Wednesday, September 21, 2022

நாடா வளம் பாரதம்

 

சே.அனந்தகிருஷ்ணன்.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.
22-9-22.
  வளம் என்பதைப் பற்றி வள்ளுவர் "நாடல்ல நாடு வளம் தரும் நாடு" என்கிறார். நம் நாட்டை நாடி வந்தவர்கள் பல நோக்கத்தோடு வந்தனர்.
ஞானம் தேடி,ஆன்மீகம் தேடி, அமைதி தேடி  பிரம்மானந்தம் தேடி
ரமணரைக்காண திருவண்ணாமலை வந்தனர்.
கஜினி,கோரி நம் நாட்டின் செல்வத்தை கொள்ளை அடிக்க வந்தனர்.
உணவுப் பொருட்கள்  கிராம்பு, ஏலக்காய், கஸ்தூரி போன்ற வாசனை  பொருட்கள் வாங்க வந்தனர்.
வேதங்கள், சித்தர் பாடல்களில் உள்ள அறிவியல் ஞானம் அறிய வந்தனர்.
ஊட்டி, சிம்லா, டார்ஜ்லிங் காஷ்மீர் இயற்கை அழகைக் காண வந்தனர்.
கங்கைச் சமவெளிப், இமயமலையின் இயற்கை எழில் வற்றாத ஜீவ நதிகள் தேடிவந்தனர்.
பச்சைக் காய்கறிகள் பக்குவமாய் வேகவைத்த உணவுகள் அறிந்து வந்தனர்.
கோடையில் மலைவாழ் இடங்கள் குளிர் காலத்தில் சென்னை காஞ்சிபுரம் மதுரை போன்ற இடங்கள் ஆகிவை அறிந்து வந்தனர்.
வடமொழி,தமிழ் மொழி இரண்டுமே தெய்வ மொழி என்று வந்தனர்.
  பாரத நாட்டின் ஆயுர் வேத மருத்துவம் சித்த மருத்துவம் சிறப்பித்து வந்தனர். அரிய மூலிகைகளின் சிறப்பித்து வந்தனர்.
ஜெர்மன் நாட்டின் மேக்ஸ் முல்லர், இங்கிலாந்து வில்லியம் ஜோன்ஸ் வடமொழி சிறப்பித்து வந்தனர்.
  இப்படி வளம் உள்ள நாட்டில் கலைகள் வளர்ச்சியடைந்தன. ஆலய சிற்பக்கலை மகாபலிபுரம் கஜுராஹோ அஜந்தா எல்லோரா இணையில்லா தெய்வீக சிற்பங்கள் ஆலய கோபுரங்கள் .
அனைத்து வளங்களும் உள்ள திருநாடு நமது பாரத நாடு. முகலாயர்கள் கொள்ளை அடித்தனர் ஆங்கிலேயர்கள் வாணிகம் செய்ய வந்து ஆட்சியைப் பிடித்தனர்.
அவர்கள் அடித்த கொள்ளை நமது நாட்டு மொழிகள் வாழத்தகுதியில்லை என இன்றும் ஆங்கிலம் பாரத மொழிகளின் சிறப்பை மறைத்து வருகிறது.
வள்ளுவரின் ஒரு குறள்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர், வளிமுதலா எண்ணிய மூன்று.
  இந்த ஒரு குறள் தமிழர்கள் அறிய விடாமல் டயட் கன்ட்ரோல் என்று பேச வைத்து விட்டனர்.
இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் கற்று ஆலயங்களில் சிற்பங்களாக  வடித்ததை  ஞானக் களஞ்சியமாக அறியாமல் செய்து விட்டனர்.
  ஏர் பின்னது உலகம் என்று விவசாயத்தின் பெருமையை வழிகாட்டும் வள்ளுவர்.
  இப்படி ஆன்மீகம் அறிவியல்  இயற்கை வளம் என அனைத்து வளங்களும் பெற்று பாரத நாடு நம் நாடு.
    இன்றைய நவீன உலகில்  "மனித வளத்தின் இளைஞர் வளம் மிக்க நாடு பாரதம். அமேரிக்கா வளமாக இருக்க பாரத இளைஞர்களின் ஞானமும் உழப்புமே.
  இன்று வல்லரசாக வளரும் நாடுகளில் பாரதத்திற்கு முதலிடம்.
காசி ஆலயம் பல முறை கொள்ளை அடிக்கப் பட்டாலும் இன்றும் செல்வச்சிறப்பு அதிகமாகவே உள்ளது.
சோமநாதர் ஆலயம் மாலிகாபூர் படையெடுப்பில் தாக்கப்பட்ட மதுரை ஆலயம்  எதுவுமே பிறப்பில் குறையவில்லை.
கணிதமைதை இராமானுஜர் மனிதநேயம் மிக்க ஆன்மீக ராமானுஜர்
என்று பாரதம் பழம் பெருமை மிக்க நாடா வளம் கொண்ட நாடாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
    இதில் சுயநலம் மிக்க அரசியல் தேர்தல் ஊழல்
கையூட்டு  பயங்கரவாம் போன்ற தீயசக்திகள் ஒழிந்தால் பாரத நாடு பழம்பெரும். நீரின் புதல்வர் இந்நினைவகற்றாதீர்.
பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம்.
ஞானத்திலே என்றெல்லாம் பாரதியார் பாடினார்.
தெய்வப்புலவர் சேக்கிழார் ஆட்சி சிறப்பு
வள்ளுவரின் குறள்  இவை களை இன்றைய இளைஞர்கள் அறியச் செய்ய வேண்டும்.
  சுய படைப்பு சுயசிந்தனை எஸ். அனந்த கிருஷ்ணன்.





   



No comments: