Sunday, September 18, 2022

மகிழ்ச்சி

 சே.அனந்தகிருஷ்ணன்.

 பண்டிகைகள் என்றால் அதிகம் மகிழ்வது பெண்களே என்பது என் வாதம்.

பட்டுப்புடவை கள் அல்லது புதுஉடைகள்  நகைகள் என தன் தகுதிக்கு மீறி   ஆண்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் பெருமைக்காக கடன் வாங்க வேண்டியுள்ளது.

பெண்குழந்தைகளுக்கும் அதிகம் செலவாகிறது.

அதிக வருமானம் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியே.

நடுத்தர ஏழை வர்க்கத்திற்கு எப்படி மகிழ்ச்சி உண்டாகும்.

 பணம் இல்லாமல் ஆண்களென்ன பெண்களென்ன?

 இருப்பினும் பண்டிகைகள் பெண்களுக்கு மகிழ்ச்சி தான் தருகின்றன.

 வறுமை மறந்து வசதி மறந்து தன் குழந்தைகள் மகிழ தாயானவள் மகிழ்ச்சி யுடன் நல்ல சமையல் செய்கிறாள்.

இருக்கும் வீட்டில் தெய்வீக சூழல்களை உருவாக்கி ஒரு தன்னம்பிக்கையை வளர்க்கிறாள். குழந்தைகளும் மகிழ்கிறார்கள்.

 ஆழ் மனதில் வருத்தமாக இருந்தாலும்  முகமலர மகிழ்வது பெண்களே.

No comments: