ராமசரித மானஸ்ப---அயோத்யகாண்டம்
---பக்கம் ஒன்பது
மிகவும் பலசாலியான இந்திரனையே
பயமில்லாமல் அரக்கர்களிடமிருந்து காத்தவர் தசரதர். அனைத்து அரசர்களும் அவரை எதிர்பார்த்துக்கொண்டிருப்பர்.
அதே அரசர் தசரதர் இன்று மிகவும் பயந்துகொண்டே தன் அன்பு ராணி கைகேயியிடம் சென்றார். இதுதான் காமதேவனின் பிரதாபம் . மகிமை.
திரிசூலம் ,ஈட்டி, கத்தி முதலியவற்றின் காயங்களை
சகித்துக்கொள்ளும் தசரதர், இன்று ரதிநாதர்,
காமதேவனின் பூக்களால் அடிக்கப்பட்டார்.
கைகேயியின் நிலை கண்டு அவருக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டது.
கைகேயி தரையில் படுத்திருந்தாள். பழைய தடிமனான துணி அணிந்திருந்தாள். உடலில் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழட்டி எரிந்திருந்தாள்.
அந்த துர்மதியாள் கைகேயியின் தோற்றம் அந்த தீய வேஷத்தில் எப்படி அழகாகத் தோன்றும் ? அவள் தோற்றம் எதிர்காலத்தின் விதவைக் கோலத்தின் அறிவுப்பு கொடுத்துக்கொண்டிருந்ததுபோலவே காட்சியளித்தது.
அரசர் அவளிடம் மிக மெதுவாக பாசமுடன் கேட்டாள்--என்னுயிரைவிட அன்பானவளே!
ஏன் கோவமாக இருக்கிறாய் ?
என்று அவள் உடலைத் தொடும்போது தட்டிவிட்டாள்.
கோவத்தில் சீரும் நாகம்போல் கொடூரமான பார்வை வீசினாள்.
இரண்டு வரங்கள் அந்த நாகத்தின் நாக்குகள் போலவும் இரண்டு வரங்களை வைத்திருந்தது பல் போலவும் ,
இப்பொழுது கடிப்பதற்கேற்ற இடத்தைத் தேடுவதுபோலவும் இருந்தன.
அரசர் தன் சாதுர்யத்தால் இதை காமதேவனின் விளையாட்டு என்றே அறிந்தார் என துளசிதாசர் சொல்கிறார்.
அவர் மிகவும் மென்மையான அன்பான குரலில் அடிக்கடி
கோவத்தின் காரணத்தைக் கேட்கிறார்.
அழகே!அழகுவிழி யே!குயில் போன்று இனிமையாக பேசுபவளே! யானையைப்போல் மெதுவாக ஆடி அசைந்து
நடப்பவளே! கோவத்தின் உண்மையான காரணத்தை சொல் என்றார் .
அன்பானவளே! உனக்கு யார் தீங்கு செய்தார்கள் ?
யாருக்கு இரண்டு தலைகள் உள்ளன?யமன் யாரைத் தன் உலகத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார்?
நீ சொன்னால் ஏழையை அரசன் ஆக்குவேன். அரசனை நாட்டை விட்டு வெளியேற்றுவேன் .
உன்னுடைய விரோதி தேவதையாக இருந்தாலும் சொல் ,
அவனைக் கொன்றுவிடுவேன். அப்பாவி மனிதர்களாக இருந்தால் புழு பூச்சி போன்று நசுக்கிவிடுவேன்.
அழகியே! உனக்கு நன்றாகத்தெரியும் ,என்னுடைய மனம் உன்னுடைய முகம் என்ற நிலவின் சக்கரவாஹப் பறவை.
அன்பானவளே!என்னுடைய நாட்டு மக்கள், குடும்பம் ,சர்வ சம்பத்துக்கள் மட்டுமல்ல என் உயிரும் உன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. நான் உன்னிடம் எதுவும் கபடமோ ஏமாற்றமோ செய்யவில்லை . இது ராமன் மீது ஆணை.
நீ சிரித்து உன் மனம் விரும்புவதைக் கேள். உன் அழகான அங்கங்களை நகைகளால் அலங்கரித்துக்கொள். மனதில் நல்லது கெட்டதை சிந்தித்துப்பார். அன்பே! சீக்கிரம் இந்த தீய வேஷத்தை மாற்றிக்கொள்,
இதைக்கேட்டதும் துர்மதியாள் கைகேயி சிரித்துக்கொண்டே எழுந்தாள். நகைகள் அணிந்து கொண்டாள். அவள் நடவடிக்கை வேட்டைக்காரி மானைப் பார்த்து வலை தயாரிப்பதுபோல் இருந்தது.

No comments:
Post a Comment