Tuesday, March 15, 2022
தலைமையின் கயிறு வெற்றியை நோக்கி
குலதீப் கைரோலா அவர்கள் எழுதிய ஹிந்தி நூலின் தமிழாக்கம் .
மொழிபெயர்ப்பு ---திரு எஸ். அனந்தகிருஷ்ணன் , ஹிந்தி பிரச்சாரக் .
ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ,
ஹிந்து மேல்நிலைப்பள்ளி ,திருவல்லிக்கேணி ,சென்னை ==600005
========================================================பக்கம்--1----
தலைமையின் கயிறு வெற்றியை நோக்கி
1.பார்வையை மாற்றுங்கள்
மனித நாகரீகத்தின் வரலாறு போராட்டங்களால் உண்டான தேவையும் ,தேவையால் உண்டான கண்டுபிடிப்புகளும் மற்றும் விடைகளின் வரலாறுமாகும் .மனிதனின் சிறு சிறு கூட்டங்கள் சமுதாயமாக மாறியது .சமுதாயங்கள் நாடாக மாறின . தங்கள் தங்கள் சிந்தனையாளர்களால் / மதகுருக்களால் கணிக்கப்பட்ட நியமங்களையும் பழக்கவழக்கங்களையும் பின்பற்றி வழ்கின்றனர். இந்த ஆச்சாரங்களும் எண்ணங்களாலும் தான் நாட்டின் பண்பாடு நிறுவப்பட்டது .நிகழ் காலமும் எதிர் காலமும் பாதுகாப்பாக இருக்க மனித சமூகம் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திட்டங்களை அமைத்தது .நிகழ்கால எதிர்கால நலன்களுக்கு செயலாற்றுவது ஒரு சமூகத்தின் அல்லது ஒரு அமைப்பின் தேவையாகும் . செயல்முறைகளுக்கு வழிகாட்டவும் குறிக்கோள்களை அடையவும் நிர்வாகத்தினரும் தலைமையும் அவசியமாகும் .நிர்வாகி குறுகிய வட்டத்தில் இருந்து வெளியில் வந்து தொலைநோக்குடன் பணியாற்றினால் தலைவராக முன் வருகிறார். அநேக தலைவர்கள் தாங்கள் குறுகிய வட்டத்தில் இருந்து வெளிப்பட்டு வரலாற்று சாதனைகள் செய்து மனித நாகரீக வளர்ச்சிக்கு பங்களித்தனர்
இந்திய தத்துவத்தில் மனிதனை கடவுளின் அம்சமாக கருதப்படுகிறது.மனிதனுடன் சேர்த்து நீர்,நிலம், ஆகாயம் இப் பெரும் உலகம் கடவுளின் துணையின் பகுதியாக ஏற்கப்பட்டிருக்கின்றன.அமிருதத்தின் செல்வங்களே! கேளுங்கள்! ஒவ்வொரு மனிதனும் கடவுளின் புத்திர்கள். ஆகையால் அனைவரும் ஒருவரே.श्रृण्वंतु विश्वे अमृतस्य पुत्रा --
(ஸ்வேதாஸ்வதரோபனிஷத்)
ஆத்மா தான் ஆத்மாவின் நண்பன்..
ஆத்மா ஏவ ஹிஆத்மன:பந்துஹு.(பகவத்கீதை)
மனிதன் மகத்துவம் நிறைந்தவன்.அவனுக்கு மரியாதை செய்வது கடவுளுக்கு மரியாதை செய்வதற்குச் சமம்.நிலம் என் அன்னை.நான் அதன் குழந்தை."மாதா பூமிஹி புத்ரோ அஹம்ப்ருத்திவ்யா".(அதர்வவேத் மந்திரம் 12.1.12).
நாம் எல்லோரும் பூமித்தாயின் புத்திரர்கள்.
ஆகையால் ஆத்மா தான் ஆத்மாவின் நண்பர்கள்என்பது உறுதியாகிறது.இவ்வாறு பாரத தத்துவ இயல் அனைத்து உலகத்தையும் சமமாகப் பார்க்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment