ராமசரித மானஸ்-அயோத்யகாண்டம் -பதினொன்று
கைகேயி தசரதரிடம் சொன்னாள்---உயிரன்பரே !
என் மனதிற்குப் பிடித்த முதல் வரம் என் மகன் பரதனுக்கு ராஜாபிஷேகம் .
இரண்டாவது வரம் கைகூப்பி கேட்கிறேன் ,
என் மன விருப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.
தவசிகள் வேடத்தில் மிக வருத்தமான நிலையில் ராமன் பதினான்கு ஆண்டுகள் வரை காட்டில் வசிக்கவேண்டும்.
கைகேயியின் வரங்களைக் கேட்டு தசரதர் மிகவும் வருந்தினார். நிலவின் ஸ்பர்சத்தால் சக்கரவாகுப் பறவை
ஆற்றலாற்றுப் போனது போல் அவர் நடுங்கினார்.
கழுகு காடையின்மேல் பாய்ந்த நிலையானார்.
பனைமரத்தில் இடி விழுந்தது போல் ஆனார்.
எரிந்த நிலையில் கருத்தது போல் அவர் நிலைமாறியது.
கவலையே உடல்வடிவில் வந்தது போல் தலையில் கைவைத்து இருகண்களையும் மூடி சிந்திக்கத் தொடங்கினார். அவர் நினைத்தார் --என் மன விருப்பம் என்ற கற்பகமரம் பூத்துவிட்டது ஆனால் காய்த்து பழுக்கும் முன் கைகேயி என்ற யானை அதை வேரோடு பிரித்து எரிந்து விட்டது.
கைகேயி அயோத்தியாவையே பாழ்படுத்தி விட்டாள்.
அழிவுக்கு திடமான அஸ்திவாரம் போட்டுவிட்டாள்.
பெண்ணை நம்பி மோசம் போய்விட்டேன்.
யோகிக்கு பலன் கிடைக்கும் போது யோகியின் தவம்
கலைத்ததுபோல் ஆகிவிட்டது.
இவ்வாறு அரசன் மனதிற்குள்ளேயே வருந்திக்கொண்டிருந்தார்.
அரசனின் இந்த நிலை கண்டு தீய அறிவுள்ள கைகேயி மனதில் மிகவும் கோபம் அடைந்தாள்.
அவள் கேட்டாள்---பரதன் தங்கள் மகன் இல்லையா ?
நீங்கள் என்னை விலை கொடுத்தா வாங்கிக்கொண்டு வந்தீர்கள்? நான் உங்களை மணந்த மனைவி இல்லையா?
என்னுடைய சொற்கள் உங்களுக்கு அம்பு போல் தோன்றினால் , நீங்கள் சிந்தித்து பேசவில்லை. ?
முடியாது என்று சொல்லிவிடுங்கள். நீங்கள் ரகு குலத்தில்
வாக்குத் தவறாமைக்கு புகழ் பெற்றவர்.
நீங்கள் தான் வரம் அளிக்கிறேன் என்றீர்கள் .
இப்பொழுது தர வேண்டாம். உண்மையை விட்டு விட்டு உலகில் அவப் பெயர் பெறுங்கள்.
உண்மையைப் புகழ்ந்து வரம் தருகிறேன் என்றீர்கள் .
ராஜ சிபி ததிசி ,பலி போன்றவர்கள் தன் வாக்கு மாறக்கூடாது என்பதற்காக உடலையும் செல்வத்தையும்
தியாகம் செய்தனர். கைகேயி மிகவும் கசப்பான கடுமையான வார்த்தைகளை அள்ளி வீசினாள்.
தர்மத்தின் அச்சு தசரதர் தைரியத்தை உண்டாக்கி
கண்களைத் திறந்தார். பிறகு பெருமூச்சு விட்டு
என் நிலையை மிகவும் மோசமாக்கிவிட்டாய். இனிமேல்
நான் பிழைப்பது கடினம் என்றார்.

No comments:
Post a Comment