எனக்கு அவர்
நடத்தையால் கோபம் வந்தது. அந்த காரணத்தினால் தான்
இப்பொழுதும் எப்பொழுதும் அவமதிக்கிறார்.
பவானி! அழைப்பின்றி  சென்றால் மானமரியாதை நமக்கு இருக்காது.
சீலமும் அன்பும் கிடைக்காது.

 அழைப்பில்லாமல் நண்பர்கள்,
யஜமானர்,அப்பா, குரு வீட்டிற்கு செல்லலாம். இருப்பினும்
அழைப்பில்லாமல் செல்வது சரியல்ல.
சிவபகவான் பல விதமாகக் கூறியும் சதி செல்லவே விரும்பினாள்.
அப்பொழுது  மூவுலக தேவன் மகாதேவன் தன் முக்கிய
பூதகணங்களுடன்  அவரை அனுப்பினார்.

பவானி தந்தை வீட்டிற்குச் சென்றாலும் ,
தக்ஷணின்  அச்சம் காரணமாக
 யாருமே அவரை வரவேற்கவில்லை.
அம்மா மற்றும் சகோதரிகளின் பாசமும் மரியாதை மட்டும் கிடைத்தன.

தந்தை நலம் கூட விசாரிக்கவில்லை.
சதியைப்பார்த்ததும் அவருக்கு கோபம் வந்துவிட்டது.
பவானி வேள்விக்கூடத்திற்கு சென்றால் அங்கும்
சிவபகவானின் பங்கு இல்லை.
அப்பொழுது அவருக்கு சிவன் சொன்னது புரிந்தது.
கணவனுக்கு அவமானம்  நேர்ந்ததை அவரால்  சகிக்கமுடியவில்லை.
கணவனால் கைவிட்டபோது கூட இவ்வளவு துன்பம் அடையவில்லை.
அதைவிட அதிக  துன்பம் இப்பொழுது மனதில் ஏற்பட்டது.
 கணவனுக்கு நேர்ந்த  அவமானம்  பொறுக்கமுடியவில்லை .
 உலகில் பலவித  துயரங்கள் இருக்கின்றன.
ஆனால் இன-ஜாதி  அவமானம் மிகவும் கடினமானது.
இதை நினைத்து பவானிக்கு மிகவும் கோபம் உண்டாகியது.
அம்மா அவருக்கு மிகவும் அறிவுரை கூறினார்.
இருந்தாலும் சிவனை அவமதித்ததை சகிக்க இயலவில்லை.
அவர் தக்ஷண்ணின் சபையில் கோபமாக  பேசினாள்.:-

      சபையின் அங்கத்தினர்களே! முனிவர்களே!  கேளுங்கள்.
சிவபகவானை நிந்தித்தவர்களும் ,
நிந்தனையைக் கேட்டவர்களும் ,
என் தந்தையும் நன்றாக வருந்துவீர்கள்.
 அதன் பலன் நிச்சயம் கிடைக்கும்.
   சாதுக்கள், சிவன், விஷ்ணுவின் நிந்தனை கேட்டவர்கள்
தங்கள் நாக்கை வெட்டிக்கொள்ளுங்கள்  அல்லது
இங்கிருந்து ஓடிவிடுங்கள்.
 மூவுலக அரக்கர்களைக் கொன்ற மகேஸ்வரர்
 அனைத்து உலகிற்கும் ஆத்மா. உலகத்தின் தந்தை.
அனைவருக்கும் நல்லது செய்பவர்.
எனது மந்தபுத்தியுள்ள  தந்தை அவரை நிந்திக்கிறார்.
எனது இந்த உடல் தக்கனின் வீரியத்தால் உண்டானது.
ஆகையால்  நிலவை நெற்றியில் வைத்துள்ள
காளைவாகனன்  சிவனை இதயத்தில் வைத்து ,
நான் இந்த உடலை விட்டுவிடுகிறேன்.
இவ்வாறு சொல்லி தேவி வேள்வித்தீயில் விழுந்து
தன்னை எரித்துக்கொண்டார்.
 வேள்வி சாலை முழுவதும் அபயக்குரல் எழுப்பியது. சதியின்மரணத்தைக் கேட்டதும் சிவகணங்கள்  வேள்வியை நாசப்படுத்தின.
யாகத்தின் அழிவை ப்ருகுமுனிவர்  பாதுகாத்தார்.
  சிவன் இந்த செய்தி அறிந்ததுமே  வீரபத்திரரை அனுப்பினார்.
அவர் அங்கு  சென்று  வேள்வியை நாசப்படுத்தினார்.
எல்லா தேவதை களுக்கும்  தகுந்த  தண்டனை அளித்தார்.
சிவதுரோகிகளுக்கு நேர்ந்த  அதே உலகப்புகழ்பெற்ற  கதியே
தக்ஷணுக்கும்  ஏற்பட்டது,
இந்த வரலாறு அனைவரும்
அறிந்து இருப்பதால்
சுருக்கமாக வர்ணித்தேன்.

 சதி இறக்கும்போது  ஒவ்வொவொரு
ஜன்மத்திலும்  சிவபகவானின் மீது
பற்று இருக்கவேண்டும்  என்று ஹரியிடம் வரம் கேட்டாள்.
இந்த காரணத்தால் இமயமலை சென்று பார்வதியாக பிறந்தாள்.

உமா இமயமலையில் பிறந்ததுமே அங்கு செழிப்பும் தோன்றின.

முனிவர்களுக்கு அழகான ஆஷ்ரமங்கள்தகுந்த இடங்கள் உண்டாகின.
 பலவிதமான புதிய புதிய மரங்கள் தோன்றின. மரங்கள் பூத்துக்குலுங்கின.
பலவித விளைவுயர்ந்த கற்களின் சுரங்கங்கள் தோன்றின.

எல்லா நதிகளிலும் பவித்திரமான நீர் ஓடியது. பறவைகள்,, மிருகங்கள்,
வண்டுகள் அனைத்தும் மகிழ்ந்தன. மலையில் அனைவரும் ஒருவருக்கொருவர்  அன்பாகப் பழகினர்.

பார்வதியின் வருகையால் மலை மிக அழகாக காட்சி அளித்தது.
ராமரின் பக்தி பெற்று பக்தர்கள் மகிழ்வதுபோல் மகிழ்ந்து
அழகாக காட்சி அளித்தது.
பிரம்மா  முதலிய தேவர்கள் புகழ்ந்து பாடினர். தினந்தோறும்
புதிய புதிய மங்கள உத்சவங்கள் நடந்தன.















ராமசரித மானஸ்-பாலகாண்டம் ௨௪ இருபத்திநான்கு.

ராமசரித மானஸ்-பாலகாண்டம் ௨௪  இருபத்திநான்கு.

     சதியானவர்  அநேக  சிவன் , விஷ்ணு ,பிரம்மா

போன்றவர்களின்    அநேக  அவதார  மகிமைகளை
பார்த்துள்ளார்.
இங்கு வித விதமான
வேஷத்தில் எல்லா தேவதைகளும்
ஸ்ரீ ராமரின்  பாதங்களை வணங்கி
 சேவை செய்துகொண்டிருக்கின்றனர்.  

அவர் அங்கே எண்ணிக்கையில் அடங்கா பதிவிரதைகள்,
அந்தணப் பெண்கள், லக்ஷிமிகளைப் பார்த்தார்.
அந்த அந்த  தேவர்களுக்கேற்ற
   மனைவி வேடத்தில்    சக்திகள்இ ருந்தனர்.

எங்கெல்லாம் பார்வதி தேவி ரகுநாதரைப் பார்த்தாரோ ,

அங்கெல்லாம்  அத்தனை தேவர்களையும் பார்த்தார்.

அநேக வடிவம் எடுத்து எல்லா
 தேவர்களும் ராமருக்கு  பூஜை
செய்துகொண்டிருந்தனர்.
ஆனால்  ராமரின்  மறுவடிவத்தைப்
பார்க்கவில்லை.

சீதையுடன் அதிக  ராமரைப் பார்த்தார்.
ஆனால் அவரின் வேஷம்
 பலவடிவங்களில் இல்லை.
அதே ராமர் , அதே  சீதை , அதே இலக்குமணர்.
இப்படி அவர்களைப்பார்த்து தேவி  பயந்துவிட்டார்.
அவர் இதயம்  நடுங்க  ஆரம்பித்தது.
உடலின் உணர்வுகள் போய்க்கொண்டிருந்தது.
அவர்  கண்ளை  மூடிக்கொண்டு
வழியில் உட்கார்ந்துவிட்டார்.
  பின்னர்  கண்  திறந்து  பார்த்தால் ,
தக்ஷகுமாரிக்கு  எதுவும்  தென்படவில்லை.
பிறகு  ராமனை   வணங்கிக்கொண்டே ,
சிவபகவான்  இருந்த இடத்திற்கு சென்றாள்.

   சிவனிடம்  சென்றதுமே
சிவபகவான்  சிரித்துவிட்டு
நலம் விசாரித்து
  ராமரை  எப்படி  சோதித்தாய்  என வினவினார்.

    தேவி ரகுநாதனின் அச்சத்தால் உண்மையை மறைத்து
சொன்னார் :--
    நான் எதுவும்  சோதிக்கவில்லை.
 உங்களைப்போன்றே  வணங்கினேன்.
 நீங்கள்  சொல்வது பொய்யல்ல
 என்பதில்  முழு நம்பிக்கை  உண்டு.

ஆனால் சிவன் தேவி செய்ததை தெரிந்து கொண்டார்.
 பிறகு  ராமனின் மாயைக்கு சிரம் தாழ்த்தி வணங்கினார்.
தேவியையே பொய் பேச வைத்த
நிலைக்குத்  தூண்டிய
ஸ்ரீ ராமரின் சக்தியை அறிந்தார்.
ஸ்ரீ   ஹரியின்  விருப்பம் எதிர்காலத்தில்  மிக
சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று சிவன்
மனதில்  எண்ணினார்.

 தேவி பார்வதி சீதையின் வடிவம்
 எடுத்ததை எண்ணி வருந்தினார்.
நான்  இப்பொழுது  தேவியிடம் அன்பு செலுத்தினால் ,
பக்தி மார்க்கம் மறைந்து விடும்.
மிகவும் அநியாயமாகும் என்று  நினைத்தார்.

தேவி மிகவும்  பவித்திரமானவள்.
ஆகையால் அவரை  விட முடியாது.
அன்பு செலுத்தினால்  மிகவும்  பாவமாகிவிடும்.
வெளிப்படையாக  சிவன் எதுவும் சொல்லவில்லை. ஆனால்
அவர்  மனதில்  மிகவும் வேதனைப்பட்டார்.
  அப்பொழுது  சிவன் ராமச்சந்திரரின்
சரண கமலங்களை வணங்கினார்.
ஸ்ரீ ராமனை வணங்கியதுமே  அவர்  மனதில்
உதித்த   எண்ணம் , தேவியின்  இந்த உடலுடன் மீண்டும்
கணவன் -மனைவி உறவுடன் சந்திக்க முடியாது.
என்று  சிவன் சங்கல்பம் செய்துகொண்டார்.

   நிலையான அறிவுகொண்ட  சிவன் ,
 இந்த எண்ணங்களுடன் கைலாசம்  சென்றார்.
அப்பொழுது அவருக்கு ஒரு  அசரீரி  கேட்டது--
 ஹே  மஹேஷ்! உங்களுக்கு வெற்றி கிட்டட்டும்.
நீங்கள்  பக்தியில் உறுதியாக உள்ளீர்கள்.

உங்களைத்தவிர  வேறு யாரும்
 இப்படி  பிரதிக்ஞை செய்ய  முடியாது.
நீங்கள் ராமரின் பக்தர்.  அவரை ஆமோதிப்பவர்.
நீங்கள் பகவான்.
இந்த அசரீரியைக்கேட்டு தேவியின் மனதில் கவலை
 உண்டாயிற்று.
உடனே சிவனிடம் அவர் செய்த  பிரதிக்ஞை பற்றி கேட்டார்.
நீங்கள் சத்தியத்தின் இருப்பிடம்.
தீன பந்து.  இவ்வாறு பலவிதங்களில்  தேவி  கேட்டும்
முவ்வுலக தேவன்  சிவன்  எதுவும்  சொல்லவில்லை.

   சதி தேவி ,  சகலமும் அறிந்த சிவன் எல்லாம் அறிந்துகொண்டார்
என்பதை தெரிந்து கொண்டார்.
நான் சிவனிடம் கபடமாக இருந்தேன்.
பெண்ணின் குணமே  அறியாமையும் மூடத்தனமும் ஆகும்.
   பாலுடன்  தண்ணீர்  சேர்ந்தால்
   பாலைப்போலவே விலையாகிறது.
 ஆனால்  கபடம்   என்ற  புளிப்பு  சேர்ந்ததுமே  ,
  பால் திரிந்து விடுகிறது.
 தண்ணீர் பிரிந்து விடுகிறது.
பாலின்  ருசி போய்விடுகிறது.
 தன் பொய்யான நடத்தையால் தேவியின் மனதில்
பல வித  எண்ணங்களும் கவலைகளும்  ஏற்பட்டன.
அவைகளை வர்ணிக்க இயலாது.
சிவபகவான்  இரக்கத்தில்  ஆழ்  கடல்.
அதனால் தான்  அவர் வெளிப்படையாக தேவியின்
குற்றத்தைக் கூறவில்லை.
சிவபகவானின்  நிலை  கண்டே
அவர்     தன்னை தியாகம்  செய்ததை
 அறிந்து கொண்டார்.
தான்  செய்த  பாவத்தை அறிந்து கொண்டார்.
அவர் மனம் குயவனின் அடுப்பின் தணல் போல்  எரிந்தது.

 ரிஷப  வாகனன்  சிவன்,
 தேவியின் கவலை அறிந்து
அவருக்கு   மகிழ்ச்சி  அளிக்க  எண்ணி ,
அழகான  கதைகளைச் சொன்னார்.
வழியில் பலவித வரலாற்றுகளைச்  சொல்லி
விஸ்வநாதர் கைலாயத்தை அடைந்தார்.

 அங்கே  தன்   பிரதிக்ஞைப்படி
 பத்மாசனம் போட்டு
அமர்ந்துகொண்டார்.
அவருடைய  அகண்ட
 முடிவில்லா சமாதி  நிலை துவங்கியது.

 கைலாயத்தில் சதிதேவியும்  வசிக்க ஆரம்பித்தார்.
 அவர் மனதில் மிகவும் கவலை ஏற்பட்டது.
 இந்த ரகசியத்தை யாரும் அறியமாட்டார்கள்.
 அவரின் ஒவ்வொவொரு நாளும்
 ஒரு யுகம் கழிந்ததுபோலாகியது.
 இந்த துன்பக்கடலை எப்பொழுது கடப்பேன்
 என்ற
கவலை அதிகரித்தது.
நான்  ராமரை  அவமதித்தேன் .
கணவனின் வாக்கை பொய்யென அறிந்தேன்.
அதன் பலனை பிரம்மா கொடுத்துவிட்டார்.
ஆனால் சங்கரர் பாராமுகமாக  இருக்கும்பொழுது
என்னை உயிரோடு ஏன்  வைத்துள்ளார்.
சாதியின் இதயத்தின் வெறுப்பை  வெளியிட முடியவில்லை.
அறிவுள்ள  சாதி ராமரை நினைத்து வேண்டினார்.
இறைவா! நீங்கள் ஏழைகள்  மேல்
இரக்கப்படுபவர்  என்று சொல்கிறார்கள்.
நீங்கள் இன்னல்களைப்போக்குபவர் என்று
புகழ்கிறார்கள்.
 நான் உங்களிடம் என் இந்தஉடல்
மடிய வேண்டும் என்று வேண்டுகிறேன்.
எனக்கு சிவனின் மேல் அதிக அன்பு உள்ளது.
என்  அன்பின் விரதம் மனம் ,வாக்கு மற்றும்
 செயலால்  உண்மையானது.
 எல்லாம் தர்சிக்கிற இறைவா!
எந்தவித  துன்பமும்  இல்லாமல்  பொறுக்கமுடியாத
இந்த மனத்துன்பம் போக
 விரைவில் நான் மரணமடையச் செய்யுங்கள்.

தக்ஷணின் மகள்   சதி   இவ்வாறு மிகவும் துன்பத்தில் இருந்தாள் .
அவளின் பயங்கர துன்பத்தை வர்ணிக்க முடியாது.
87 ஆயிரம் ஆண்டுகள்  கழிந்த பின்
சிவபகவான்   தன்  சமாதிநிலையிலிருந்து எழுந்தார்.
 அவர் ராமநாமத்தை ஜபிக்கத் துவங்கினார்.
சதி சிவனின் சமாதிநிலை  முடிந்தது   அறிந்து
சிவனின் பாதரவிந்தங்களை வணங்கினார்.
சிவபகவான்  அவர் அமர்வதற்கு  ஆசனம் அளித்தார்.