சே. அனந்த கிருஷ்ணன்.
தடுமாறும் ஓடம்.
17-8-2022.
+++++++++++
ஆறுமுகம் தனது திறமையால் தேர்வு எழுதி தொழிலாளர் துறையில் வேலை பெற்றார். தனது கடமையை நன்று நேர்மையாக செய்யவேண்டும்.
அனைவருக்கும் நன்மை செய்யவேண்டும் . கையூட்டு பெறுவது பாவம். கோப்பு களைத் தேக்கி வைக்கக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் பணியை ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் மூன்று வருடங்கள் சஞ்சலமற்ற மனத்துடன் பணியாற்றினார்.
தனது மகளை மழலையர் பள்ளியில் சேர்க்கச் செல்லும் போதுதான் அவர் மனம் அலை பாய்ந்தது. மூன்று வயது குழந்தைக்கு நன்கொடை மட்டும் ரூபாய் ஒரு லட்சம்.
பிறகு பள்ளி கட்டணம் புத்தகங்கள் குறிப்பேடுகள் தனி.
ஆகா! என் பணம் அவசியம் என்ற எண்ணம்.
மனம் தடுமாற ஆரம்ப நிலை.
பிறகு மனைவிக்கு உடல்நலம் சரியில்லை.
அரசு மருத்துவமனை.
உடனடியாக அறுவை சிகிச்சை. அறுவைக் கூடத்தில் மின்சாரம் இல்லை. அறுவை சிகிச்சை ஒத்தி வைப்பு.
செவிலியர் விடுப்பில் சென்றதால் ஒருநாள்.பிறகு மருத்துவர் அரசு சம்பந்தமான அகில இந்திய கூட்டத்திற்கு கலந்து கொள்ளச் சென்றதால் தள்ளிவைப்பு.
அதனால் அங்கு இருந்தவர்கள் வற்புறுத்தியதால் தனியார் மருத்துவமனை.
பணத்தின் அவசியத்தால் மனது தடம் மாறியதற்கு இரண்டாவது படி.
அவரது வாழ்க்கை ஓடம் தள்ளாட ஆரம்பித்தது.
திரைப்படங்கள் சின்னத்திரை நாடகங்கள்
பணம் இருந்தால் ஏழைகளை வழிக்கு கொண்டு வரலாம்.
கூலிப்படை வைத்து ஆள் கடத்தலாம். அலுவலர் குடும்ப உறுப்பினர்களை கடத்தி மிரட்டலாம்.
பணம் அளித்து சான்றிதழ் பெறலாம். வேலை பெறலாம் . வீடு கட்ட நிலம் வாங்கினால் வரைபட ஒப்புதல் ,பட்டா தண்ணீர் இணைப்பு மின் இணைப்பு அனைத்திற்கும் கையூட்டு.
குழந்தைகளை உயர்கல்வியில் சேர்க்கவும் பணம்.
வாழ்க்கை என்னும் ஓடம் தள்ளாடும் போது வாழ வழி ஊழல் தானே.நேர்மை தடுமாறும் ஓட்டமானது.
No comments:
Post a Comment