ராமசரிதமானஸ் --அயோத்யாகாண்டம் --பக்கம் -ஆறு
கைகேயி மந்தரையிடம் மீண்டும் சத்தியம் செய்து சொல்லும்படி கேட்க, கூனி என்ன கேட்கிறாய்?
மிருகங்களுக்குக் கூட தனது நல்லது கேட்டது தெரியும்.உனக்கு இப்பொழுதும் புரியவில்லையா ?
பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. ஏற்பாடுகள் அலங்காரங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
இன்று என்னால் தான் இந்த செய்தி உனக்குத் தெரிந்துள்ளது.
நான் உன்னுடைய ராஜ்யத்தில் உணவு உண்டு வளர்ந்துள்ளேன். உண்மை சொல்வதால் தவறு இல்லை.
நானாக கெடுப்பதற்காக ஏதாவது செய்தால் கடவுள் எனக்கு தண்டனை அளிப்பார். நாளை ராமனுக்கு ராஜதிலகம் நடந்துவிட்டால் கடவுள் உனக்கு விபத்தின் விதையை விதைத்து விட்டார்.
நான் கோடுபோட்டு உறுதியாகச் சொல்கிறேன் --நீ இப்பொழுது பாலில் விழுந்த ஈ ஆகிவிட்டாய். பாலில் ஈ விழுந்தால் ஈயை எடுத்து எரிந்து விடுவார்கள்.
அப்படியே உன்னை விட்டிலிருந்து வெளியேற்றிவிடுவார்கள்.
நீ மகனுடன் வேலைக்காரி ஆகிவிட்டால் வீட்டில் இருக்க முடியுமா ? வீட்டில் இருக்க வேறு வழி இல்லை. கத்ரு வினதாவிற்கு துன்பம் அளித்தாள். உனக்கு கௌசல்யா துன்பம் தருவாள். பரதன் சிறைக்குச் செல்வான். லக்ஷ்மணன்
ராமனுக்கு உதவியாளனாவான்.
கூனியின் கசப்பான விஷம் நிறைந்த வார்த்தைகளைக்கேட்டு கைகேயி மிக பயந்துவிட்டாள்.
உடல் வியர்த்து நடுங்கியது. அப்பொழுது கூனிக்கு பயம் வந்து விட்டது. கைகேயி இதயத்துடிப்பு நின்றுவிட்டால் ?!
எதிர்மாறாக நடந்துவிடும்.
கூனி கபடக்கதை களைக் கூறி கைகேயியை தைரியமாக இருக்கச்சொன்னாள்.
கைகேயிக்கு இந்த கூனியின் கபடநாடகம் பிடித்துவிட்டது.
அவள் கொக்கை அன்னமாக எண்ணி அவளைப் புகழ்ந்தாள்.
மந்தரையே!நீ சொல்வது சத்தியமே.எனது இடதுகண் தினந்தோறும் துடிக்கிறது. நான் இரவும் பகலும் தீய கனவுகளைக் காண்கிறேன். ஆனால் என் அறியாமையால் உன்னிடம் சொல்லவில்லை. இன்றுவரை நான் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. ஏன் எனக்கு கடவுள் சஹிக்கமுடியாத துன்பத்தைத் தருகிறார்?
நான் தாய்வீட்டில் சென்று வாழ்வேன். நான் உயிருள்ளவரை சக்களத்திக்கு அடிமை வேலை செய்யமாட்டேன். கடவுளே விரோதிக்கு அடிமை ஆக்கினால், அவர்களுக்கு வாழ்வதைவிட இறப்பதே மேல்.
என்று கைகேயி ப்லாம்பியதும் கூனி மீண்டும் கபட நாடகத்தைத் தொடர்ந்தாள்.
நீ ஏன் வீணாகப் புலம்புகிறாய்.உன்னுடைய நலன் அதிகமாகும். உனக்கு தீங்கு இழைத்தவர்களுக்கு தீங்கே உண்டாகும். நான் இந்த தீய்தைக்கேட்டதிளிருந்து பகலில் பசியில்லை. இரவில் தூக்கம் வரவில்லை.
நான் ஜோதிடர்களிடம் கேட்டேன். அவர்கள் கணக்கிட்டு பரதன் தான் அரசன் ஆவான் என்று சொன்னார்கள். இது சத்தியம். நான் உனக்கு வழி சொல்கிறேன். ராஜா உன் பணிவிடையால் உன் வசத்தில் இருக்கிறார். கேள். என்று கூனி சொன்னாள்.
கைகேயி சொன்னாள்--மந்தரை! நீ சொன்னால் நான் கிணற்றிலும் குதிப்பேன். மகனையும் கணவனையும் கூட விட்டுவிடுவேன். நீ என் துன்பத்தை அறிந்து அதிலிருந்து விடுபட என் நன்மைக்காகச் சொன்னால், நான் கட்டாயம் செய்வேன்.

No comments:
Post a Comment